Lifestyle

உங்கள் உறவில் சந்தேக விரிசல்கள் விழுகிறதா? அப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன?

Deepa Lakshmi  |  Dec 27, 2018
உங்கள் உறவில் சந்தேக விரிசல்கள் விழுகிறதா? அப்போது நீங்கள் செய்ய வேண்டியது என்னென்ன?

எப்போது பார்த்தாலும் சந்தேகம் என்றால் அது பெண்பாலினத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் பெண்களை விடவும் ஆண்கள் அதிகமாகவே சந்தேகப்படுவார்கள் ஆனால் அது ரகசியமாக இருப்பதால் உங்களால் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடியாது.            

சாதாரணமாக நண்பர்களுடன் பேசுவதில் ஆரம்பித்து வெளியே செல்வது ஒன்றாக உண்பது வரை பல்வேறு இடங்களில் இந்த சந்தேகம் அவர்களுக்கு ஏற்படலாம். இதற்கான முதல் காரணம் அவர்கள் மீதான தன்னம்பிக்கையின்மை இரண்டாவது காரணம் பாதுகாப்பு.

இப்படி ஒரு சிக்கல் உங்கள் வாழ்வில் இருந்தால் கீழ்கண்ட முயற்சிகளை முயன்று பாருங்கள். நிச்சயம் சந்தேகத்தினால் ஏற்பட்ட குழப்பங்கள் மாறி உறவில் தெளிவு ஏற்படும்.     

தாம்பத்ய வாழ்க்கை எப்போது அதிகம் பாதிக்கப்படும்!

பேசி புரிய வைத்தல்

இப்படி ஒரு சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்ததும் பெண்கள் முதலில் செய்ய வேண்டியது சரியான சந்தர்ப்பத்தில் இது பற்றிய புரிதலை உங்கள் ப்ரியமானவருக்கு உணர்த்த வேண்டும்.

உங்கள் நண்பருக்கும் உங்களுக்கும் இடையில் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்பது பற்றியும் உங்கள் நண்பனின் நல்ல குணங்கள் மற்றும் நடத்தை பற்றியும் நீங்கள் அவருக்கு புரியவைக்க வேண்டியது அவசியம். உங்கள் உறவில் அவருக்குள்ள பாதுகாப்பின்மை உணர்வு இதன் மூலம் நீங்கும்.         

பொய் சொல்வதை தவிருங்கள்

உங்கள் காதலருக்கு தெரியாமல் அவர் சந்தேகப்படுவார் கோபப்படுவார் என்பது போன்ற காரணங்களால் அவரிடம் பொய் சொல்லி விட்டு வெளியே செல்லாதீர்கள். உண்மை வெளிப்படும்போது உங்கள் உறவை நீங்கள் இழக்கவும் நேரிடலாம். சாதாரண பாதுகாப்பின்மை உணர்வு சந்தேகமாக மாறுவது இந்த இடத்தில்தான். ஆகவே பொய் கூறுவதை தவிர்க்கவும்.

இணைந்தே செல்லுங்கள்

உங்கள் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்கையில் முடிந்தவரை உங்கள் காதலரை உடன் அழைத்து கொள்ளுங்கள். உங்கள் நட்பின் மீதான நம்பிக்கை அவருக்கு அப்போது அதிகரிக்கும். மேலும் உங்கள் நண்பரும் உங்கள் காதலருடன் இனைந்து பழகும் வாய்ப்பும் ஏற்படும். அதனால் பல்வேறு சிக்கல்கள் நீங்கி உறவு தெளிவடையும்.

அதுமட்டும் இல்லாமல் உங்கள் காதலர் அவரது தோழிகளுடன் வெளியே செல்லும்போதும் அவர் இதனை பின்பற்றுவார். இதன் மூலம் பரஸ்பர புரிதல்களும் விட்டு கொடுத்தல்களும் அதிகரிக்கும். உறவு செம்மையாகும்.

உடனடி தீர்வுகள்

உங்களுக்கும் உங்கள் காதலருக்கு இதனால் சண்டை அல்லது மௌனமாய் பேசாமல் இருப்பது போன்ற நிலைமை ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக இதனைப்பற்றி முகத்திற்கு நேராக கேட்டோ அல்லது மென்மையாக நிலைமையை புரியவைத்து குறுஞ்செய்தி அனுப்பியோ நீங்கள் இந்த சண்டையை சரி செய்ய வேண்டும். முடிந்த வரை கண்களை பார்த்து பேசுவதால் பல்வேறு நம்பிக்கையின்மை பிரச்னைகளை சமாளிக்கலாம்.

உங்கள் ரகசியம் உங்களோடு

உங்களுக்கும் உங்கள் காதலருக்கு இடையே இருக்கும் இந்த சிக்கல்களை வெளியே நண்பர்களிடம் பகிர வேண்டாம். அது உங்கள் காதலரை அவமதிப்பது போலாகும். முதலில் நீங்கள் இருவரும் புரிந்து கொள்ள முயற்சித்தால் மற்ற படிகள் இதற்கு தேவைப்படாது.

நம்மை உளவியல் ரீதியாக ஆச்சர்யப்படவைக்கும் சில வித்யாசமான உண்மைகள்

உரிமையை விட்டு கொடுக்க வேண்டாம்.

உங்களுக்கு யாருடன் நட்பு கொள்ள வேண்டும் வேண்டாம் என்பது பற்றிய முடிவுகள் எல்லாம் அவரை எடுக்க விடாதீர்கள். உங்கள் நட்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் அதில் உறுதியாக இருப்பது முக்கியம். அல்லது அதில் தவறு இருப்பதாக உங்களுக்கு தோன்றினால் ஒழிய அதனை மாற்றி கொள்ளாதீர்கள்.

உங்கள் காதலருக்கு விருப்பம் இல்லை என்பதற்காக பல ஆண்டுகள் பழகிய நட்பை தியாகம் செய்து விட தேவையில்லை. இந்த நட்பினால் உங்கள் அவர் பாதிக்கப்படுகிறார் என்றால் மட்டும் அவருக்கு தேவையான உதவிகள் செய்து அவரை பாதுகாப்பாக உணரவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

நட்பென்பது அனைவருக்கும் அவசியமானது. ஆழமான உறவும் கூட. ஆகவே நட்பின் பலத்தை காதலின் பலவீனம் வென்று விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் எக்ஸ் பற்றிய உண்மைகளை உங்கள் துணையிடம் சொல்வது நல்லதா?

 

relationship

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Lifestyle