Lifestyle

மனதை ஊக்கவிக்கும், தன்னம்பிக்கைத் தரும் பொன்மொழிகள் Spiritual Quote And Status In Marathi

Meena Madhunivas  |  Aug 26, 2019
மனதை ஊக்கவிக்கும், தன்னம்பிக்கைத் தரும் பொன்மொழிகள் Spiritual Quote And Status In Marathi

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தருணத்தில் தனது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்படுகின்றது. இது அவனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி, யாரும் எதிர்பாராத ஒரு உயரத்திற்கு எடுத்துச் சென்று விடுகின்றது. இந்த திருப்புமுனை ஏற்படுவதற்கு அவனது தன்னம்பிக்கையை தூண்டும் ஏதோ ஒன்று இருந்திருக்க வேண்டும். அப்படி ஒன்றில் இருப்பது தான் சான்றோர்களின் பொன்மொழிகளும், ஊக்கவிக்கும்(spiritual) சில வரிகளும். நீங்கள் ஒரு தூண்டுகோளுக்கு எதிர் பார்கின்றீர்கள் அல்லது அப்படி ஒன்று உங்களைத் தூண்டி உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை உண்டாக்க வேண்டுகின்றீர்கள் என்றால், இந்த பொன்மொழிகளின் தொகுப்பு உங்களுக்காக!

பொதுவான ஊக்கவிக்கும் பொன்மொழிகள் (Common Motivational Quotes)

1. ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்

2. உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன. – கோதே

3. நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை.
முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை.
முதல் படியில் ஏறு. – மார்டின் லூதர் கிங் ஜூனியர்.

4. செய்ய முடியும் என்று நம்பு.
ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது,
உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும்.
ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை,
அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
Dr.டேவிட் ச்ச்வர்ட்ஸ் David Schwartz

5. நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும்
ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை
-டிக்கன்ஸன்

6. ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார்.
நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார்.
இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

7. முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி

8. அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல. சாமுவேல் ஜோன்சன்

9. பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- வில்லியம் பிதர்

10. நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது – ப்ரெமர்

pixabay

மனதை ஈர்க்கும் உற்சாகமூட்டும் பொன்மொழிகள் (Inspiring Spiritual Quotes)

1. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

2. உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- சர் வின்ஸ்டன் சர்ச்சில்

3. நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை. ஆபிரகாம் லிங்கன்.

4. வெற்றியாளர்கள் முடிவுகளை விரைவில் எடுக்கிறார்கள்;
அப்படி எடுத்த முடிவுகளை மிக மெதுவாகவே மாற்றுகிறார்கள். தோல்வியுறுபவர்களோ, முடிவுகளை மிக மெதுவாக எடுக்கிறார்கள்(spiritual); அப்படி எடுத்த முடிவுகளை அடிக்கடியும், மிக விரைவாகவும் மாற்றுகிறார்கள். நெப்போலியன் ஹில்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.
சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும் போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும். – ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.

7. வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே.
என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய்.
செய்வதை விரும்பிச் செய்.
செய்வதை நம்பிக்கையோடு செய். வில் ரோஜர்ஸ்

8. பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள்.
வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்;
அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள். – ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.

9. வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது – நைட்டிங்கேல்

10. தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை – புக்கன்ஸ்

வாட்ஸ் அப் செய்ய பொன்மொழிகள் (Spiritual Quotes For Whatsapp Messages)

1. நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும்
நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார்.

2. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. – திருவள்ளுவர்.

3. உன்னை அறிந்தால் – நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்!! – கவிஞர் கண்ணதாசன்.

4. அறிவற்றவர்களை அதிகாரத்துக்குள்ளாக்குவது உண்மையான அறிவின் செயல்பாடல்ல.
மாறாக, மற்றவர்களையும் அறிவாளியாக மாற்றுவதுதான்!

5. உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். -கார்ல் மார்க்ஸ்

6. ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள். –இங்கர்சால்

7. உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண். – சாக்ரடிஸ்

8. ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட,

அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர்

9. ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்! –பெரியார்

10. வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள். போராட்ட உத்வேகமும் புதிய உற்சாகமும் கிடைக்கும்.

11. நம் கண்ணீரை நம் கையே
துடைத்துக்கொள்ளும்போது
மனம் தெளிவான முடிவுக்கு
வந்துவிடுகின்றது….

12. வாழ்க்கை பாடத்தை
கற்றுக்கொள்ள…
அம்மா அப்பா கடந்து
வந்த பாதையை அறிந்து
கொண்டாலே போதும்

pixabay

முகநூலில் பகிர சில பொன்மொழிகள் (Spiritual Quotes For Facebook)

1. தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி – கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் – இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ? – மகாகவி சுப்பிரமணிய பாரதி.

2. பறிபோன உரிமைகளை, பிச்சையாகப் பெற முடியாது.
தீர்மானங்கள் மூலமோ, மன்றாடுவதன் மூலமோ, நியாயங்கள் பிறக்காது.
ஆடுகளைத்தான் கோயில்கள் முன் வெட்டுகிறார்களே ஒழிய, சிங்கங்களை அல்ல! –அம்பேத்கர்

3. உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும்.
நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்! – சுவாமி விவேகானந்தர்.

4. சுயமாக முன்னேறிய மனிதன் என்று ஒன்று கிடையாது.
எனக்கு அதிக உதவிகள் கிட்டின.
நான் கண்டு கொண்டது என்னவெனில், நீ உழைக்கத் தயாராய் இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராய் இருக்கிறார்கள். – ஓ. வெய்ன் ரோலின்ஸ்.

5. ஒருவனுக்கு மீனைக் கொடு;
அவனுக்கு நீ ஒரு நாள் மட்டுமே உணவளித்தவனாவாய்.
அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு;
அவனுக்கு நீ அவனது வாழ்நாள் முழுக்க உணவளித்தவனாவாய். – லாவோ சூ

6. உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்குத் தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்! -பெரியார்

7. துருப்பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வதே நல்லது.
நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும்.
இதுவே உன் உண்மை பலம்.
மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டுத் தைரியமாகச் செயல்படு!

8. கடுமையான உழைப்பின்றி மகத்தான காரியங்களைச் சாதிக்க முடியாது.
பயந்து பயந்து புழுவைப்போல் மடிவதை விட,
கடமை எனும் களத்திலே போரிட்டு உயிர் துறப்பது மேலானது.

9. எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது; அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை.

10. எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.
முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். – சுவாமி விவேகானந்தர்.

சிறந்த உற்சாகமூட்டும் பொன்மொழிகள் (Best Spiritual Quotes)

1. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால்,
யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்! – அம்பேத்கர்

2. வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள் :
பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள். – வில்லியம் ஷேக்ஸ்பியர்

3. வாழ்க்கை
ஒரு விசித்திரமான பரீட்சை
அடுத்தவரை பார்த்து
காப்பி அடிப்பதால்
தான் பலர்
தோல்வி அடைகிறார்கள்
காரணம் ஒவ்வொருவருக்கும்
தனித்தனி கேள்வித் தாள்கள்

4. எதிர் பார்ப்பதை விட
எதிர் கொள்வதைக்
கற்றுக் கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை
கிடைப்பது இல்லை
எதிர் கொள்ளும்
வாழ்க்கையே கிடைக்கிறது

5. ஆயிரம் உறவுகள்
துணையாக இருந்தாலும்
வாழ்வை தனியாகத்
தான் எதிர்க்கொள்ள வேண்டும்
அவரவர் பாதை
அவரவர் பயணம்
அவரவர் மனம்
அவரவர் வாழ்க்கை

6. தூய்மையான எண்ணங்கள்
துணிச்சலான செயல்கள்
இவ்விரண்டும் எப்போதும்
இருப்பின் வாழ்க்கை சிறக்கும்

7. வாழ்க்கையில் எப்போதுமே
சந்தோஷமாக இருப்பது
ஒரு கலை
ஆனால் அதை
யாரிடமும்
கற்றுக் கொள்ள முடியாது

8. அழகிய காட்சியை
தேடாதீர்கள்
காணும் காட்சியை
அழகாக்குங்கள்
வாழ்க்கை அழகாகும்

9. வாழ்க்கையில்
பல வலிகள் உண்டு
அதே சமயம்
பல வழிகளும் உண்டு
ஆதலால்
தைரியமாய் நகருந்து
கொண்டே இரு

10. இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்

pixabay

நம்பிக்கையை வளர்க்கும் பொன்மொழிகள் (Spiritual Quotes Building Faith)

1. உன் முயற்சிகளை ஏளனம் செய்வோரிடமிருந்து விலகியே இரு.
சிறியோரே அவ்வாறு செய்வர்; மாறாக, உண்மையான பெரியோரோ உன்னாலும் முடியும் என்று உன்னை உணர வைப்பர். –
மார்க் ட்வைன்.

2. நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே;
தோல்வியுற அல்ல.
அப்படியே உன்னைத் தோல்வி வந்து அணைத்தாலும்,
அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே.
உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

3. சராசரி மனிதனின் விமர்சனம், உன் நோக்கத்தைத் திசை திருப்ப அனுமதிக்காதே.
நீ கனவு கண்டால், அவன் உன்னைப் பைத்தியக்காரன் என்பான்;
நீ வெற்றி பெற்றால், நீ அதிர்ஷ்டசாலி என்பான்;
நீ செல்வந்தன் ஆனாலோ, உன்னைப் பேராசைக்காரன் என்பான். அவனைக் கண்டுகொள்ளாதே. அவனால் உன்னை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது. – ராபர்ட் ஆலன்.

4. நியாயமில்லாத விமர்சனம்கூட ஒரு விதத்தில் பாராட்டேயாகும்.
நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டிவிட்டாய் என்பதையே இது காட்டுகிறது. – டேல் கார்னகி

5. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு…
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது

6. இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்…

7. ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை…
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்…
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்…

8. வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே…
(நம்பிக்கையுடன்)

9. தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்…

10. தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்…
தனியே நின்றாலும்
தன் மானத்தோடு…
சுமையான பயணமும்
சுகமாக….
(நம்பிக்கை)

11. வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது

தெம்பூட்டும் பொன்மொழிகள் (Spiritual Quotes Enriching Life)

1. எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்…

2. எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு

3. ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு

4. உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை

5. எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்…

6. ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி

7. எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்……
குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி……
உன்னால் முடியும்
என்று நம்பு…
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே…

8. விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்…

நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது…

9. தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்…
நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே

10. எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..

11. உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

12. வெற்றி கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்

 

pixabay

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Lifestyle