Food & Nightlife

ஞாபக சத்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ரெசிபிகள்!

Swathi Subramanian  |  Nov 8, 2019
ஞாபக சத்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ரெசிபிகள்!

எண்ணற்ற மூலிகைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது வல்லாரை. வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். ஆனால் அதைவிட வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பது குறித்து இங்கு விரிவாக காண்போம். 

நரம்புகளை பாதுகாக்க : வெரிகோஸ் வெயின் எனும் கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சனையை தீர்க்க இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. 

வயிற்றுப் பூச்சியை அழிக்க : வல்லாரை செடியின் (vallarai) இலையை நிழலில் உலர்த்தி நன்கு பொடித்து  வைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் பாலில் ஒரு ஸ்பூன் கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் குடித்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

pixabay

நரை முடிக்கு : வல்லாரை விழுதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.

மூளை வலுப்பெற : குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

ரத்த சோகை நீங்க : ரத்த சோகை இருப்பவர்கள் அடிக்கடி உணவில் வல்லாரை கீரை சேர்த்து கொள்ள வேண்டும். வல்லாரை ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். 

யானைக்கால் வியாதியை குணமாக்க : யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். மேலும் உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்து விடும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. 

pixabay

காய்ச்சல் குணமாக : வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். இதனை வெந்நீரில்  கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும்.

வலுவான பற்களுக்கு : வல்லாரை பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும். 

நோய்களை தவிர்க்க : வல்லாரை கீரை நோய் எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தியும் வல்லாரைக்கு உண்டு.

அடர்த்தியான கூந்தலுக்கு : தலைமுடி அடர்த்தியாக வளர வல்லாரை (vallarai) நல்லெண்ணையுடன் கலந்து பக்குவமாகக் காய்ச்சி வடிகட்டி பத்திரப்படுத்த வேண்டும். இதனை கூந்தல் தைலமாகத் தினமும் தலையில் தடவி வந்தால் கூந்தல் செழித்து வளரும். 

pixabay

வல்லாரை கீரை – ரெசிபிகள்

வல்லாரை கீரை துவையல் 

தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை – ஒரு கட்டு,
சின்ன வெங்காயம் – 10,
கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 1,
மிளகு – அரை டீஸ்பூன்,
தேங்காய் – ஒரு துண்டு,
தக்காளி – 2,
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு. 

youtube

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு அது காய்ந்ததும் கடலை பருப்பு, மிளகு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு சுத்தம் செய்த வல்லாரைக் கீரை இலைகளை எடுத்து அத்துடன் சேர்த்து வதக்கவும். கீரை வதங்கியதும் அதனுடன் தேங்காய் துண்டுகள், உப்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும். சத்து நிறைந்த வல்லாரைக் கீரை துவையல் ரெடி!

வல்லாரை கீரை பொரியல்

தேவையான பொருட்கள் 

வல்லாரை கீரை : 1 கட்டு,
சிறிய வெங்காயம் : 2 கப்,
மிளகாய் : 3 கப்,
கடுகு – 1 ஸ்பூன்,
உளுந்து – 1 ஸ்பூன்,
கடலை பருப்பு – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

 

youtube

செய்முறை:

கீரையை நன்றாக கழுவி இலைகளையும், சிறு தண்டுகளையும் பறித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, ஊளுந்து, கடலை பருப்பு பொட்டு தாளித்து கொள்ளவும். பிறகு வெங்காயம், மிளகாய் பொட்டு வதக்கவும். இப்பொழுது கீரையை தண்ணீரிலிருந்து எடுத்து வாணலியில் போட்டு நன்கு வேக விடவும். சிறிது நேரம் கழித்து உப்பு போட்டு கிளரி தேங்காய் துறுவல் தூவி இறக்கி வைக்கவும். இப்பொழுது ஆரோக்கியமான கீரை பொரியல் தயார். 

வல்லாரை கீரை தோசை 

வல்லாரை கீரை – 1 கப், 
பச்சை மிளகாய் – 1,
தோசை மாவு – 1 கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. 

youtube

செய்முறை:

முதலில் வல்லாரை கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். இதனுடன்  பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தோசை மாவில் அரைத்த கீரையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த மாவை தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான வல்லாரை கீரை தோசை ரெடி. வல்லாரைக் கீரையை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து சாப்பிடலாம். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Food & Nightlife