Food & Nightlife

இன்ஸ்டன்ட் முதல் எஸ்ப்ரெஸ்ஸோ வரை – உங்களுக்கு பிடித்த காஃபிய சொல்லுங்க ! உங்களப்பத்தி நாங்க சொல்றோம்!

Deepa Lakshmi  |  Feb 11, 2019
இன்ஸ்டன்ட்  முதல் எஸ்ப்ரெஸ்ஸோ வரை – உங்களுக்கு பிடித்த காஃபிய சொல்லுங்க ! உங்களப்பத்தி நாங்க சொல்றோம்!

காஃபிக்கு அடிமையாகாத நாவுகள் உலகின் ஆகப்பெரும் சந்தோஷத்தை அறிந்து கொள்ள மறுக்கின்றன என்று ஒரு முக்கிய காஃபி ரசிகை ஒருவர் கூறுகிறார். அது வேறு யாருமல்ல நானேதான்!

உலகில் பெரும்பான்மை மக்கள் நேசிக்கும் காஃபி , காதலுக்கு உரமாகும் காபி, நட்புக்கு அடிப்படையாகும் காஃபி  என காஃபி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். காஃபி டே மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நிறைய காதல்கள் மலராமலே போயிருக்கும். (coffee lovers)

இத்தகைய சிறப்புள்ள காஃபியை அதன் சுவை வகைகள் அடிப்படையில் வேண்டி விரும்பி அருந்துபவரின் குணங்கள் பற்றி பார்க்கலாம்.

இன்ஸ்டன்ட் காஃபி ரசிகர்கள்

இவர்கள் பெரும்பாலும் எல்லாவற்றையும் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்கள். பெரிய சிக்கல்களை ஏற்படுத்திக் கொள்ளவே மாட்டார்கள். இவர்களுக்கு இவர்கள் சௌகர்யம் மிக முக்கியம். இவர்களுக்கு அவசியமற்ற விஷயங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். எல்லாவற்றிற்கும் அவசர தீர்வு வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்.

தயாரிப்பு

நன்கு கொதிக்க வைத்த பால் எடுத்துக் கொள்ளவும். திக்கான காஃபி பிடிக்காதவர்கள் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் இன்ஸ்டன்ட் காஃபி பொடியை போட்டு இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். கொதிக்க வைத்த பாலை இதனோடு கலக்கவும். நிறம் வேண்டும் என்றால் ஒரு அரை ஸ்பூன் காஃபி பொடி சேர்க்கலாம்.

கூடுதல் சுவைக்கு கொஞ்சம் பட்டை பொடி அல்லது கோகோ பவுடரை சேருங்கள்.

பில்டர் காஃபி ரசிகர்கள்

இவர்கள் நேர்த்தியானவர்கள். எப்போதும் ஒரு ஒழுங்கு முறை கடைபிடிப்பார்கள். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் விதிகளை மீறவும் விரும்புவார்கள். கலாச்சாரம் பாரம்பரியம் போன்றவை உங்கள் விருப்பங்கள் . முன்னோர் கடைபிடித்த விஷயங்களை கடைபிடிக்க விரும்புவீர்கள். மாற்று பாதையில் செல்ல பயப்படுவார்கள்.

தயாரிப்பு

சிக்கரி கலக்கப்பட்ட காஃபி தூளினை காஃபி பில்டரில் இரண்டு ஸ்பூன் போடவும். கொதிக்கும் நீரினை காஃபி பில்டரில் ஊற்றவும். பின்னர் பில்டரை மூடி விடவும். சிறிது நேரத்தில் காஃபி டிகாஷன் தயார் ஆகிவிடும். இதனை கொதிக்கு, பாலில் கலந்து தேவைக்கேற்ப சர்க்கரை போட்டுக் கொள்ளவும். காஃபி தயார்.


சுவை நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றால் கால் டம்ளர் டிகாஷனில் முக்கால் டம்ளர் பால் சேர்க்கவும். இதுவே உங்கள் வாழ்வின் நேரத்தை சுகமானதாக்கும்

பிராப்பி ரசிகர்கள்

இவர்கள் வாழ்க்கையின் எல்லா சாகசங்களையும் செய்து பார்க்க விரும்பும் ரிஸ்க் எடுக்கும் ஆளுமைகள். எல்லாவற்றிலும்  ஈடுபாடு அதிகமாக இருக்கும். ஆனாலும் அவ்வவ்போது சலிப்படைவார்கள். எல்லாவற்றையும் வேடிக்கையாகவே அணுகுவார்கள். அதனால் இவர்களுக்கு நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

தயாரிப்பு

டிகாஷன் கலந்த பால் அல்லது இன்ஸ்டன்ட் காபியை தயாரிக்கவும். இதனோடு சில ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு ப்ளெண்ட் செய்யவும். நுரை வரும் வரை ஒரு மில்க் ஷேக் போலத் தயாரிக்க வேண்டும்.

கூடுதல் சுவைக்கு ஐரிஷ் ஐஸ் கிரீம் அல்லது வெனிலா ஐஸ் கிரீம் சேர்க்கலாம்.

எஸ்ப்ரெஸ்ஸோ ரசிகர்கள்


இதுதான் காஃபி யின் உண்மையான அப்பழுக்கற்ற பரிசுத்தமான சுவையை நமக்கு அப்படியே வழங்குகிறது. இவர்கள் பெரும்பாலும் சாதனையாளர்களாகவே இருப்பார்கள். நன்கு அர்ப்பணிப்போடு வேலை செய்வார்கள். மனம் தடுமாறும் போது ஊக்கப்படுத்திக் கொள்ள இவ்வகை காஃபியை அருந்துவார்கள். வாழ்வின் அடிப்படை தேவைகள் இருந்தாலே இவர்களுக்குப் போதுமானது. இவர்கள் விருப்பப்படி செயல்கள் நடக்காவிட்டால் மனம் வருந்துவார்கள்.

தயாரிப்பு

இதற்கென இருக்கும் சிறப்பு காஃபி பொடியை உபயோகிக்க வேண்டும். காஃபி டே இல் கிடைக்கிறது. இதனோடு கொதிக்க வைத்த நீரை ஊற்ற வேண்டும். பெரும்பாலும் இவ்வகை காஃபிகள் மிக குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். ஆகவே சிறிய ஷாட் க்ளாஸ்கள் இதற்குப் போதுமானவை. ஒரு ஸ்பூன் எஸ்ப்ரெஸ்ஸோ பொடியுடன் ஒரு ஷாட் க்ளாஸ் அளவிற்கான கொதிக்கும் நீரைக் கலக்கவும். சரியான முறையில் கலந்தால் பொன்னிற நுரைகள் வரும்.

கூடுதல் சுவைக்கு இதனோடு பால் அல்லது சர்க்கரை சேர்க்க கூடாது.

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் .

 —

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

Read More From Food & Nightlife