ஹேர் டை (Hair dye) என்கிற பெயரே பலருக்கு பயத்தை வரவழைக்கிறது. காரணம் அதில் கலக்கப்படும் ரசாயனங்களால் உங்கள் உடலில் ஏற்படும் பல பக்க விளைவுகள்தான். தலை என்பது உங்கள் உடலின் மிக முக்கியமான பாகம். தலைமை செயலகம் என்று சுஜாதா எழுதிய புத்தகம் நமது மூளையை பற்றியதுதான்.
நமது மூளை மிகப்பெரிய அற்புதம் கொண்ட வடிவமைப்பு. கணினி வடிவமைப்பை விடவும் பல நுண்ணிய செயல்களை ஆற்ற கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் நமது மூளையின் மொத்த சதவிகிதத்தில் வெறும் 12 முதல் 20 சதவிகிதம் வரையே மனிதர்களால் பயன்படுத்த முடிகிறது.
இப்படியான அற்புதங்கள் கொண்ட இடமான நமது தலையில் நமது தலைமுடிகள் நரைத்தல் என்கிற வெளிக்காரணிகளுக்காக உள்ளிருக்கும் உறுப்புகளை நாம் சிதைப்பது கூடாது. சரும புற்று நோய் முதல் பல விஷயங்களுக்கு காரணம் நாம் பயன்படுத்தும் ஹேர் டை யில் இருக்கும் அம்மோனியா எனும் நச்சு பொருள்தான்.
நரைமுடி உள்ளவர்கள் பல ஹேர் டை உபயோகித்து பலன் இல்லாமல் இருக்கலாம்.முடி உதிர்வுக்கு இருக்கலாம். காரணம் அதில் அதிகம் கெமிக்கல் கலந்து இருப்பதால் முடிகள் கொட்ட ஆரம்பிக்கும். ஒரு முறை உபயோகித்தாலும் கூட பிறகு மீண்டும் வரும். ஆனால் இந்த இயற்கை ஹேர்டையை தடவினால் மீண்டும் நரைமுடி வராது. மேலும் உடலுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
ஆகவே நமது அழகை ரசாயன கலப்பில்லாமல் இயற்கை முறையில் திரும்ப பெற வழி இருக்கும்போது நீங்கள் அனாவசியமாக ஹேர் டை பயன்படுத்தி ஏன் பக்கவிளைவுகளை ஏற்படுத்தி கொள்கிறீர்கள். இயற்கையான முறையில் உங்கள் கைகளாலேயே ரசாயனக் கலப்பற்ற ஹேர் டை தயாரியுங்கள். உபயோகித்து உங்கள் ஆரோக்கியத்தை காப்பாற்றி அழகையும் மிளிர வையுங்கள்.
ரசாயனக் கலப்பற்ற இயற்கை ஹேர் டை தயாரிக்க இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறையில் நெல்லிக்காய்களை பயன்படுத்தி ஹேர் டை தயாரிக்க முடியும்.
முதலில் காய்ந்த நெல்லிக்காய் 200கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். காய்ந்த நெல்லிக்காய் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இவற்றை ஒரு இரும்பு கடாயில் வைத்து தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் ஊற்றி அதில் இந்த காய்ந்த நெல்லிக்காயை போட்டு வதக்கவேண்டும். நெல்லிக்காயை நன்றாக கருகும் வரை வதக்கவேண்டும். எல்லா நெல்லிக்காயும் கருப்பாக மாறி விட்ட பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அப்படியே கொதிக்கவிடவேண்டும். அது கொதித்து அரைகப் தண்ணீர் வந்தவுடன் இறக்கி ஆறவைக்கவேண்டும்.
ஆற வைத்து இறக்கிய நெல்லிவற்றலை மிக்சியில் போட்டு அரைக்கவேண்டும். இதை பிரிட்ஜ்ஜில் வைத்து பத்து நாட்கள் வரை உபயோகிக்கலாம். இதை தொடர்ந்து மூன்று நாள் தலையில் தேய்க்கவேண்டும். எண்ணெய் இல்லாத தலைமுடியில் தேய்ப்பது அவசியம். இந்த கலவை முடியில் மட்டும் படும்படி தேய்க்கவேண்டும். மூன்றாம்நாள் ஷாம்பூ போட்டு தலையை அலசிவிடவும். இப்படி செய்வதின் மூலம் நரை முடி கருப்பாக மாறி மீண்டும் நரைமுடி வராது.
ரசாயனக் கலவை அற்ற ஹேர் டை தயாரிப்பு இரண்டாவது முறையில் மருதாணி மற்றும் அவுரி இலை பொடிகள் பயன்படுத்த வேண்டும்.
அவுரி பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாகவே இது கருமை நிறத்தை தரும். இதனை முடிகேற்ற அளவில் எடுத்து, அதனுடன் சம அளவு மருதாணிபொடி அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமையாக மாறும்.
இந்த ரசாயன கலப்பற்ற இயற்கை ஹேர் டை முறைகள் ஒவ்வொருவரின் உடல்வாகுபடி பல நாட்கள் நிலைத்திருக்கும். பொதுவாக கூந்தல் இளநரையை தடுக்க உணவு உண்ணும் வழக்கத்தில் கவனம் வேண்டும். தினமும் இரண்டு முட்டைகள் சாப்பிட்டு வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம். அதைப்போலவே வஞ்சிரம் மீன் போன்ற ஒமேகா 3 கொண்ட உணவுகளை உண்டு வருவதால் இளநரை கட்டுப்படுத்தப்படும்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Ayurveda
தொட்டுப் பார்க்க சொல்லும் பட்டுப்போன்ற முகம் வேண்டுபவர்களுக்கு.. வெண்ணெய் பேக் போதுமானது!
Deepa Lakshmi
அழகை அதிகரிக்கும் ஆலோவீராவின் அற்புதங்கள்! பட்ஜெட் விலையில் உங்கள் அழகை மேம்படுத்தலாம்!
Deepa Lakshmi