Lifestyle

சுவையான நாவூரும் விதவிதமான கனவாய் மீன் ரெசிபி!

Mohana Priya  |  May 14, 2019
சுவையான நாவூரும் விதவிதமான கனவாய் மீன் ரெசிபி!

மீன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவாக தான் இருக்கும். யாருக்கு தான் மீன் பிடிக்காது. ஒரே வகை மீனை சாப்பிட்டு நம்மில் அனேகருக்கு மிகவும் போர் அடித்திருக்கும். அப்படி நினைப்பவர்கள் இந்த கனவாய்(cuttle) மீனை ட்ரை பண்ணி பார்க்கலாம். இது மிகவும் எளிமையானதும் சீக்கிரம் செய்யக்கூடியதாகவும் இருக்கின்றது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். பயமின்றி சாப்பிடலாம். குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பார்கள்.

இஞ்சி விழுது – 2 மேசைகரண்டி
பூண்டு விழுது – 2 மேசைகரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 15
தக்காளிப் பழம் – 1
எண்ணெய் – 2 மேசைகரண்டி
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
பெருஞ்சீரகம் – அரை ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

குறிப்பு: இதனை ஒரு வார விடுமுறையில், சனிக்கிழமைகளில் செய்து சாப்பிடுங்கள், காரணம் சிலருக்கு கனவாய்(cuttle) சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறு ஏற்படுமாம்.

வெயிலால் ஏற்படும் வரண்ட சருமம் சரி செய்வதற்கான எளிய முறைகள்!

பெஃப் தாமுவின் கனவாய்(cuttle)ரெசிபி

உள்குத்து’ என்ற படத்தில் மீனவர்கள் சங்கத் தலைவரா நடிச்சிக்கிட்டு இருக்கேன். நாகர்கோவிலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ‘முட்டம்’ என்ற இடத்தில் படபிடிப்பு நடக்குது. ஒரு நாள் படபிடிப்பின் போது, அங்கிருந்த மீனவ மக்கள், எனக்கு மீன் குழம்பு, கனவாய்(cuttle)மீன் ஃபிரை, கிரேவி, கருவாடு, மாசி பொடி எல்லாம் செஞ்சு கொண்டு வந்தாங்க. இது எனக்கு புதுஅனுபவம். இதுக்கு முன்ன மீனவ மக்களிடம் நான் பழகினது கிடையாது. ஐஸ் மீன் சாப்பிட்டே பழகிப்போன எனக்கு, ஃபிரெஷ் மீன் சாப்பிடும் போது அவ்வளவு டேஸ்டா இருந்தது.
கடல் அலையோடு, கடல் காற்றோடு, மீனவ மக்களோடு, மீன் உணவுகள் சாப்பிட்ட அனுபவம் ரொம்பவே அலாதியானது. அவர்களிடம் அதை எப்படி சமைச்சாங்கனு கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். இதில் ‘கனவாய்(cuttle) மீன்’ ஃபிரை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதை ‘கடம்பா மீனுன்னும் சொல்லுவாங்க. இந்த ரெசிப்பியைத் தான் தற்போது உங்களோடு பகிர்ந்துக் கொள்ள போகிறேன்.

என்னுடைய தவறு தான்! அன்னையர் தினத்தன்று உறுக்கமான பதிவு வெளியிட்ட ஸ்ரீரெட்டி

கனவாய்(cuttle) மீன் வறுவல்

தேவையானவை :
கனவாய்(cuttle)மீன் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – ஒரு குழிகரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்

செய்முறை:
மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

பெண்களின் மார்பகம் பற்றி ஆண்கள் கூறும் கருத்துக்கள்!

கனவாய்(cuttle)மீன் குழம்பு

தேவையான பொருள்கள்
கனவாய்(cuttle) மீன் – அரை கிலோ
வெங்காயம் – 2
தக்காளி -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2ஸ்பூன்
மிளகுத்தூள் – கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரைஸ்பூன்
மல்லிதுர்ள் – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

சுவையான கனவாய்(cuttle)மீன் குழம்பு ரெடி. வார விடுமுறை மற்றும் வார நாட்களில் கூட இதை நீங்கள் செய்யலாம்.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle