Food & Nightlife

ம்ம்ம்… சுவையான மனமனக்கும் சிக்கன் கிரேவி ரெசிபி!

Mohana Priya  |  Jun 7, 2019
ம்ம்ம்… சுவையான மனமனக்கும் சிக்கன் கிரேவி ரெசிபி!

சிக்கன்(chicken) என்பது யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த உணவு வகை சிக்கன்(chicken). சிக்கன்(chicken) கிரேவி, சிக்கன்(chicken) லாலி பாப், சிக்கன்(chicken) பிரியாணி, சிக்கன் சூப் என எங்கும் ஹோட்டல் சென்றாலும் நாம் ஆர்டர் செய்யும் முதல் ஐடம் சிக்கனாக தான் இருக்கும். சரி சட்டுபுட்டுன்னு ரெசிபிக்கு வாங்க என நீங்கள் சொல்வது புரிகிறது. இன்று நாம் பார்க்க போவது இரண்டு வகையான சிக்கன்(chicken) கிரேவி

1. செட்டிநாடு சிக்கன்(chicken) கிரேவி 2. வறுத்த சிக்கன்(chicken) கிரேவி

தேவையான பொருட்கள்:

சிக்கன்(chicken)- 1 கிலோ
பெரிய வெங்காயம் – 2
எண்ணெய் – தேவையான அளவு
சோம்பு, பட்டை, கிராம்பு, கல்பாசி, அன்னாசி பூ – சிறிதளவு
மிளகாய் பொடி – 3 தேக்கரண்டி
சாம்பார் பொடி – 2தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.

சுவையான காரசாரமான இறால் மிளகு வறுவல் மற்றும் தொக்கு !

அரைக்க வேண்டிய பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 200 கிராம்
பூண்டு – 15 பல்
கிராம்பு – 3

வறுத்து பொடியாக அரைக்க:
சோம்பு – 2 ஸ்பூன்
சீரகம் – 3 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை அதாவது சோம்பு போட்டு வறுத்து அதன் பின் சீரகம் பின் மிளகு போட்டு கருக விடாமல் வறுக்கவும். பின் அதை ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:
சிக்கனை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பெரியவெங்காயத்தையும் போட்டு வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு அரிது வைத்துள்ள சின்ன வெங்காயம், பூண்டு, கிராம்பு கலவையை போட்டு வதக்கவும்.

தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல்(Love) வசனங்கள்!

பின் வறுத்து பொடியாக வைத்துள்ள சீரகம், சோம்பு, மிளகு கலவையையும் போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். செட்டிநாடு சிக்கன்(chicken) கிரேவியின் சிறப்பே இது தான். பின் சிக்கனை போட்டு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அதன் பின் மேலே கூறிய பொடி வகைகளையும் போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சிக்கன்(chicken)முக்கால் பதம் வெந்தவுடன் உப்பு போடவும். சிக்கன்(chicken) வெந்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விட்டு பின் கிரேவி பதம் வந்தவுடன் இறக்கவும்.

வறுத்த சிக்கன்(chicken)கிரேவி

இந்த சிக்கன்(chicken) கிரேவி சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, தோசை மற்றும் ரைஸ் இவை எல்லாவற்றிக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
சிக்கன்(chicken) – 250கி
பல்லாரி – 2, தக்காளி – 2
புதினா, கொத்தமல்லி – சிறிது
கிராம்பு – 3, ஏலக்காய் – 2
சோம்பு பொடி – ஒரு ஸ்பூன்
பட்டை – 3 சிறிய துண்டு
பிரிஞ்சி இலை – ஒன்று
சிகப்பு மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
மல்லி பொடி – 1 டீஸ்பூன்
மிளகு பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்டு – 2 டீஸ்பூன்
சோம்பு – ½ டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

சுவையான சூடான செட்டிநாடு நண்டு கறி சாப்பிட ஆசையா?

சிக்கன்(chicken) கிரேவி (Chicken Gravy) செய்முறை

பட ஆதாரம் – gifskey, pexels, pixabay, Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Food & Nightlife