Lifestyle

இயற்கையுடன் ஒரு பயணம் : இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!

Nithya Lakshmi  |  Jun 18, 2019
இயற்கையுடன் ஒரு பயணம் : இயற்கையின் பாடங்களை கற்றிட இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் பகுதி!

தினம்தோறும் அலுவலகம் வீடு என்று ஒரே அலுப்பாக இருந்தால் உங்களை புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு!  பாடசாலையில் நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் மட்டுமே நமக்கு போதாது. இயற்கை நமக்கு கற்பித்துக் கொடுக்கும் பாடங்கள் மிக அற்புதமானவை. இந்த விலை மதிப்பில்லா அனுபவத்திற்கு எல்லையே இல்லை. இதை நீங்கள் கற்றுக் கொள்ள ஒரு சிறந்த வழி – ட்ரெக்கிங்! நீங்கள் இயற்கை ரசிகராகவும் மேலும் விறுவிறுப்பான சாகசங்கள் நிறைந்த மலைகள், காடுகள், பனிப்பாறைகள் என்று அனைத்தையும் ரசித்து அனுபவித்து செல்ல தயாராக இருந்தால், நாங்கள் உங்களுக்கு இந்தியாவின் 20 சிறந்த ட்ரெக்கிங் (best trek places India) இடங்களை கீழ் கூறியுள்ளோம் . அனுபவித்து மகிழுங்கள்!

எளிதான மலையேற்ற பகுதிகள்

1. கேதார்கந்தா ட்ரெக் , உத்தரகாண்ட்

Instagram

அழகிய குக்கிராமங்கள், போகும் பாதையில் புல்வெளிகள், பசுமை நிறைந்த சாலைகள் உங்களை சுற்றி பனி மலைகள்,அதன் மத்தியில் சூரியன் அஸ்தமனமாகும் அந்த ஒரு அழகிய காட்சி மற்றும் ஆச்சரியத்தை அளிக்கும் அளவிற்கு இருக்கும் அழகிய இயற்கை காட்சிகள் இவை அனைத்தும் அடங்கி உள்ளது தான் இந்த கேதார்கந்தா ட்ரெக்கிங் சாலை.  இந்த ட்ரெக்கிங் சாலை, கோவிந்த் நேஷனல் பார்க் வழியாக செல்கிறது. மேலும் நீங்கள் போகும் பாதையில் பந்தர், ப்ளாக், ஸ்வர்க ரோகினி எனும் சிகரங்களையும் காணலாம்.


உயரம்: 3, 850 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : டிசம்பர் – ஏப்ரல்

எவ்வளவு நாட்கள்?  5-6 நாட்கள்

எப்படி செல்லுவது?  விமானத்தில் / ரயிலில்  பெங்களூரில் இருந்து நியூ டெல்லி சென்று அங்கிருந்து டெஹ்ராடூனிற்கு பஸ்சில் செல்லலாம்

2. சொக்ரமுடி ட்ரெக் , கேரளா

Instagram

கடவுளின் பல அற்புதமான படைப்புகளை நீங்கள் கேரள மாநிலத்தில் காணலாம். இயற்கையை மிகவும் நேசிப்பவர் என்றால், உங்கள்  ட்ரெக்கிங்கை இங்கிருந்து ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும். கேரள மாநிலத்தில், இடுக்கி மாவட்டத்தில் புகழ்பெற்ற இடமான ஒன்றானது இந்த சொக்ரமுடி மலைப்பகுதி. உங்கள் மலையேற்றத்துக்கான சாலை கடினமாக இருந்தாலும் மலை உச்சிக்கு சென்ற பிறகு நீங்கள் பார்க்கக் கூடிய அந்த ஒரு அற்புதமான காட்சி மறக்க முடியாத ஒன்றாக அமையும்!

அடுத்த முறை மூணார் / இடுக்கி  சென்றால் இதை நிச்சயம் நீங்கள் முயற்சிக்க வேண்டும் .


உயரம்:  2,194 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : ஆகஸ்ட்  – பிப்ரவரி

எவ்வளவு நாட்கள்? 1 நாள்

எப்படி செல்லுவது? ரயிலில் / காரில் கேரளா சென்று இடுக்கி மாவட்டத்திற்கு செல்லுங்கள். ஏறவிக்குளம் எனும் தேசிய பூங்காவில் இருந்து ஆரம்பிக்கிறது இந்த அற்புதமான ட்ரெக்.

3. த்ரியுண்த் ட்ரெக் , ஜம்மு

Instagram

த்ரியுண்த் ட்ரெக் நீங்கள் எளிதில் அடையக்கூடிய ஒரு ட்ரெக்கிங் சாலை  ஆகும். நீங்கள் மலையேற்றத்தில் ஆரம்ப காலகட்டத்தில் இருக்கிறீர்கள் என்றால்,  இந்த ட்ரெக்கிங் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். இதில் நீங்கள் இப்பகுதியில் உள்ள அழகிய பூக்கள்,  அல்பாய்ந்,ஃபற் , ஓக் வனப்பகுதிகள் மற்றும் என்றும் நினைவில் இருக்கும் அளவிற்கு அற்புதமான இமயமலை காட்சிகள் இவை அனைத்தையும் காணலாம். மேலும் தவுலாதர் எல்லைகள் மற்றும் கங்கிரா  பள்ளத்தாக்கின் முழுமையான அழகிய காட்சிகளையும் காணலாம். இது போதாது என்றால் உங்கள் நண்பர்களுடன் , த்ரியுண்த் ட்ரெக் போகும் வழியில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் உணவு வகைகள் அனைத்தையும் ரசித்து மகிழலாம்!

உயரம்:  9,432 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :  மே – ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர்

எவ்வளவு நாட்கள் :  2 நாட்கள்

எப்படி செல்லுவது? விமானத்தில் டெல்லியில் இருந்து ஜம்முவிற்கு சென்று , அங்கிருந்து மெக்லீயோத்கஞ் அல்லது தரம்கொட்டில் இருந்து ஆரம்பிக்கலாம்

4. ஹர் கி துன் , உத்தரகாண்ட்

Instagram

உத்தரகண்டில் தொலைதூரத்தில் இருக்கும் மலையேற்றங்களில்  அதிகபட்ச ட்ரெக்கிங் பயணங்களை அளிக்கும் இடம் என்றால் அது இந்த ஹர் கி துன் ட்ரெக்கிங் சாலைதான் ! இங்குள்ள பனிமூட்டம் உள்ள இமயமலைகள், பனிப்பாறைகள், மலை முகடுகள் சிறிய ஆறுகள் இவை அனைத்தும் இந்த தொட்டில் வடிவத்தில் உள்ள பள்ளத்தாக்குப் பகுதியின் விசேஷ அம்சங்கள் ஆகும்.  மேலும் இப்பகுதி இந்துக்களின் புராணங்களிலும் இடம்பெற்ற பகுதி என்று குறிப்பிடத்தக்கது. இத்தகைய வசீகரிக்கும் இடத்தை நீங்கள் நிச்சயம் பார்வையிட வேண்டும் .


உயரம்:  4,300 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :  செப்டம்பர் – டிசம்பர்

எவ்வளவு நாட்கள் :  7 நாட்கள்

எப்படி செல்லுவது? டெஹ்ராடூனிற்கு சென்று, 200  கி.மீ தூரத்திலிருக்கும் சங்கரி எனும் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்

5. தலகோனா நீர்வீழ்ச்சி ட்ரெக் , சித்தூர்

Instagram

வட இந்தியாவில் நீங்கள் பனிப்பாறைகள், இமய  மலைகள் , சில்லென்று வீசும் காற்று என்று அனுபவித்து இருந்தால் ,  தென்னிந்தியாவில் பசுமை நிறைந்த புல்வெளிகள், அடர் காடுகள் நீர்வீழ்ச்சிகள் என்று அனைத்தையும்  உங்கள் ட்ரெக்கிங் சாலைகளில் காணலாம். இதுபோல் ஒன்றுதான் இந்த தலகோனா நீர்வீழ்ச்சி . ஸ்ரீவெங்கடேஸ்வரா நேஷனல் பார்க்கில் அமைந்துள்ள இந்த ட்ரெக்கிங் சாலை ஒரு அழகிய நீவீழ்ச்சியிடம்  உங்களை அழைத்துச் செல்லும். ஏதேனும் ஒரு குறுகிய ட்ரெக்கிற்கு தேடிக்கொண்டு இருந்தால் இதுவே அதற்க்கு சிறந்தது. அனுபவித்து மகிழுங்கள்!


உயரம்: 82 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : செப்டம்பர் – பிப்ரவரி  

எவ்வளவு நாட்கள்?  1 நாள்

எப்படி செல்லுவது? ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்திற்கு பஸ் / காரில் சென்று அங்கிருந்து இந்த ட்ரெக்கிங்கை ஆரம்பிக்கலாம்

6. காரி தபோவன் ட்ரெக்

Instagram

உத்தரகாண்ட்டில்  மற்றுமொரு சிறந்த ட்ரெக்கிங் பகுதி என்றால் அது இந்த காரி தபோவன் பாஸ் அமைத்திருக்கும் கார்வால் இமயமலை ஆகும் . இங்கிருக்கும் சுற்றுச்சூழல், அரிதான விலங்கினங்கள் அதாவது பணி சிறுத்தை மற்றும் கஸ்தூரிமான்,   ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட சிகரங்கள் இவை அனைத்தையும் நீங்கள் போகும் பாதையில் காணலாம்.அழகிய இமயமலையின் திகைப்பூட்டும் காட்சிகளை முழுமையாக நீங்கள் பார்வையிட இதுவே ஒரு சிறந்த இடமாகும்.


உயரம்:  4,264 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :  ஏப்ரல் – ஜூன் மற்றும் செப்டம்பர் – நவம்பர்

எவ்வளவு நாட்கள் :  6 நாட்கள்

எப்படி செல்லுவது?  விமானத்தில் டெஹ்ராடூன் சென்று, 260 கி.மீ தூரத்தில் இருக்கும் ஜோஷிமத்திற்கு சென்று உங்கள் ட்ரெக்கிங்கை  ஆரம்பியுங்கள் .

மேலும் படிக்க –நீண்ட பயணத்திற்கு  பிறகு புத்துணர்ச்சியுடன் தோன்றுவது எப்படி?  

7. நீல்கிரிஸ் கிறீன் லெக் ட்ரெக் , ஊட்டி

Instagram

ஊட்டிக்கு  இதுவரை நீங்கள்  ஓய்வெடுக்க மட்டுமே சென்று இருக்கிறீர்கள்  என்றால் இம்முறை இந்த நீல்கிரிஸ் கிறீன் லெக் ட்ரெக்கிங்கிற்கு சென்று அந்த அனுபவத்தை பெறுங்கள் . இந்த சாலையில் மர்மமான அடர் காடுகளும் பல சாகசங்களும் நிறைந்துள்ளது.   இருப்பினும் இதன் முடிவில் வரும் அந்த அழகிய ‘ நீல்கிரிஸ் கிறீன் லெக் ‘ ஏரியின் காட்சி உங்கள் கடினமான பயணத்தை மறந்து இதன் அழகில் உங்களை ஈர்த்துவிடும்!


உயரம்: 2,133 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : செப்டம்பர் – மார்ச்

எவ்வளவு நாட்கள்?  1 நாள்

எப்படி செல்லுவது? ரயிலில் அல்லது பஸ் / காரில் ஊட்டி ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து உங்கள் ட்ரெக்கிங்கை ஆரம்பிக்கலாம்.

8. நிஷானி பெட்டா ,கூர்க்

Instagram

கர்நாடக மாநிலத்தில் கூர்கில்  இதுவரை நீங்கள் அழகிய பசுமை புல்வெளிகள் நிறைந்த இயற்கை காட்சிகளை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள் என்றால் இதற்கு மறுபுறம் இதன்   மலையேற்றம் அதன் அழகிய பாதைகள் உங்களுக்கு ஒரு மறக்க முடியா அனுபவத்தை தரும். கர்நாடகாவில் பெரும்பாலும் ட்ரெக்கேர்ஸ் விரும்பும் ஒரு இடம் என்றால் அது இந்த நிஷானி பெட்டா  என்னும் ட்ரெக்கிங் சாலை தான் . சுமார் நான்கு மணி நேரம் ஆகும் இந்த டிரெக்கிங் பாதையை புதியவர்களூம் முயற்சிக்கலாம்.

உயரம்: 1,270 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : ஜூலை – மார்ச்

எவ்வளவு நாட்கள்?  1 நாள்

எப்படி செல்லுவது?  பெங்களூரில் இருந்து கூர்க் சென்றால், அங்கிருந்து பாகமண்டல எனும் வன எல்லையில் இருந்து ஆரம்பிக்கிறது .

சிறிது கடினமான மலையேற்ற பகுதிகள்

9. கொடச்சத்திரி ட்ரெக் ,ஷிமோகா

Instagram

தென்னிந்தியா மலைப்பகுதிகளிலும் மிகச்சிறந்த மலையேற்றத்தின் சாலைகள் உள்ளன அதில் ஒன்றுதான் இந்த kudajadri ட்ரெக்கிங் பாதை பசுமை நிறைந்த புல்வெளிகள் என்றும் நினைவில் இருக்கும் சூரியன் அஸ்தமனமாகும் அழகிய காட்சிகள் பன்முகத்தன்மை கொண்ட சாலைகள், அறிய விலங்கினங்கள், அடர் காடுகள் என இவை அனைத்தையும் இங்கு நீங்கள் காணலாம். முக்கியமாக ஹிந்டலுமானே நீர்வீழ்ச்சியை காண தவறாதீர்கள்! கர்நாடகா மாநிலத்தில் உயரமான சிகரங்களில் பத்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது இந்த கொலைச் சதி மலைப்பகுதி.


உயரம்: 1,343 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :   அக்டோபர் – ஜனவரி

எவ்வளவு நாட்கள் : 2 நாட்கள்

எப்படி செல்லுவது?  பெங்களூருக்கு சென்று அங்கிருந்து ஷிமோகா எனும் மாவதிற்கு சென்று ஆரம்பியுங்கள்.

10. கொளுக்குமலை ட்ரெக் , மூணார்

Instagram

உலகிலேயே மிகப்பெரிய  டி எஸ்டேட் ஆக கருதப்படும்  ஒன்றான கொளுக்குமலை டி  எஸ்டேட்டிற்கு போகும் பாதை தான் இந்த ட்ரெக்கிங் சாலை. இப்பகுதிகளில் இருக்கும் அடர் காடுகள், விலங்கினங்கள், இயற்கையை ரசிக்கும் அளவிற்கு அந்த கண்கொள்ளா காட்சிகள் இவை அனைத்தையும் நீங்கள் பார்த்து மகிழலாம் .இருப்பினும் இவை அனைத்திற்கும் மேல் உங்கள் எல்லையை நீங்கள் சென்றடைந்தவுடன் அங்கு பனி மூட்டத்துடன் காணப்படும் அற்புதமான டீ எஸ்டேட் மற்றும் ஒரு கப் சூடான டி உங்களை நிச்சயம் ஈர்த்துவிடும்!

உயரம்: 6,800 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :   அக்டோபர் – ஜனவரி

எவ்வளவு நாட்கள் : 2 நாட்கள்

எப்படி செல்லுவது? மூணாறில் இருந்து குரங்கிணி கிராமத்திற்கு சென்று உங்கள் ட்ரெக்கிங்கை ஆரம்பிக்கலாம்.

11. வெளி ஒப் பிளார்ஸ் ட்ரெக் , உத்தரகாண்ட்

Instagram

வெறும் பனி மலைகளும் , பனிப்பாறைகளையும்   மட்டுமே நீங்கள் இதுவரை பார்த்தீர்கள் என்றால் இது புதியது!  அழகிய பூக்களை ஒரு மிகப்பெரிய கம்பளமாக விரித்து சொர்கத்தை போல் காட்சி அளிக்கும்  இந்த வெளி ஒப் பிளார்ஸ் பகுதி . இப்பகுதியிலுள்ள அறிய பூக்கள் மற்றும் விலங்கினங்கள் அதாவது லில்லி மலர்கள், பாப்பி , டெய்சி மலர்கள், பனிச்சிறுத்தை, பழுப்பு நிறத்தில் இருக்கும் கரடி, நீல செம்மரி என அனைத்தும் உங்கள் மலையேற்றத்தை மேலும் சுவாரசியம் ஆக்கிவிடும்.

உயரம்: 3,658 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :  ஜூலை – செப்டம்பர்

எவ்வளவு நாட்கள் :6 நாட்கள்

எப்படி செல்லுவது? விமானத்தில் உத்தரகாண்ட்  சென்று, கர்வால் மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாம்.

12. சாடர் ட்ரேக், லடாக்

Instagram

லடாக் பகுதியில் இது மற்றுமொரு சுவாரஸ்யமான ட்ரக் ஆகும்.  சான்ஸ்கர் ட்ரெக் எனும் கூறப்படும் இந்த ட்ரெக்கிங் கில் உறைந்த சான்ஸ்கர் ஆரை  நீங்கள் ஒரு பணி படுக்கையாக இங்கு பார்க்கலாம். பனிக்கட்டிகள் நிறைந்த சாலைகள், நடுங்கவைக்கும் குளிர் காற்று, மற்றும் இங்குள்ள பாரம்பரிய லடாக்  கலாச்சாரங்களும் புத்த மத பழக்கவழக்கங்களையும் இங்கு அனுபவிக்கலாம்.

உயரம்: 3,390 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : ஜனவரி – பிப்ரவரி

எவ்வளவு நாட்கள் : 9 நாட்கள்

எப்படி செல்லுவது?  விமானத்தில் ஜம்மு சென்று லெஹ் லடாக் சென்று அடையவேண்டும். அங்கு ஷில்லிங் எனும் இடத்தில ஆரம்பிக்கிறது.

மேலும் படிக்க – பயணம் செய்யும் போது பொது / திறந்த கழிப்பறைகளைப் பயன்படுத்தும் பெண்களுக்கு விரைவான உதவிக்குறிப்புகள்

13. இந்த்ரஹர் பாஸ் ட்ரெக் , ஹிமாச்சல்

Instagram

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அழகிய சாகசங்கள் நிறைந்த இமயமலைப் பகுதிகளை  பற்றி நம் அனைவருக்கும் தெரியும். அங்குள்ள எல்லைகளை அருகாமை காண ஆசைப்பட்டாள் அதற்கு இந்த இந்த்ரஹார் பாஸ் ட்ரெக்  சரியான வழி. அதுமட்டுமில்லாமல் இங்கு நடை பயணம் (travel) செய்யும் நபர்கள் அதிகரிக்கும் மற்றும் ஒரு காரணம் – இங்கு நீங்கள் தரமசாலா  எனும் பகுதியையும் இன்னும் உன்னிப்பாக காண முடியும்! மொத்தத்தில் உங்களை இயற்கையின் அழகில் ஈர்த்து , ஆச்சரியத்தை அளிக்க உள்ளது இந்த பாதை!

உயரம்: 4,342 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : ஏப்ரல் –    அக்டோபர்

எவ்வளவு நாட்கள் : 10 நாட்கள் வரை

எப்படி செல்லுவது? எப்படி செல்லுவது?  விமானத்தில் டெல்லி சென்று, அங்கிருந்து 475 கி மீ தூரத்தில் இருக்கும் மெக் லீயோத் கஞ்சிற்கு செல்லலாம் அல்லது ரயிலில் பதன்கோட் சென்று 90 கி மீ தொலைவில் இருக்கும் மெக் லீயோத் கஞ்சிற்கு செல்லலாம்.

மிக கடினமான மலையேற்ற பகுதிகள்

14. ஸ்டாக் காங்கிரி ட்ரெக் , லடாக்

Instagram

லே லடாக் பகுதியில் இருக்கும் பலவகையான மலையேற்றத்தில்  இது மிகக் கடினமான ஒன்றாகும். ஸ்டாக் எனும் கிராமத்தில் இருந்து ஆரம்பிக்கும் இந்த ட்ரெக்கிங்கின் போகும் பாதையில் இருக்கும் அழகிய பசுமை நிறைந்த புல்வெளிகள், மலைகள் மற்றும் பனிப்பாறைகள் உங்கள் கடினமான பாதையை நிச்சயம் மகிழ்விக்கும். இப்பகுதியில் வரும் அழகிய காட்சிகளை நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்திருக்கும் அளவிற்கு அற்புதமானவை.

உயரம்: 6,153 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :   ஜூலை – செப்டம்பர்

எவ்வளவு நாட்கள் : 9  -18 நாட்கள்

எப்படி செல்லுவது?  விமானத்தில் டெல்லி சென்று அங்கிருந்து லெஹ் லடாக் சென்று விட்டாள், ஸ்டாக்  கிராமத்திலிருந்து உங்கள் மலையேற்றத்தை ஆரம்பிக்கலாம்.

15. குத்ரேமுக் ,கர்நாடகா

Instagram

நீங்கள்  மலையேற்றத்தில் புதிதாக இருந்தாலும் சரி பழக்கம் உடையவராக இருந்தாலும் சரி, கர்நாடக மாநிலத்தில் இருக்கும் இந்த குத்ரேமுக் பகுதியை நீங்கள் நிச்சயமாக ஏறி மகிழலாம். இங்கிருக்கும் அழகிய காட்சிகள், சில்லென்று அடிக்கும் காற்று,நீர்வீழ்ச்சிகள், மலைப்பகுதிகள், ஒரு புறம் இருக்கும் பள்ளத்தாக்குகள் மற்றும் மறுபுறம் இருக்கும் பசுமை நிறைந்த சாலைகள்  உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும். இம்மலைப்பகுதியின் வடிவம் குதிரையின் முகத்தின் வடிவத்தை குறிப்பதால் இதற்கு பெயர் குத்ரேமுக் (கன்னட மொழியில் ) கூறப்படுகிறது.

உயரம்: 6,153 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :   நவம்பர் – பிப்ரவரி

எவ்வளவு நாட்கள் : 2 நாட்கள்

எப்படி செல்லுவது? ரயிலில் மங்களூருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து பஸ்/ காரில் கலாசா சென்று , குத்ரேமுக் சென்றடையலாம்.

16. ரூப்குண்ட் ட்ரேக், உத்தரகாண்ட்

Instagram

இதுவரை கூறியிருக்கும் மலையேற்றத்தில் இது  மிகவும் கடினமான ஒன்று. நீங்கள் எதற்கும் துணிந்த அஞ்சாநெஞ்சர் என்றால் மேலும் ஒரு விறுவிறுப்பான சாகசங்கள் நிறைந்த அனுபவத்தை தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இது உங்களுக்கு பொருத்தமானதாகும். இப்பகுதியில் நீங்கள் பூக்கள் நிறைந்த அடர் காடுகள், மர்மமான ஏரிகள், பனிக்கட்டி நிறைந்த பாறைகள், மற்றும் பல சாகசங்கள் நிறைந்த அனுபவங்களை எதிர் கொள்ள வேண்டி வரும். மேலும் இப்பகுதியில் இருக்கும் பனிப்பாறை கொண்ட ஏரி இந்த ட்ரெக்கிங்கில்  நீங்கள் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

உயரம்: 5,028 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :   மே – ஜூன்

எவ்வளவு நாட்கள் : 7-9 நாட்கள்

எப்படி செல்லுவது?  விமானத்தில் டெஹ்ராடூன் சென்று கர்ணப்ரயாக் செல்லலாம் அல்லது  

ரயிலில் ரிஷிகேஷில் இருந்து கர்ணப்ரயாக் சென்று, அங்கிருந்து 57 கி.மீ தூரத்தில் இருக்கும் டெபால் பொயிண்டில் இந்த ட்ரெக் ஆரம்பிக்கிறது

17. நரசிம்ம பர்வதா , கர்நாடகா

Instagram

தென்னிந்தியாவில் நீங்கள் பரபரப்பான மலையேற்ற பகுதிகளில் தேடிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் இந்த நரசிம்ம பர்வதா   எனும் டிரக்கிங் பகுதி உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். சாகசங்கள் மற்றும் மர்மமான அடர் காடுகளின் மத்தியில் விஷம் கொண்ட நாகப்பாம்புகளையும் நீங்கள் போகும் பாதைகளில் சந்திக்கலாம். துணிச்சலுடன் இவை அனைத்தையும் சந்திக்க தயாரா?

உயரம்: 1,152 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : அக்டோபர் – மார்ச்  

எவ்வளவு நாட்கள்?  1-2 நாட்கள்

எப்படி செல்லுவது?  பஸ்/ காரில் பெங்களூரு சென்று சிருங்கேரி  செல்லுங்கள். அங்கிருந்து கிஃகா எனும் இடத்தில இருந்து ஆரம்பிக்கிறது இந்த ட்ரெக்கிங்.

18. கோச்சா லா ட்ரெக் , சிக்கிம்

Instagram

கோச்சா லா ட்ரெக் பூமியில் மிக உயர்ந்த மலை உச்சிகளில் மூன்றாவதாக இடம் பிடித்த கஞ்சன்ஜங்காவை  உங்களுக்கு மிக அருகில் பார்வையிட வாய்ப்பளிக்கிறது! மேலும் இப்பகுதி மற்ற சாலைகள் மற்றும் இயற்கை காட்சிகளை விட வித்தியாசமானது. இப்பகுதிகளிலுள்ள ரஹோடோடென்ரன் வனப் பகுதியாக இருக்கலாம் அல்லது இமயமலையின் அழகிய நீல ஏரிகளாக இருக்கலாம் இது மொத்தத்தில் சிக்கிமின் அழகிய பக்கங்களை உங்களுக்கு காட்ட உள்ளது.  இது ஒரு என்றும் நினைவில் இருக்கக்கூடிய மகிழ்விக்கும் அனுபவமாக உங்களுக்கு அமையும் .

உயரம்: 4,940 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :  மார்ச் – ஏப்ரல் மற்றும் செப்டம்பர் – நவம்பர்

எவ்வளவு நாட்கள் : 11 நாட்கள்

எப்படி செல்லுவது?  ரயிலில் ஜலப்பைகுறி எனும் இடத்திற்கு சென்று அங்கிருந்து  யுக்ச்சொம் எனும் ட்ரெக் ஆரம்பிக்கும் பேஸ் கேம்ப் இடத்திற்கு சென்றடையலாம்

19. ஹம்தா பாஸ் ட்ரெக் , மணாலி

Instagram

இமாச்சல் பிரதேசத்தில் மணாலியில் உள்ள இந்த ஹம்தா பாஸ் ட்ரெக்  அப்பகுதியை சேர்ந்த மற்றுமொரு அழகிய மலையேற்றத்திற்க்கான சாலையாகும். இங்கு உள்ள பசுமை நிறைந்த புல்வெளிகள், பனிப்பாறைகள், உறைபனி பள்ளத்தாக்குகள், இயற்கை காட்சிகள் இவை அனைத்தும் உங்களை ஆச்சரியத்தில் மற்றும் இயற்கையின் அழகில் ஈர்த்து ரசிக்க வைக்கும்.

உயரம்: 4,298 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் : மே – ஜூன் மற்றும் ஆகஸ்ட் – அக்டோபர்

எவ்வளவு நாட்கள்? 6 – 11 நாட்கள்

எப்படி செல்லுவது?  விமானத்தில் / ரயிலில் டெல்லி சென்று, அங்கிருந்து மணாலி செல்லுங்கள். அங்கு  ஜோப்ரா எனும் முகாமில் இருந்து இந்த ட்ரெக் ஆரம்பிக்கிறது.

20. பிரஷர் லெக் , ஹிமாச்சல்

Instagram

இயற்கை முற்றிலும் இயற்கையின் சுற்றுச்சூழலில் ஒரு புறம் மலைகளும் மறுபுறம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நதிகளும் கொண்ட இடம் தான் இந்த பிரஷர் இல்லை இந்த மலையேற்றத்தில் இறுதியில் நீங்கள் ஒரு அழகிய சிறிய ஏரியில் காணலாம் அதுமட்டுமில்லாமல் இதன் அருகில் பிரஷர் எனவும் முனிவருக்காக கட்டப்பட்ட ஒரு சிறிய கோவிலையும் காணலாம்.இத்தகைய அழகை கொண்ட இந்த சிறிய தீவை நீங்கள் நிச்சயம் காண  வேண்டும் !

உயரம்:  2,730 மீ

இங்கே செல்ல சிறந்த சீசன் :  டிசம்பர் – பிப்ரவரி

எவ்வளவு நாட்கள் :  2 நாட்கள்

எப்படி செல்லுவது? விமானத்தில் டெல்லி சென்று, மணாலி செல்லும் பஸ்சில் 430கிம் தூரத்தில் இருக்கும்  மண்டி சென்று உங்கள் பயணத்தை ஆரம்பிக்கலாம்.

 

மேலும் படிக்க – பயணத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை எப்படி சரி செய்வது?

அதிகம் கேட்கப்படும் கேள்விகள்

1. ட்ரெக்கிங்கிற்கு எவ்வாறு தயாராவது?

தினம் 5-6 கி மீ தூரம் நடை பயிற்சி மற்றும் 1 மணி நேரம் உடற் பயிச்சியில் ஈடுபடுங்கள்

2 ட்ரெக்கிங்கிற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?

பெக் பேக்கில் தேவையான உணவு – நட்ஸ் , சாக்லேட் , சத்து அளிக்கும் பார் , டார்ச் லைட் , குடை , நல்ல பிராண்டட் ஷூஸ், முதலுதவி பெட்டி, தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் தண்ணீர் பாட்டில் மிகவும் அவசியம்.

3. ட்ரெக்கிங்கில் எந்த வித ஆடை பொருத்தமாக இருக்கும்?

உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் ஆடை – ட்ராக் பந்த் , டீ ஷர்ட் மற்றும் பூட்ஸ் தேவை.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle