Lifestyle

சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் செய்ய வேண்டியது!

Mohana Priya  |  Dec 20, 2018
சிசேரியன் பிரசவத்திற்கு பிறகு பெண்கள் செய்ய வேண்டியது!

பிரசவத்திற்கு(delivery) பின் பெண்கள் நல்ல சத்தான உணவுகளை உண்டு போதுமானவரை ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் மீண்டும் நல்ல உடல் ஆரோக்கியத்தை பெறமுடியும். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு கடுமையான வேலைகள் செய்வதை சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும். சிசேரியனுக்குப் பின்னர் தையல் போட்ட காயம் குணமாக வேண்டும் என்பதற்காகவே ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதையும் மீறி வேலை செய்தால் தையல் மீண்டும் பிரிந்து விடும் அபாயம் உள்ளது. இந்த ஓய்வே மேலும் எடை கூட வழி வகுத்து விடுகிறது.

அதேசமயம் சிசேரியனுக்குப்(delivery) பின்னர் கொழுப்பு அதிகம் உள்ள கேக், ஐஸ்கிரீம், சிப்ஸ் போன்றவைகளை தவிர்த்துவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அதிக இனிப்பு பண்டங்கள் உண்பது, எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பது, பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன. பிரசவத்திற்குப்பின் எடை போடுவது, அதிலும் வயிற்றில் சதை போடுவது, சர்க்கரை வியாதி வருவதற்கு காரணமாகி விடுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சிசேரியனுக்குப்(delivery) பிறகு கவனச் சிதறல் பிரசவத்திற்குப்பின் சரியான கவனிப்பின்மையே அநேக தாய்மார்களின் உடல் எடை கூடுவதற்கும் தொப்பை போடுவதற்கும் காரணமாகும். குறைந்தது இரண்டு பிரசவங்களுக்குப் பிறகு 10 முதல் 20 கிலோ எடை கூடி விடுகிறது.

புதிதான பழங்கள்
பழங்கள் சாப்பிடும் போது, அவற்றை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்கள் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் நல்ல பிரஷ்ஷான பழங்களை சாப்பிட வேண்டும்.

சமைத்த உணவு
பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட் பண்டங்களை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் சேர்வதை தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி
நடைப்பயிற்சியை மிஞ்சிய உடற்பயிற்சி ஏதும் இல்லை. எனவே அதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் அதற்கு முன் மருத்தவரிடம் கலந்தாலோசியுங்கள்.

யோகா
பொருத்தமான யோகா பயிற்சிகள் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடியவை. அவிற்றில் பிராணயாமம் ஒன்று. ஆகவே அடிப்படைகளுடன் சொல்லித் தரும் ஒரு நல்ல யோகா வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள். இதனால் உடல் மட்டுமல்லாது, மனதிற்கும் மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கும்.

தாய்ப்பாலை தவறாமல் அளித்தல்
உடலை பார்த்துக் கொள்ளும் பரபரப்பில் தாய்ப்பால் அளிக்க தவறுவது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்கள் உடலையும் பாதிக்கும். எனவே மார்பகப் புற்றுநோய் அண்டாமல் இருக்கவும், மார்பக சதைகள் இளைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.

சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதைகளில் ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. இந்த சத்து பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் இன்றியமையாதது. அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டியது. எனவே குழந்தைக்கு பால் கொடுக்கும் முன், ஒரு கையளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட வேண்டும். இதனால் அது தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்கும்.

பால்
ஒவ்வொரு புதிய தாய்மார்களும் பிரசவத்திற்கு பின் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் பால். ஏனெனில் பாலில் அவர்களுக்கு தேவையான கால்சியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, பாலானது தாயப்பாலின் சக்தியை அதிகரிக்கும். ஆகவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் 1 மணிநேரத்திற்கு முன், ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் கே அதிகம் நிறைந்துள்ளது. இத்தகைய வைட்டமின் கே நிறைந்துள்ள உணவுப் பொருட்களை பெண்கள் தங்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டால், தாய்ப்பாலின் மூலம் குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle