கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவை பரபரப்பாக்கி தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து இருப்பது cafe coffee day நிறுவனர் சித்தார்த்தா மாயமானதும் அதன் பின்னர் மரணமடைந்ததுமான செய்திகள்தான்.
யார் இந்த V G சித்தார்த்தா ? அவரது பின்னணி என்ன? எதற்காக அவர் மரணம் அடைந்தார்..? தனது மரணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பி இருக்கிறார் என்பது வரைக்கும் முடிவு செய்த காரணம் என்ன என்பது பற்றி அலசி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன் – காணாமல் போன ‘காஃபி டே’ நிறுவனரின் நெகிழ வைக்கும் கடிதம்
பரம்பரை காஃபி பிசினஸ்
கர்நாடகா சிக்மகளூரில் பரம்பரை பரம்பரையாக காஃபி பிசினஸ் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்தான் V.G சித்தார்த்தா. 100வருடங்களுக்கும் மேலான காஃபி பாரம்பரியத்தில் பிறந்த சித்தார்த்தாவிற்கு 12000 ஏக்கர் காஃபி தோட்டம் இருந்திருக்கிறது. இவர் இறந்தாலும் இப்போது வரைக்கும் ஆசியாவில் மிகப்பெரிய காஃபி தோட்டம் வைத்திருக்கும் ஒரே குடும்பம் இவர்களுடையதுதான்.
சித்தார்த்தா மங்களூரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ பொருளாதாரம் படித்த கையோடு உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனமான ஜே எம் ஃபைனான்ஸியல் நிறுவனத்தில் பங்கு வர்த்தகம் தொடர்பான பணியில் சேர்ந்தார். 1983 – 84 ஆகிய ஆண்டுகளில் பணி புரிந்த அவர் கற்றுத் தேர்ந்த பின்னர் பெங்களூரு திரும்பினார்.
தனது 26வது வயதில் வீட்டில் கொடுத்த பணத்தை சிவன் செக்யூரிட்டிஸ் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தார் சித்தார்த்தா. அதில் நல்ல லாபத்தை பார்த்த பின்னர்தான் பாரம்பரியமான காஃபி வியாபாரத்தில் களமிறங்கினார் சித்தார்த்தா.
Cafe Coffee Day முதல் கிளை
1993ம் ஆண்டு முதல் காஃபி செடி வளர்த்தல், காஃபி செடி பதப்படுத்துதல், காஃபி விற்பனை செய்தல் ஆகியவற்றிக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். Amalgamated Bean Company எனும் பெயர் கொண்ட அந்தக் கம்பெனி சுருக்கமாக ABC என்று அழைக்கப்பட்டது.
இந்தக் கம்பெனிதான் கஃபே காஃபி டே குளோபல் ( Cafe Coffee Day Global ) என்கிற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது.ஆரம்பத்தில் இந்த வியாபாரத்தின் டர்ன் ஓவர் 6 கோடி ரூபாய்தான். ஆனால் இன்றைய டர்ன் ஓவர் 2500 கோடி ரூபாய் என்றால் இதன் பின்னணியில் இருக்கும் சித்தார்த்தாவின் உழைப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பெங்களூரு என்பது ஆரம்ப காலத்தில் முதியவர்களின் பென்சன் வாழ்க்கைக்கான இடமாக இருந்த சமயத்தில் அங்கே coffee day தொடங்குவது ஆபத்து என்று சித்தார்த்தாவிற்கு கூறப்பட்டது. ஆனாலும் அடுத்த 10 வருடங்களில் நடக்கப்போவதை முன்கூட்டியே திட்டமிட்ட சித்தார்த்தா ஐ டி தொழிலால் பெங்களூரு நவநாகரீகமாக மாறி விடும் என்றும் அப்போதைய இளைஞர்களுக்கான இடமாக நமது இடம் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருக்கிறார். 1996ல் cafe cofee day யின் முதல் கிளை பெங்களூரு பிரிகேட் பகுதியில் தொடங்கப்பட்டது.
இன்றைக்கு சுமார் 1700 cafe coffee day கிளைகள் இந்தியா முழுதும் விரிவடைந்திருக்கின்றன. இதைத்தவிர மலேசியா , எகிப்து, நேபாள், வியன்னா, செக் குடியரசு நாடு போன்ற வெளிநாடுகளிலும் இதன் கிளைகள் இருக்கின்றன.
CCD நிறுவனர் சித்தார்த்தாவிற்கு இதனைத் தவிர serai , cicada என்கிற பெயரில் ஏழு நட்சத்திர ரிஸார்டுகள் இருந்தன. அதனையும் இவர்தான் நடத்தினார். 2015ற்கான ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 1.2 பில்லியன் டாலர் சொத்துக்களோடு சித்தார்த்தா இடம் பிடித்திருந்தார். இப்படி எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருந்த நிறுவனமாக CCDக்கு நஷ்டம் இல்லாமல்தான் இருப்பதாக அவர்களின் வருடாந்திரக்கணக்குகள் இருக்கின்றன. வருகின்ற 2020 வரைக்குமான இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
“Café coffee day” அதிபர் சித்தார்த்தாவின் உடல் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
இந்த நிலையில் இந்த தற்கொலை ஏன் ?
இதற்கிடையில் இவருக்குத் திருமணம் நடக்கிறது. அதுவும் சாதாரண குடும்பம் அல்ல. அரசியல் பலம் வாய்ந்த முன்னாள் கர்நாடக முதல்வர் மற்றும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் என் கிருஷ்ணா தான் சித்தார்தாவின் மாமனார். ஆனால் இவரது இறப்பு செய்தி வெளியான இந்த நிமிடம் வரைக்கும் தனது மாமனாரின் அரசியல் பலத்தை பயன்படுத்தி பிசினஸ் டீல்களை வளைத்துப் போட்டார், அரசாங்கத்தை ஏமாற்றினார் என்று யாரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை என்பது சித்தார்த்தாவின் வியாபார நாணயத்தைக் காட்டுகிறது.
1999ம் ஆண்டு மைண்ட் ட்ரீ பங்குகளை 44 கோடிக்கு வாங்க சித்தார்த்தாவின் நண்பர் அசோக் சுதா பரிந்துரை செய்கிறார். 2012 வரை பல தவணைகளில் 340கோடிக்கு மைண்ட் ட்ரீ பங்குகளை வாங்கினார் சித்தார்த்தா. கடந்த மார்ச் மாதம் 2019ம் வருடம் மைண்ட் ட்ரீ பங்குகளை L & T நிறுவனத்திற்கு விற்று அங்கிருந்து வெளியேறுகிறார் சித்தார்த்தா. இவரது காஃபி டே நிறுவனத்தின் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தியே L & T நிறுவனம் பங்குகளை வாங்கியதாக அப்போது பரவலாகப் பேசப்பட்டது.
இறுதிக்கடிதம்
2015ல் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பெறும் சித்தார்த்தா 2017ம் ஆண்டு வருமான வரி சோதனைகளில் சிக்குகிறார். வருமான வரித்துறை அறிக்கைப் படி CCD அவுட்லெட்களில் சோதனை நடத்தியதில் 650 கோடிக்கான கணக்குகள் காட்டப்படவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்களாம். அன்றில் இருந்து இன்று வரைக்கும் வருமானவரித்துறை நபர் ஒருவரால் தனக்கு அழுத்தம் தரப்பட்டது குறித்து சித்தார்த்தா தனது இறுதிக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வளவு திறமைசாலியாக இருந்தும் தனது இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்டபடி எந்த அரசியல் தலையீடும் ஆதரவும் இல்லாமல் 37 ஆண்டுகள் கடின உழைப்பால் cafe coffee day நிறுவனத்தை நடத்திய சித்தார்த்தா, தான் விற்ற பங்குகளை திரும்ப வாங்க சொல்லி நிறுவனம் கொடுத்த அழுத்தம் மற்றும் வருமானவரித்துறை அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாக எவ்வளவு யோசித்தும் அதில் இருந்து வெளிவர முடியாததால் நியாயமாக நடந்த சித்தார்த்தா எனும் வெற்றிகரமான பிசினஸ் மேன் தனது தற்கொலையை அரங்கேற்றி இருக்கிறார்.
தனது உடல் கடலோடு கலந்து விடும் என்கிற நம்பிக்கையில் நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் குதித்து தற்கொலை செய்திருக்கிறார் சித்தார்த்தா. இதனை அந்த வழியாக சென்ற முதியவர் பார்த்திருக்கிறார். மீனவர்கள் பார்த்திருக்கிறார்கள். நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து 500மீட்டர் தூரத்தில் கடல் இருக்கிறது. ஆற்றின் ஓட்டம் தன்னைக் கடலோடு சேர்க்கும் நம்பிக்கை அவருக்கு அப்போதும் இருந்திருக்கிறது. தனது முடிவையும் இயற்கையோடு கலந்து இருக்கும்படி வடிவமைத்த சித்தார்த்தாவின் உடல் நீண்ட தேடுதலுக்குப் பின்னர் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.
நாட்டின் வெற்றிகரமான பிசினஸ் மேன் ஒருவரை சில சுயநல மனிதர்களால் இழந்த இந்தியா இப்போது தவிக்கிறது. தனது இறுதிக்கடிதத்தில் ஊழியர்களுக்கும் இவரை நம்பிய மற்றவருக்கும் இவர் கேட்ட மன்னிப்பு என்பது மறக்க முடியாத ரணமாக அனைவர் நெஞ்சிலும் பதிந்திருக்கப் போகிறது.
இவரது நியாயமற்ற மரணமும்தான்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ். தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன
Read More From Finance
தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !
Deepa Lakshmi
பஸ்ஸுக்கு காசில்லை.. ஆனாலும் 5 லட்ச ரூபாய் தந்தும் வாங்கவில்லை.. தனஞ்ச் ஜெக்தலேயின் நேர்மை
Deepa Lakshmi
ஒரு பாதுகாப்பான நிதியை உருவாக்குவது எப்படி? பெண்களுக்கான சில பயனுள்ள நிதி குறிப்புகள்
Meena Madhunivas