Food & Nightlife

சுவையான சூடான செட்டிநாடு நண்டு கறி சாப்பிட ஆசையா?

Mohana Priya  |  May 17, 2019
சுவையான சூடான செட்டிநாடு நண்டு கறி சாப்பிட ஆசையா?

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு நண்டு(Crab). நண்டு(Crab) என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு சொல்லும் போதே நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு நண்டு(Crab) விரும்பி சாப்பிடுவோர் அனேகர் உள்ளனர். ஏன் எனக்கு கூட நண்டு(Crab) என்றால் மிகவும் பிடிக்கும். 

அதிலும் செட்டிநாடு நண்டு(Crab)பிரட்டல் என்றால் சொல்லவே வேண்டாம். குட்டி போட்ட பூனை போன்று கிட்சனையே சுற்றி சுற்றி வருவேன். 

நண்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு(Crab) உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. இந்த நண்டை மசாலா, கிரேவி, குழம்பு என்று செய்து செய்து சுவைக்கலாம்.

தீராத நோயால் அவதிப்படும் சஞ்சை! புலம்பும் ஆல்யா

தேவையான பொருட்கள்:
நண்டு(Crab) – 1 கிலோ
வெங்காயம் – 3 (நறுக்கியது)
தக்காளி – 4 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
வரமிளகாய் – 4 ம
ஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
மிளகு – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 4 பச்சை மிளகாய் – 3-4
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

முகத்தை பளபளப்பாக்கும் அதிசய தேன்: எப்படி பயன்படுத்தலாம்!
செய்முறை: முதலில் நண்டை சுத்தமாக கழுவி நீரை முற்றிலும் வடிகட்டிக் கொண்டு, பின் ஒரு பாத்திரத்தில் அதனைப் போட்டு, நண்டு(Crab) மூழ்கும் அளவில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் பாத்திரத்தை இறக்கி, நீரை வடிகட்டி விட வேண்டும். (இப்படி செய்வதால் நண்டு(Crab) வாடை அதிகம் இருக்காது மற்றும் சாப்பிடும் போது நண்டு(Crab) மென்மையாக இருக்கும்.) பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி சேர்த்து லேசாக வறுத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து, அதோடு தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஓர் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட், தக்காளி, கரம் மசாலா, தக்காளி, உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் 3 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின் அதில் நண்டு(Crab) சேர்த்து பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, 15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், செட்டிநாடு ஸ்பைசி நண்டு(Crab) கிரேவி ரெடி.

அழகான மென்மையான முடியை பெறுவதற்கான 10 ரகசிய டிப்ஸ்கள்!

தேவையான பொருட்கள் :

நண்டு(Crab) – அரை கிலோ
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 25 கிராம்
தக்காளி – 4
காய்ந்த மிளகாய் – 3
பூண்டு – 5 பல்
புளி – சிறிதளவு
இஞ்சி – சிறிது
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
மிளகு – 3 ஸ்பூன்
தேங்காய் – 1 மூடி
நல்லெண்ணெய் – குழிக்கரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க :

பட்டை – சிறிதளவு
கிராம்பு – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு

செய்முறை :

* நண்டைச் சுத்தம் செய்து சுடுநீரில் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி வைக்கவும்.

* பெரிய வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.

* தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றுடன் சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டிய பொருட்கள் சேர்த்துத் தாளித்த பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி, மிளகாய் போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் சுத்தம் செய்து வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

* பின்பு சிறிதளவு புளிக்கரைசலை ஊற்றவும்.

* அடுத்து அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்துக் கிளறி விடவும்.

* பச்சை வாசனை போனவுடன் இதில் அரைத்து தேங்காய் விழுது சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். நண்டு நன்றாக வெந்தவுடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

* சூப்பரான செட்டிநாடு மிளகு நண்டு குழம்பு ரெடி.

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Food & Nightlife