Finance

தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன் – காணாமல் போன ‘காஃபி டே’ நிறுவனரின் நெகிழ வைக்கும் கடிதம்

Deepa Lakshmi  |  Jul 30, 2019
தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன்  – காணாமல் போன ‘காஃபி டே’ நிறுவனரின் நெகிழ வைக்கும் கடிதம்

இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ‘காஃபி டே’ (cafe coffee day) வின் நிறுவனர் சித்தார்த்தாவை நேற்று முதல் காணவில்லை. அவரைத் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ள நிலையில் அவர் தனது போர்டு ஆப் டைரக்டர்களுக்கு தனது ஊழியர்களுக்கும் எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது.

ஒரு தொழிலதிபராகத் தான் தோற்று விட்டதாக அதில் அவர் குறிப்பிட்டிருப்பதால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் ‘காஃபி டே’ சித்தார்த்தா ஆவார். அவர் கடந்த திங்கள் அன்று தனது காரில் மங்களூர் சென்று கொண்டிருக்கும்போது நேத்ராவதி பாலத்தின் அருகில் வண்டியை நிறுத்த சொல்லி இருக்கிறார்.

கார் ட்ரைவர் வண்டியை நிறுத்தியபின்னர் கொஞ்ச தூரம் முன் சென்று காரை நிறுத்த சொன்ன சித்தார்த்தா தான் போன் பேசியபின்னர் நடந்து அந்த இடத்திற்கு வந்து விடுவதாக கூறியிருக்கிறார். ட்ரைவர் முதலில் பார்க்கும்போது அவர் நேத்ராவதி பாலத்தின் மேல் குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி யாருடனோ போன் பேசியபடி இருந்திருக்கிறார் சித்தார்த்தா

Twitter

அதனால் ட்ரைவர் காருக்குள் காத்திருந்திருக்கிறார். சித்தார்தாவிற்கு ஏதாவது சிக்கல் என்றால் அதனை தீர்வு செய்ய முடிவெடுக்கும்வரைக்கும் நடைப்பயிற்சி செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆகவே இதனை ட்ரைவர் தவறாக நினைக்க முடியவில்லை.

ஆனால் நீண்ட நேரத்திற்கு பின்னரும் சித்தார்த்தா திரும்பாததால் ட்ரைவர் பாலத்தில் வந்து பார்க்கையில் அவரை அங்கே காணவில்லை. இதனால் பதட்டம் அடைந்த ட்ரைவர் வீட்டாருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். அதன் பின்னர் போலிஸாரின் தலையீடுடன் சித்தார்தாவைத் தேடும் பணி ஆரம்பித்திருக்கிறது.

காவல்துறையினர் கூறுகையில் அவர்களது துப்பறியும் நாய்கள் பாலத்தின் நடுமத்தி வரை சென்று நின்று விட்டதாக கூறியிருக்கின்றனர். இதனால் ஆற்றுக்குள் இறங்கித் தேடும் பணியை போலீசார் செய்து வருகின்றனர்.

twitter

விசாரணையின் போது தனது ஊழியர்களுக்கு ‘காஃபி டே’ நிறுவனர் சித்தார்த்தா எழுதிய கடிதம் சிக்கி இருக்கிறது. அந்தக் கடிதம் மிகவும் தெளிவான முறையில் விரிவாக தனது சிக்கல்கள் பற்றி சித்தார்த்தா அவர்களால் எழுதப்பட்டதாக இருக்கிறது.

37 வருடங்களாக கடினமான முயற்சி செய்து இந்த நிறுவனத்தை இந்தியா முழுதும் பரவி இருக்கும்படி செய்திருக்கிறேன், ஆனாலும் என் தொழிலை லாபகரமானதாக்க முடியவில்லை. இதற்காக என்னை நம்பிய அனைவருக்கும் என் மன்னிப்பை கோருகிறேன். 6 மாதத்திற்கு முன்னர் நான் புதிய தொழில் வர்த்தகம் ஒன்றை ஆரம்பிக்க நண்பர் ஒருவரிடம் பெரும் பணத்தைக் கடனாகப் பெற்றிருக்கிறேன்.

அதே சமயம் நான் விற்ற பங்குகளை என்னையே திரும்ப வாங்கிக் கொள்ள சொல்லும் நிர்பந்தத்திற்கு நான் ஆளாகி இருக்கிறேன். எனது பங்குகளை வாங்கிய ஒருவர் என்னை மிகவும் நெருக்குகிறார். நானும் நிறைய யோசித்து ஓய்ந்து விட்டேன்.

இனிமேலும் என்னால் போராட முடியவில்லை. ஆகவே என் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன். எனது கடன்களை விட சொத்துக்கள் அதிகம். ஆகவே தரவேண்டியவர்களுக்கு சொத்துக்களை விற்று திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று மனம் உருகும் வகையில் அந்தக் கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார்.

இந்தக் கடிதம் கிடைத்த பின்னர் போலீசார் 200க்கும் மேற்பட்ட நபர்களுடன் தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கின்றனர். ஹெலிகாப்டர் மற்றும் கடலோரக் காவல்படையினரையும் உதவி கேட்டுள்ளனர்.

இந்தியாவின் பெருமை மிகுந்த CCD என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படும் ‘காஃபி டே’ நிறுவனர் சிக்கலான முறையில் காணாமல் போனது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது.                                                      

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                        

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                        

 

Read More From Finance