துளசி செடி ஒரு வாசனைமிக்க மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடி என்பது அனைவரும் அறிந்ததே. நமது நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பல நோய்களுக்கான மருந்து தயாரிப்பில் துளசி செடியின் இலைகள் மற்றும் வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
லமியாசியா என்னும் குடும்பத்தை சேர்த்தது துளசி செடியை (tulasi) வீட்டில் வளர்த்தால் வீட்டின் வளங்கள் செழிக்கும் என்பது நம்பிக்கை. துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு விரிவாக பார்ப்போம்.
- பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது.
- இதனால் சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே சுத்தப்படுத்துகிறது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.
pixabay
- அதிகாலை மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பிரம்ம முஹூர்த்த நேரம். இந்த வேளையில் இயற்கையகவே காற்றில் ஆக்ஸிஜன் அதிகமாக இருக்கும். இதனால் அதிகாலை வேளையில் துளசிச் செடியைச் சுற்றி வந்தால் அதிக சுத்தமான ஆக்ஸிஜனை சுவாசிக்கலாம் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும்.
- துளசிச் செடி (tulasi) மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக, ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலத்தையே, சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே பல வீடுகளில், துளசிச் செடியை வளர்த்து வருகின்றனர். அதிகாலை வேளையில் அதைச் சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க – தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்கான குறிப்புக்கள்!
- துளசி செடியை வீட்டில் வளர்ப்பதால் துஷ்ட சக்திகள் மற்றும் விஷ ஜந்துகள் அந்த வீட்டில் நுழையாது.
- தினமும் அதிகாலையில் மற்றும் மாலை வேளைகளில் இந்த துளசி செடியை வணங்கி வந்தால் நம் உடலில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீக்கி மனம் அமைதியாகும்.
pixabay
- துளசி செடியை (tulasi) வீட்டில் மாடம் அமைத்து வழிபடப்படும் போது எல்லா செல்வங்கள் மற்றும் சுகங்களும் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை.
- மேலும் துளசிக்கு வீட்டில் நடக்க இருக்கும் சம்பவங்களை முன்கூட்டியே தெரிவிக்கும் தன்மை கொண்டது. ஒரு வீட்டில் மாடத்தில் வளர்க்கப்பட்டு வழிபடப்படும் துளசி செடி அந்த வீட்டின் உயிராற்றலை தன்னுள் வைத்திருப்பதாக ஐதீகம்.
- துளசி வாடி வதங்கி போகிறதென்றால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்ய விருப்பமில்லாமல் வெளியேறிவிட்டாள் என்று அர்த்தம். வேறு ஏதேனும் ஒரு கேடு அவ்வீட்டில் ஏற்படுவதற்கான முன்னறிவிப்பாகவும் இதை கருதலாம்.
மேலும் படிக்க – அனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு
- துளசி செடிகள் வழக்கத்திற்கு மாறாக மிகுந்த செழிப்புடன் வளர்கிறதென்றால் அந்த வீட்டில் மகாலட்சுமியின் அருள் நிறைந்திருப்பதையும், மேலும் பல சுப நிகழ்வுகள் எதிர்வரும் காலங்களில் ஏற்படவிருப்பதை காட்டும் அறிகுறியாகும்.
pixabay
- நமது வீட்டில் துளசி செடிகளை வளர்ப்பது மட்டுமின்றி அதை முறையாக பராமரித்து வணங்கினால் பல நன்மைகள் நமக்கு ஏற்படும்.
- துளசியை கிழக்கு திசையில் தரைமட்டத்தில் வைத்தால் பெண்களின் ஆரோக்கியம் நன்கு அமையும்.
- வடக்குப் பக்கம் தாழ்வாக இருந்து அங்கே துளசி மாடத்தை வைத்தாலும் நற்பலனே கிடைக்கும்.
- வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு பகுதியில் துளசியை வளர்க்கலாம். அல்லது வீட்டின் முன்புறம் வளர்த்து தினமும் இதனை வழிபடுவது நல்லது.
மேலும் படிக்க – இயற்கை முறையில் நரைமுடியை நீக்கி கருமையான முடியை பெற உதவும் ஹேர் டை!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi