Beauty

பேஷியலின் வகைகள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பேஷியல் செய்யும் வழிமுறைகள்!

Swathi Subramanian  |  Oct 22, 2019
பேஷியலின் வகைகள் மற்றும் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பேஷியல் செய்யும் வழிமுறைகள்!

பெண்கள் தங்கள் முகப்பொலிவை மேம்படுத்துவதிலும், அழகுபடுத்துவதிலும் தான் அலாதி இன்பம் அடைகின்றனர். பழங்காலம் தொட்டே பெண்கள் ஏதேனும் ஓர் முறையில் முகப்பொலிவை கூட்டுவது என்றவாறு சிறப்புமிகு பணிகளை செய்து வந்தனர். முன்னர் முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று கிராம வீதிகளில் கூட உள்ளன. 

அந்த அளவிற்கு அழகு நிலையங்களில் அணிவரிசை என்பது அதிகரித்துள்ளது. அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் பேஷியல் என்பது உண்மையில் முகச்சருமங்களுக்கான சிகிச்சை முறை தான். பேஷியல் செய்துகொண்டால் சருமத்தின் இறந்த செல்கள் உதிர்ந்து, முகம் புத்துணர்வுடனும் பளபளப்புடன் இருக்கும். 

பேஷியல் வகைகள் (types of facial)

பேஷியல் முறையில் பல்வேறு வகைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு சிறப்பம்சம் உள்ளன. அத்தகைய பேஷியல் வகைகளை பற்றி நாம் இங்கு விரிவாக அறிந்துகொள்வோம்.

வழக்கமான பேஷியல் (Regular facial )

வழக்கமான பேசியல்  என்பது முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றி முகத்திற்கு பொலிவை தரும் இயல்பான வகையாகும். இந்த பேஷியல் செய்வதால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள், மாசுக்கள் போன்றவை அகன்று புத்துணர்ச்சியாகும். எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம். இதன் பின்னர் சருமத்திற்கு மசாஜ் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தோலின் ஆரோக்கியம் மற்றும் பொலிவு மேம்படும்.

pixabay

முகப்பரு குறைப்பு பேஷியல் (Acne reduction facial )

முகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ளவர்களுக்கு இந்த பேஷியல் சரியான பொருத்தமாகும். இந்த முறையில் முதலில் சருமம் சுத்தம் செய்யப்பட்ட முகத்தின் மீது கிளைகோலிக் ஆசிட் கொண்டு மசாஜ் செய்யப்பட்டும். இதன் மூலம் முகப்பருக்கள் உள் செல்லுமாறு வழிவகுக்கப்பட்டு அதன்மீது ஆன்டி-பேக்டிரியல் மாஸ்க் போடப்படும். இந்த பேஷியலில் மசாஜ் தேவையில்லை. முகப்பரு அதிகம் இருப்பதால் அவதிப்படுபவர்கள் வாரம் இரண்டு முறை இந்த பேஷியலை செய்வதால் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க – இருமல், சளி மற்றும் காய்ச்சலை விரைவாக அகற்ற சில எளிய மற்றும் பயனுள்ள வழிகள் !

பழ பேஷியல் (Fruit facial )

பழங்கள் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் மிகவும் சிறப்பானது. பழங்களை கொண்டு பேஷியல் செய்து நமது அழகை பாதுகாக்கலாம்.  பழ பேஷியலிலும் பல்வேறு வகைகள் உள்ளன. வாழைப்பழ ஃபேஷியல், மாம்பழ ஃபேஷியல், ஸ்ட்ராபெர்ரி ஃபேஷியல், ஆப்பிள் ஃபேஷியல், அவகேடோ ஃபேஷியல், ஆரஞ்சு ஃபேஷியல், எலுமிச்சை ஃபேஷியல், பப்பாளி ஃபேஷியல், பீச் ஃபேஷியல் என பலவகையான பழங்களை கொண்டு பேஷியல் செய்யப்படுகிறது. இதனால் சருமம் மினுமினுக்கும். 

அரோமாதெரபி பேஷியல் (Aromatherapy facial )

அரோமாதெரபி பேஷியல் என்பது சிறப்புமிகு நறுமண எண்ணெய்கள் மூலம் செய்யப்படும் பேஷியல் முறையாகும். இந்த பேஷியலை செய்வதால் தோல் பகுதியில் சேர்ந்துள்ள கழிவுகள், நச்சுகள் வெளியேறி தோலின் இயற்கை பண்புகள் மேம்படுத்த செய்ய உதவிபுரிகிறது. இந்த பேஷியல் முறையில் பயன்படும் பூவிதழ்கள், செடிகளின் தண்டு, இலை என அனைத்திலிருந்தும் இயற்கை முறையில் எடுக்கப்படும் எண்ணெய்களின் வாசம் சருமத்தை புத்துணர்ச்சியாக்கும். 

pixabay

வைன் பேஷியல் (Wine facial )

வெயிலினால் முகம் கறுத்து காணப்படுபவர்கள் மற்றும் சருமத்தின் உண்மையான நிறம் மங்கி சருமம் பொலிவிழந்து இருக்கிறது என கவலைப்படுபவர்களுக்கு ஒயின் ஃபேஷியல் பெஸ்ட் சாய்ஸ். முகத்தை கிளென்சிங், டோனிங் செய்ததும் வழக்கமான ஃபேஷியல் போன்றே ஸ்க்ரப்பர், மசாஜ் செய்யப்பட்டு சுத்தம் செய்யப்படும். வழக்கமான ஃபேஷியலைவிட ஒயின் ஃபேஷியல் கூடுதல் நிறம் மற்றும் உடனடி அழகைக் கொடுக்கும். உடல் பொலிவுக்கும், உடலில் உள்ள சுருக்கங்கள் நீங்கவும் ஒயின் தெரப்பி சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. 

வயது எதிர்ப்பு பேஷியல் (Anti aging facial )

30 வயதை நெருங்கும்போது முகம் தன்னுடைய இயற்கையான அழகை இழக்க நேரிடுகிறது. இத்தகைய நிகழ்வை தடுத்து முகத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்க இந்த பேஷியல் துணை புரிகிறது. இந்த பேஷியலை வாரம் இரண்டு முறை செய்வதால் உங்கள் சருமம் பொலிவை பெறுகிறது. மேலும் உங்கள் அழகை மெருகேற்றி வயது முதிர்வை தடுக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சரும துளைகளில் உள்ள அழுக்கை போக்க உதவுகிறது. இதனால் வயதும் குறைந்தது போல் தோன்றும்.

மேலும் படிக்க – கைகளுக்கு அழகு மட்டுமல்ல ஆரோக்கியமும் தரும் மெனிக்யூர் : வீட்டில் இருந்தபடியே செய்யலாம்!

தங்க பேஷியல் (Gold facial )

முகச்சருமத்தினை இளமை தன்மையுடன் வைத்துக்கொள்ள 24 கேரட் தங்க பேஷியல் உதவுகிறது. இந்த வகை பேஷியலில் கிளென்சிங் மில்க் உபயோகித்து  முகத்தை சுத்தப்படுத்திய பின்னர் மசாஜ் செய்துவிட்டு கோல்ட்ஸ்க்ரப் கொண்டு ஸ்க்ரப் செய்யப்படும். கடைசியாக 24 கேரட் என சொல்லப்படுகிற கோல்ட் ஷீட்டை முகத்தின் மேலே ஒட்டி கோல்ட் ஜெல் கொண்டு மசாஜ் செய்த பிறகு அது சருமத்தின் உள்ளே ஊடுருவிய பிறகே துடைத்து எடுக்கப்படுகிறது. இது சருமத்தில் இருக்கும் செல்களை மறுஉருவாக்கம் செய்யவும், சருமத்தை பொலிவாக்கவும் உதவுகிறது.  

pixabay

கொலாஜன் பேஷியல் (collagen facial )

என்றும் இளமையுடன் இருக்க கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். இது பலதரப்பட்ட பேஷியல் ஒன்றிணைந்தது. கிளினிங், லிம்போதிங் டிரைனேஜ் மசாஜ், ஹீட்டாங் மினரல், பாராப்பீன் மாஸ்க் மேல் கோலகன் ஷீட் மூடப்பட்டு செய்யப்படும் பேஷியல். இந்த பேஷியல் தசையை இறுக செய்து தோலுக்கு ஊட்டச்சத்தை கொடுக்கக் கூடியது. முக்கியமாக  சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்க இந்த பேஷியல் உதவுகிறது. கொலாஜன் மாஸ்க் முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

வைர பேஷியல் (Diamond facial )

பண்டைய காலத்தில் நவரத்தின கற்களின் பொடிகளை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்தி வந்தனர். அந்த அடிப்படையில் புதுமையை புகுத்தி ஜுவல் ஃபேஷியல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முத்து, வைரம், டர்காய்ஸ், பெரிடாட், ரோஸ் க்வார்ட்ஸ் என ஐந்து நவரத்தின கற்களின் துகள்கள் கொண்டு இந்த ஃபேஷியல் கிட்டை தயார் செய்து பயன்படுத்துகின்றனர். இந்த வகை பேஷியலில் மாஸ்கிற்கு பிறகு சீரம் கொடுப்பதால் மேலும் சருமத்தை பளபளப்பாக்கும். வைரம் கொலாஜெனை சீராக்கும்.

ஃபாராப்பின் பேஷியல் (Paraffin Facial )

ஃபாராப்பின் அடிப்படையாக கொண்ட முகப்பூச்சு பூசப்பட்டு செய்யப்படும் பேஷியல் இதன் மூலம் தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் வயதான தோற்றத்தை நீக்குகிறது. இந்த பேஷியல் மூலம் பிரகாசம் வீசும் மென்மையான சருமம் கிடைக்கும்.இது தொய்வடைந்த சருமத்திற்கு ஏற்றதாகும். இதனை பேஸ் லிப்ட் என்றும் கூறுவர். இதன்பின் சருமம் நிறத்துடன் மற்றும் நிலைத்த தன்மையுடன் காணப்படும்.

    மேலும் படிக்க – ஆஹா! வேண்டாத மேக்கப் பொருட்களை வைத்து இத்தனை பயனுள்ள பொருட்களை செய்யலாமா?!

இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே பேஷியல் செய்வது எப்படி (How to do Facial at home using natural ingredients )

பேஷியல் செய்ய நேரம் மற்றும் பணம் ஒதுக்கி பார்லரில் சென்று தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே எளிமையாகவும், பாதுகாப்பான முறையிலும் பேஷியல் செய்வது எப்படி என்று இங்கு காண்போம்.

தூய்மைப்படுத்தல் (Cleanse )

முதலில் சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து சருமத்தில் அப்ளை செய்து உலர விடவேண்டும். கழுத்திலிருந்து முகம் வரை தடவ வேண்டும். பின்னர் பஞ்சை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். உலர்ந்த சருமம் இருப்பவர்கள் தேனை அப்ளை செய்து குளிர்ந்த நீரில் கழுவலாம். இப்படி செய்வதால் சருமத்தில் இருக்கும் தூசு, மாசுக்கள் நீங்கி சருமம் தூய்மையடையும். 

pixabay

மசாஜ் (Exflolite )

பேஷியலில் மசாஜ் முக்கியமான படியாகும். மசாஜ் செய்வதால் உங்கள் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிகிறது. மேலும் சருமத்தில் இருக்கும் துளைகளை அடைத்து சருமத்தை மேம்படுத்துகிறது. இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தை மசாஜ் செய்ய முடியும். ஒரு ஸ்பூன் பால் பவுடருடன், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மசாஜ் செய்யலாம்.  தக்காளி, பழங்கள் போன்றவற்றை கொண்டும் மசாஜ் செய்யலாம். 


அதன் பின்னர் ரவையை தயிரில் ஊறவைத்து  ஸ்க்ரப்பிங் செய்யலாம். அல்லது அரிசி மாவுடன், தக்காளி கூழ், எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப் செய்யலாம். இதனால் சருமம் ஆரோக்கியமான அடுக்குகளை வெளிப்படுத்தி முகத்தை உடனடியாக பிரகாசிக்க உதவுகிறது.  கிளிசரினுடன் பாதாம், கற்றாழை கூல் கலந்தும் ஸ்க்ரப் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.

நீராவி பிடித்தல் (Steam )

வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய மிதமான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சூடான தண்ணீரை நிரப்பி, அதில்  ரோஸ்மேரி எண்ணெய் கலந்து 10 – 15 நிமிடங்கள் ஆவி பிடித்து பின்னர் சுத்தமான டவலை கொண்டு முகத்தை துடைக்க வேண்டும். இப்படி செய்வதால் முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும், கிருமியையும் அகற்றி புதிய செல்கள் உருவாகும். 

பேஸ் மாஸ்க் (Apply face mask )

நீராவி பிடித்த பின்னர் சருமத்திற்கு பேக் போட வேண்டும். முகப்பருக்களால் ஏற்படும் குழியை சரிசெய்ய கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ் பேக்காகப் போட்டு முகம் கழுவலாம். சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் எலுமிச்சை சாறை உபயோகிக்க கூடாது. அது எரிச்சலை உண்டாக்கும். அதற்குப் பதிலாக ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். மிகவும் வறண்ட சருமம் உடையவர்கள் அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ் பேக் போட்டு முகம் கழுவுங்கள். 

pixabay

டோனர் (toning)

உங்கள் சரும துளைகளை மூடும் போது மீதமுள்ள அழுக்குகளை அகற்ற டோனிங் முறைகள் உதவுகின்றன. டோனர் உங்கள் சருமத்தை நீரேற்றத்திற்கு அதிக வரவேற்பை பெற உதவுகிறது. டோனிங் முறையில் வெள்ளரிக்காய், ரோஜா பூக்கள் இதழ் போற்றவற்றை கூழ் செய்து நீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இந்த நீரை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு முகத்தில் அப்ளை செய்து உலர விட்டு கழுவ வேண்டும். இதனால் சருமம் புத்துணர்ச்சியாகும்.

ஈரப்பதமூட்டல் (Moisturize )

சருமத்தின் நீடித்த பிரகாசத்திற்கு ஈரப்பதம் அவசியம். முகத்தில் தயிர் அப்ளை செய்யலாம். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். இதனை ‘இயற்கை மாய்ஸ்சரைசர்’ என்று சொல்லாம். வயதான தோற்றத்தை மறைத்து, இளமையை தக்கவைக்கும் ஆன்டிஏஜிங் பொருள் இருப்பதால் சருமம் பொலிவாகும். மாய்ஸ்சரைசர் உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது மற்றும் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. 

பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் (benefits of facial)

pixabay

பேஷியல் செய்யும்போது கவனிக்க வேண்டியவைகள் (Tips And Precautions To Consider While Doing A Facial)

pixabay

கேள்வி பதில்கள் (FAQ’s)

பேஷியல் செய்வதால் சருமத்தில் என்ன நடக்கிறது? (What does a facial do for you?)

பேஷியல் என்பது சருமத்திற்கு அளிக்கும் பல படியிலான சிகிச்சையாகும். இது உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். பேஷியல் செய்வதால் சருமத்தை சுத்தப்படுத்தி தெளிவான, நன்கு நீரேற்றப்பட்ட நிறத்தை ஊக்குவிக்கிறது. மேலும் உங்கள் சருமம் இளமையாக இருக்க உதவும். 

பேஷியல் செய்வதால் உண்டாகும் பக்க விளைவுகள்? (What is the side effect of facial?)

முக அழகு சிகிச்சையில் பேஷியல் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தாலும் இதிலும் சில பக்க விளைவுகள் இருக்கலாம். எரித்மா மற்றும் எடிமா போன்ற சிக்கல்கள், தோல் அழற்சி மற்றும் மூன்றில் ஒரு பங்கு நபர்களுக்கு முகப்பரு பிரச்னைகளும் உண்டாக வாய்ப்புள்ளது.

pixabay

பேஷியல் செய்வது முகத்திற்கு நல்லதா? (Is facial good for your face?)

ஆம். பேஷியல் செய்வதால்  சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. தோல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், இளமையை தக்க வைத்து கொள்ளவும், மிருதுவான சருமத்தையும் வழங்கவும் பேஷியல் உதவும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty