காலம் மாறும்போது இயற்கையின் நியதிகளை மாறத்தான் செய்கின்றன. காதலும் கூட இதில் தப்பிக்கவில்லை. காதலை சொல்வதும் பெண்களைக் கையாள்வதும் ஆண்களின் (men) தொழில் என்கிற காலம் மலையேறி விட்டது. இப்போது பெண்களும் தங்கள் உணர்வுகளை தைரியமாக சொல்வதும் காதலை வெளிப்படுத்த முன்வருவதும் நடந்து கொண்டிருக்கிறது.
ஆண்கள் கம்பீரமானவர்கள் என்கிற மாயை அகன்று அவர்களின் பொறுப்பின்மை மற்றும் பல இன்மைகள் வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும் ஆணை சகித்துக் கொண்டு வாழும் போக்கு இன்னும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.
நம் மனதிற்கு பிடித்தமான ஆணுடன் வாழ்வதற்காக சில விஷயங்களை பொறுத்துக் கொள்ளலாம் என்றாலும் பெண்கள் சில விஷயங்களுக்காக ஆண்களிடம் கெஞ்ச கூடாது. அவை என்னென்ன மற்றும் ஏன் என்பதையும் பார்க்கலாம்.
Youtube
உங்களை மரியாதையாக (respect) நடத்த வேண்டியது ஒரு ஆணின் கடமையாகும். உங்கள் மரியாதைக்காக நீங்கள் என்றும் ஆணிடம் கெஞ்ச வேண்டாம். அப்படி செய்தால் அவர்கள் வலிமையானவர் போன்ற மாயையை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்றுதான் அர்த்தம். நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படி நடந்து கொள்ள வேண்டியதும் முக்கியம்.
உங்கள் நேசத்திற்குரியவர் (love) அவருடைய காதலை வெளிப்படுத்த சில அர்த்தமுள்ள செய்கைகளை கூட செய்ய சோம்பேறித்தனம்பட்டால் அப்படியான நபர் உங்களுக்கு அவசியமா என்று யோசியுங்கள். உங்களுக்கு அனுப்பும் மெஸேஜ்களில் சுயத்தன்மை இல்லாமல் பார்வேடட் மெஸேஜ்களை அனுப்புவது மற்றும் உங்கள் மெஸேஜ்களை பார்த்தும் பதிலளிக்காமல் இருப்பது போன்ற அவரது செய்கைகள் வரவேற்க தக்கது அல்ல. இதற்காக நீங்கள் கெஞ்சுவது உங்கள் மீதான மரியாதையை கீழாக மாற்றும்.
Youtube
உங்கள் தோற்றத்தில் நீங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் நிச்சயம் உங்கள் நெஞ்சம் கவர்ந்த ஆணிற்காகத்தான். இல்லையா. அப்படி இருக்கும்போது அவற்றை பார்க்க கூட நேரம் இல்லாதவரோ அல்லது பார்த்தும் பாராட்டாமல் இருப்பவரோ உங்கள் காதலன் என்றால் நீங்கள் கொஞ்சம் யோசித்து காதலை கொண்டு போவது நல்லது. தங்கள் காதலியை பாராட்டுவது அவள் மீது தான் வைத்திருக்கும் காதலின் ஒருவித வெளிப்பாடுதான் என்பது ஆண்கள் எண்ணம். அதற்கு கூட நீங்கள் தகுதி இல்லாதவர் போல அவர் நடத்தினால் அதற்காக கெஞ்சாதீர்கள்.
உலகில் எந்த மூலையில் வாழும் காதலனாக இருந்தாலும் சரி. அவன் ஏழையோ பணக்காரனோ யாராக இருந்தாலும் அவனது காதலிக்குதான் அவன் முன்னுரிமை (priority) கொடுக்க வேண்டும். அதை விடுத்து அதற்காக நீங்கள் அவரிடம் கெஞ்சும்படி அவர் நடந்து கொள்கிறார் என்றால் அவர் உங்களோடு இருக்க வேண்டுமா என்று யோசியுங்கள். அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவரோ அதை போலவே நீங்களும் அவருக்கு முக்கியம் என்கிற எண்ணம் இல்லாதவர் பெரும் சுயநலவாதியாகவே இருப்பார்.
Youtube
தன்னுடைய எக்ஸ் மீதான காதலை இன்னமும் மறக்காமல் இருப்பவர் என்றால் நீங்கள் நிச்சயம் யோசியுங்கள். தன்னுடைய கடந்த கால காதலியை மறக்காமல் இருப்பவர் உங்கள் செய்கைகளை முன்னாள் காதலியுடன் ரகசியமாக ஒப்பிடுவதும் அதன்பின்னர் அந்த கோபத்தை உங்களிடம் காட்டுவதும் தொடர்கதையாக மாறும். உங்களை மட்டுமே நேசிக்க வேண்டும் என்கிற கெஞ்சல் இங்கே எடுபடாது.
உங்கள் காதலரிடம் நீங்கள் கேட்டு பெறக்கூடாத இன்னொரு விஷயம் நேர்மை. இதனை அவராகவே தான் செய்ய வேண்டும். சொல்லப்போனால் நேர்மையாக இருப்பது அவருடைய இயல்பாக இருக்க வேண்டும். மலிவான மனிதர்களிடம் இந்த குணம் இருக்கவே இருக்காது. சுயநலம் நச்சுத்தன்மை கொண்டவர்கள் ஒருபோதும் நேர்மையாக இருக்க மாட்டார்கள். உங்கள் நேசத்துரியவர் உங்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும். உங்களை ஒருமுறை ஏமாற்றும் காதலருக்கு மறுமுறை வாய்ப்பு கொடுக்காதீர்கள். இந்த முறை இன்னும் அதிக கவனமாக ஏமாற்ற முயற்சிப்பார்கள் தவிர உங்களிடம் உண்மையாக இருக்க அவர்களால் முடியவே முடியாது.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!அறிமுகமாகிறது
#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!