Lifestyle

மீன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? அட நம்பவே முடியலையே

Mohana Priya  |  Jan 13, 2019
மீன் சாப்பிடுவதால் இத்தனை  நன்மைகளா? அட நம்பவே முடியலையே

அசைவத்தில் நிறைய வகைகள் இருந்தாலும், மீன்(Fish) தான் ஆரோக்கிய உணவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சிறு வயது முதலே நமக்கு சொல்லி சொல்லி வளர்த்த பெற்றோர்கள் பலர். இப்படி மீனிற்கு என்று ஒரு தனித்துவம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இதை தவிர்த்து இப்போது ஒரு ஆராய்ச்சியில் ஒரு திடுக்கிடும் தகவல் வெளி வந்துள்ளது. அதாவது, வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டால் உங்களின் ஆயுள் நீளும் என இந்த ஆய்வு சொல்லியுள்ளது. இத்துடன் மேலும் பல தகவல்களும் வெளி வந்துள்ளன. வாங்க, அவை என்னென்ன மாற்றங்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

எவ்வளவு மீன்..?
வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுவதால் பலவித பயன்கள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குறைந்தபட்சம் 200 கிராம் அளவிற்காவது ஒரு வாரத்தில் மீனை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இது உடல் உறுப்புகள் அனைத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துமாம்.

இதய பிரச்சினைகளுக்கு மீன் சாப்பிடுவதால் கண்ணுக்கு மட்டும் தான் நல்லது என எண்ணாதீர்கள். ஏனெனில் மீன் சாப்பிடுவதால் இதயத்திற்கும் அதிக ஆரோக்கியம் கிடைக்குமாம். வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வருகின்ற வாய்ப்பு உங்களுக்கு மிக குறைவு என, 2000 பேரை வைத்து ஆய்வு செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

உறுப்புகளை பாதுகாக்க
வாரத்திற்கு 2 முறை நீங்கள் மீன் சாப்பிடுவதால் நமது உடலில் இருக்க கூடிய உறுப்புகள் பல சீரான முறையில் வேலை செய்யுமாம். அத்துடன் இவற்றின் ஆயுட் காலமும் நீடிக்கப்படும். மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளும் குறைய தொடங்கும்.

ஆராய்ச்சி என்ன சொல்கிறது
American Heart Association’s என்கிற ஜர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது பல ஆராய்ச்சியின் அடிப்படையிலே வெளிவந்துள்ளதாம். அதாவது, வாரத்திற்கு 2 முறை உணவில் மீன் சேர்த்து கொள்வோருக்கு ஆயுள் கூடுமாம். அத்துடன் உடலின் ரத்த ஓட்டம் சீராக செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வளவு மடங்கு
மீன்(Fish) சாப்பிடாமல் இருக்க கூடிய மக்களை காட்டிலும் மீன் சாப்பிடும் மக்கள் 2.2 ஆண்டுகள் அவர்களை விடவும் அதிக நாட்கள் உயிர் வாழ்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. இது விஞ்ஞான பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஞாபக சக்தியை அதிகரிக்க
மீன்(Fish) சாப்பிடுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்க கூடும். குறிப்பாக வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்க கூடும். எப்போதும் சோர்வாகவே இருக்கும் பலருக்கு இந்த மீன் வைத்தியம் கண்டிப்பாக உதவும்.

வீக்கத்தை குறைக்க
ரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும் பாதிப்பையும் தடுக்க கூடிய ஆற்றல் இந்த மீனிற்கு உள்ளது. வாரத்திற்கு 2 முறை சாப்பிடுவதால் இதிலுள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். மேலும், மூட்டுகளுக்கும் நல்ல பலத்தையும் தரும்.

எந்த மீன் நல்லது
நாம் சாப்பிட கூடிய மீன்களை(Fish) வறுத்தோ, டீப் ப்ரை செய்தோ சாப்பிட்டால் பலவித பாதிப்புகள் நமக்கு ஏற்படும். இதனால் மீனில் இருந்து கிடைக்க கூடிய பயன்கள் தலைகீழாக மாறி தீமையை கொடுக்க ஆரம்பிக்கும். எனவே, வறுக்காத மீன்களை சாப்பிட்டால் இதன் பயன் அப்படியே கிடைக்கும்.

உயர் ரத்த அழுத்தத்திற்கு இன்று அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ள உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு தீர்வை தர மீன் உள்ளது. மேலும், உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைத்து சமமான அளவில் ரத்த அழுத்தத்தை வைத்து கொள்ளும்.

காரணம் என்ன?
இப்படி பலவித நன்மைகள் மீனில்(Fish) இருப்பதற்கு முக்கிய காரணம் இதில் அதிகம் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தான். மனித உடலுக்கு இந்த ஒமேகா 3 அதிகம் தேவைப்படுகிறது. இவற்றின் நன்மைகள் மீனில் முழுமையாக கிடைப்பதால் மேற்சொன்ன பயன்கள் நேரடியாக நமக்கு கிடைக்கிறது. எனவே, உங்களுக்கும் இந்த பயன்கள் கிடைக்க வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிட்டு, நீண்ட ஆயுளுடன் வாழுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
 பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle