Beauty

ட்ரெண்டி ஐ லைனர்கள் – கருப்பு நிறத்தை உதறி தள்ளுங்கள் ! வசந்த காலத்திற்கு தேவையான வண்ணமயமான ஐ – லைனர் நிறங்களை தேர்ந்தெடுங்கள்

Nithya Lakshmi  |  Feb 25, 2019
ட்ரெண்டி  ஐ லைனர்கள் – கருப்பு நிறத்தை  உதறி தள்ளுங்கள் ! வசந்த காலத்திற்கு தேவையான வண்ணமயமான ஐ – லைனர் நிறங்களை தேர்ந்தெடுங்கள்

ஐ லைனரில் கருப்பு மட்டுமே பயன்படுத்திக்கொண்டு இருக்குறீர்கள் என்றால் அதை மாற்றிட நேரம் வந்துவிட்டது. இத்தனை வண்ணங்கள் இருக்கும்போது அதை பெண்களாகிய நாம் நிச்சயம் பயன்படுத்தி மகிழ்ச்சிக்குரிய நிறங்களை பரப்ப வேண்டும் ! அது உங்கள் ஒப்பனையில் இருக்கட்டுமே.

கருப்பு நிற ஐ லைனர் நிச்சயம் உங்களுக்கு அலுத்து போயிருக்கும். அதனால், நாங்கள் உங்கள் மன நிலைக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதத்தில் கோடை கால (spring) ட்ரெண்டில் இருக்கும் வண்ணமிக்க ஐ லைனர்களை கொண்டுவந்திருக்கிறோம். பார்க்கலாமா?!

நீல வண்ணம் –

ஐஸ்வர்யாவின் இந்த நீல நிற லைனர் (eye liner) நிச்சயம் உங்கள் ஒப்பனையின் இலக்குகளை மாற்றக்கூடுய நிறமே ! இது உங்களுக்குள் இருக்கும் தைரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் ஒரு நிறம்/ஒப்பனை .இதை இவர் அணிந்திருக்கும் ஒரு பழுப்பு நிற(color) மினுமினுக்கும் ஆடையில் இன்னும் எடுப்பாக காட்டியுள்ளது.

பிங்க் லைனர் –


பிங்க் ஒரு இலகுவான நிறம் என்பதினால் இதை நீங்கள் மிகவும் அற்புதமாக முன்வைக்கலாம். இதை ஏதேனும் ஒரு வெள்ளை நிற ஆடை உடன் அல்லது நீல வண்ணம் கொண்ட ஷர்ட், பிளவுஸ் அல்லது சல்வார் சுய்ட் உடன் இது மிக அட்டகாசமாக இருக்கும். இது உங்களை நிச்சயம் நேர்த்தியாக காட்டும் !

ப்ளூ  மேஜிக் –


இந்த கோடைகாலத்தில் இதுபோல் ஒரு பளிச்சிடும் நிறம் உங்கள் இளமையை பிரதிபலிக்கும். இது இருண்ட நீல நிறத்திற்கும் லைட்டான நிறத்திற்கும் நடுவில் இருக்கும் ஒரு நிறம். நீங்கள் கடலோர பகுதிகளில் உங்கள் ஹாலிடேவை கொண்டாட போகுறீர்கள் என்றால் இந்த நிறம் சிறந்தது.அதற்கு ஏற்றது. இதை இந்த மாடல் அணிந்திருப்பதை போல நடுவில் பூசாமல் விட்டு விடுங்கள். இது ஒரு புதிய பாணியை குறிக்கும்.  

மஞ்சள் மஹிமை –


மஞ்சள் நிறத்தில் ஆடைகள் மற்றும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அது புத்துணர்ச்சியை அளிக்கும். எனக்கும் மிக பிடித்த நிறம் – மஞ்சள்! ஆனந்தத்திற்குடைய நிறம் என்றால் அது மஞ்சள் தான். இது இப்போதைய ட்ரெண்டில் (trendy) இருக்கும் நிறம் ஆகும். இதை உங்கள் நண்பர்களுடன் பார்ட்டி /வெகேஷனில் நிச்சயம் முயற்சி செய்யுங்கள்.

ரெட்  அலெர்ட் –


உங்களுக்குள் இருக்கும் பார்ட்டி கேர்ள்ளிற்கு ஏற்ற அந்த ஒரு நிறம் என்றால் அது நிச்சயம் சிவப்பு லைனர் தான்.  உங்கள் ஆடை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு ஸ்வாட்ச் இந்த சிவப்பு லைனரை அணிந்து அதற்கு ஏற்ற ஒரு சிவப்பு லிப்ஸ்டிக் பூசிக்கொண்டு (மோனோக்ரோம் லுக்) நீங்கள் அசத்தலாக செல்லலாம்.

க்ளிட்டர் க்ரெய் /கோல்டன் –

படம் , படம் 

வெறும் நிறங்களை மற்றும் கொண்டதில்லை இன்றைக்கு வரும் ஐ லைனர் வகைகள். அதன் அம்சங்களும் ஏராளமாக இருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த மினுமினுக்கும் க்ளிட்டர் கொண்ட லைனர்ஸ். இதை நிச்சயம் உங்கள் விசேஷ நாட்களில் உங்கள் அழகிய ஆடையுடன் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கலர் லைனரை அசத்தலாக அணிய சில டிப்ஸ் –

1.உங்கள் கண்களின் நிறத்திற்கு ஏற்ற ஒரு ஐ லைனர் நிறத்தை தேர்ந்தெடுங்கள்.
2.உங்கள் கண்களின் கீழ் இமைகளிலும் அணிந்தால் கண்கள் பெரிதாக தோன்றும்.
3.ஒரு விங்ட் லைனர் (கண்களின் நுனியில் இறக்கைகள் போல ) உங்களுக்குள் இருக்கும்       ஸ்டைல்லை வெளிப்படுத்தும்.
4.ஏதேனும்  ஒரு ஐ ஷாடோ கலரை பயன்படுத்தி இதே தோற்றத்தை அடையலாம்.
5.ஒரு நல்ல லுக்கை பெற லிக்விட் லைனரை ஆரம்பத்தில் தவிர்க்கவும்.

இதை படித்த பிறகு நிச்சயம் நீங்கள் கருப்பு நிறம் ‘போர் ‘ என்றுதான் சொல்லுவீர்கள். எனக்கு பிடித்த லைனர் நிறம் மஞ்சள்!  இதில் உங்களுக்கு பிடித்த கலர் லைனர் எது என்று எங்களிடம் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்

பட ஆதாரம்  – இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Beauty