
எப்போதும் எல்லாவிதமான அனுபவங்களையும் நாம் ஒருவரே அனுபவித்து தெரிந்து கொள்ள முடியாது. பலரின் வாழ்க்கை நமக்கு சில பாடங்களை கற்றுத்தான் தருகிறது.
எல்லோரும் விரும்புவது இவரை போல வாழ வேண்டும் அவரைப் போல ஆகவேண்டும் என்பதுதான். அது பெரும்பாலும் பிரபலங்களை பார்த்துதான் இந்த எண்ணங்கள் வருகின்றன. உதாரணமாக உடைகள், பாஷன் பொருட்கள் எல்லாம் குறிப்பிட்ட நடிக நடிகையரின் பெயரில் திடீரென பரவலாகும்.
அவரைப் போல ஆகவிரும்பும் அநேக மக்கள் அதனை வாங்கி அணிந்து மகிழ்வதும் அவர்களின் முடியைப் போல தங்களின் முடியை வெட்டுவதும் குளிர் கண்ணாடிகள் அணிவதும் என இதனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
பிரபலமாக இருப்பது அத்தனை அற்புதமான விஷயம் அல்ல என்பதுதான் உண்மை. அதிலும் உச்சத்தில் இருக்கும் பிரபலங்கள் காதல் உறவில் இருந்தால் அவர்களின் ஒவ்வொரு செயலும் அனைவராலும் கண்காணிக்கப்படும். பத்திரிகைகளில் கிசுகிசுக்கப்படும். இதற்கெனவே சில பத்திரிகைகள் இயங்குகின்றன என்றால் ஆச்சர்யபடாதீர்கள்.
நமது சொந்த வாழ்வை மற்றவர் முன்னிலையில் காட்சிப்படுத்துவதும் அதன் பின் உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் நாம் விரும்பாமலே நமக்கு அறிவுரைகள் வருவதும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?
ஆனால் பிரபலங்களின் வாழ்வில் இது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த நிலையிலும் அவர்கள் காதல் வயப்படுவதும் அதன்பின் அவர்கள் பிரிவதும் அந்த சமயம் உலகமே தனது உறவினருக்கு இந்த நிலை ஏற்பட்டது போல பதறுவதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது.
எப்போதும் நமது வாழ்க்கையை அல்லது நம்மை ஒரு சினிமா பிரபலத்தோடு ஒப்பிட்டு பார்ப்பதும் அவரது குணங்களும் நமது குணமும் ஒத்துப் போனால் சந்தோஷப்படுவதும் சாதாரண சாமானியனின் அடிப்படை சந்தோஷங்கள் ஆகிவிட்டன.
புகழ் பெற்ற உச்ச நட்சத்திரங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள் என்று இருந்தாலும் கடைசியாக அவர்களின் வாழ்க்கை சாமான்யர்கள் போன்றதுதான் என்பதில் பலருக்கும் ஒரு திருப்தி இருக்கிறது. அந்த வகையில் இங்கே சில பிரபலங்களின் காதல் முறிவும் அது நமக்கு கற்றுத் தரும் பாடங்களும் ( lesson) பற்றி பார்க்கலாம்.
கமல்ஹாசன் – கௌதமி
கமல்ஹாசன் என்றாலே வெளிப்படையான மனிதர் என்பது தமிழகம் அறிந்த உண்மைதான். வாணி , சரிகா இருவரின் பிரிவிற்கு பின் நீண்ட நாட்கள் தனிமையை சந்தித்தார் கமல்ஹாசன். அந்த சமயங்களில் எடுக்கப்பட்ட படங்கள் பெரும்பாலும் நகைச்சுவை படங்களாகவே இருந்தன. சொந்த மனஅழுத்தம் அதிலிருந்து விடுபடவே இதில் அவர் ஈடுபடுவதாக கிசுகிசுக்கப்பட்டன. பின்னர் நடிகை கௌதமி அவரோடு இணைந்தார். கமல் கௌதமி இருவரும் திருமணமே செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தனர். 13 வருட தாம்பத்யத்திற்குப் பிறகு கௌதமி கமல் இருவரும் பிரிவதாக அறிக்கை வெளியிட்டனர். வாழ்க்கையில் பக்குவம் அடைந்த இருவர் பிரியும் சமயம் ஒருவரை ஒருவர் விரல் நீட்டி சாடுவதில்லை என்பது இவர்கள் விஷயத்தில் உண்மையானது.
இந்தப் பிரிவில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் பக்குவம். இருவரும் ஒரே சமயத்தில் முடிவெடுத்து ஒன்றாக பிரிந்தனர். இவர்களது தனிப்பட்ட வாழ்வு ஆரம்பிக்கும்போது யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை என்ற போதும் பிரியும்போது இதனை பத்திரிகைகளிடம் அறிவித்தனர். புற்று நோயால் போராடி மீண்ட கௌதமி இப்போது தனது மகளுடன் தனியே வசிக்கிறார்.
“எப்படிப்பட்ட ஆண்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாகலாம் ?
வழி காட்டுகிறது வேதம் !”
ரன்பீர் – தீபிகா
இன்று இது பழைய செய்தியாக இருப்பினும் பாலிவுட்டின் ஆதர்ஷ ஜோடியாக இவர்கள் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.அப்படி இருந்தும் இந்தக் காதல் பிரிவு முக்கியமானது. ஏனெனில் தீபிகா ரன்பிர் காதலில் துரோகம் முக்கிய இடம் வகித்தது. மற்ற காதலர்களை போல இல்லாமல் இந்த விஷயத்தையும் பொதுமக்கள் அறிய தீபிகா சொன்னது மிக முக்கியமானது. ரன்பிர் தீபிகாவுக்கு துரோகம் செய்ததை தீபிகாவே கையும் களவுமாக கண்டுபிடித்தார்.
இரண்டு வருடமாக காதலித்து வந்த ரன்பிர் கத்ரீனா கயிப் உடன் ஒன்றாக இருக்கும்போது தீபிகா பார்த்து விட்டதாக கூறப்படுகிறது.ரன்பிருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்ததும் அவர் தன்னை ஏமாற்றியதை ஏற்று கொள்ள முடியாத தீபிகா இந்தக் காதலை முறித்துக் கொண்டார்.
இவர்கள் காதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுதான். துரோகம் என்பதை எப்போதுமே மன்னிக்காதீர்கள். முதல் முறை நம்மை ஏமாற்றினால் மன்னிக்கிறோம் இரண்டாம் முறையும் அது தொடர்கிறது என்றால் நிச்சயம் மறுத்து விடுங்கள் அவர்களுக்கு இதுவே பழக்கமாகிவிடும்.
நம்மை ஏமாற்றிய நபர் நாம் அதனைக் கண்டுபிடித்த பின்தான் ஒப்புக் கொள்கிறார். தானாகவே மனசாட்சியோ உறுத்தி அவர்கள் உண்மையை ஒப்புக் கொள்வதில்லை. இன்னொரு வாய்ப்பை நாம் அவர்களுக்கு கொடுத்தால் அடுத்தமுறை நாம் கண்டுபிடிக்க முடியாதபடி துரோகம் செய்ய அவர்கள் தயாராக இருப்பார்கள்.
ரன்வீர் இனி இதெல்லாம் செய்யக் கூடாது! தடை விதித்த தீபிகா!
மலாய்கா அரோரா – அர்பாஸ் கான்
17 வருட தாம்பத்யத்திற்குப் பிறகு நீண்ட நாட்களாக வதந்தியாக இருந்ததை 2016ல் உண்மையாக்கினார்கள். நாங்கள் பிரிகிறோம் என்பதை வெளிப்படுத்தினார்கள். இந்தப் பிரிவிற்கு இடையேயும் துரோகம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தம்பதிகள் இருவருமே இதனைப் பற்றி வெளியே பேசவில்லை. ஒருவரை ஒருவர் மரியாதையை வீட்டுக் கொடுக்காமலே இருந்தனர். மேலும் தங்களது மகனுடன் இருவரும் ஒன்றாக வெளியே வருகின்றனர். அர்பாஸ் குடும்பத்தில் ஒருவர் என்பதும் என் மகனின் தந்தை என்பதும் மறுக்க முடியாத விதி. சில சூத்திரங்களை மாற்றி எழுத முடியாது. அர்பாஸ்சை சந்திப்பது என் மகனுக்கு பிடித்திருக்கிறது. என் மகன் சந்தோஷம் எனக்கு பிடித்திருக்கிறது என்கிறார் மலாய்கா. இப்போது இவ்விரு ஜோடிகளும் அவரவருக்கான அடுத்த துணையை தேர்ந்தெடுத்துக் கொண்டது அனைவருக்கும் தெரிந்தது தான்.
விவகாரத்துக்குப் பின்னும் உறவுகள் உடையாமல் இருக்க முடியும் என்பதை இவர்கள் மூலம் நாம் கற்றுக் கொள்ளலாம். அது மட்டும் அல்லாமல் வேறொரு நல்ல துணை நமக்கு கிடைக்காமல் போகலாம் என்பதையும் இவர்கள் மாற்றி இருக்கிறார்கள். இருவரும் அவரவருக்கான எதிர்கால துணையோடு இந்த உறவையும் அழகாக சமன் செய்கிறார்கள்
உங்கள் உறவில் சந்தேக விரிசல்கள் விழுகிறதா? செய்ய வேண்டியது என்ன
பிரகாஷ் ராஜ் – லலிதகுமாரி
வில்லனாக அறிமுகமான பிரகாஷ் ராஜ் தனது திறமையான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர். இவருக்கும் நடிகை லலிதாகுமாரிக்கும் 1994ல் திருமணம் நடந்தது. மூன்று குழந்தைகள் பிறந்தனர். இதில் ஒரு பெண் குழந்தை 2004ம் வருடம் இறந்து விட்டார். அதற்குப் பின் பிரகாஷ் ராஜ் 2009ஆம் விவாகரத்து வாங்கினார். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இவர்களுக்கு இடையே ரசனை வேறுபாடுகள் இருந்ததாக பிரகாஷ் தான் எழுதிய புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் பின் 2010வருடம் போனி வர்மாவைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு வேதாந்த் என்கிற மகன் இருக்கிறார். இருந்தாலும் தனது முதல் மனைவியின் பிள்ளைகளோடும் பிரகாஷ்ராஜ் நேரம் செலவிடுகிறார். அவர்களுக்கான பொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கிறார்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் நன்றி உணர்வின் அடிப்படையில் நாம் யாரையும் காதலிக்கவோ நம் வாழ்க்கையை பணயம் வைக்கவோ கூடாது என்பதுதான். திருமணம் என்பது இரு மனமும் விரும்புவதால் நடப்பதே அன்றி வேறு எதற்காகவும் அல்ல. மண முறிவு ஏற்பட்ட பின்னரும் தகப்பனின் பொறுப்புகளை பிரகாஷ் ராஜ் சரிவர செய்வது நமக்கான முன்னுதாரணம் எனக் கொள்ளலாம்.
“இளம் தம்பதிகள் தங்கள் மணவாழ்க்கையில்
செய்யும் சில முக்கிய தவறுகள்”
படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ்
—-
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi