முட்டை – அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒரு உணவு. முட்டை சைவமா, அல்லது அசைவமா – முட்டையில் இருந்து கோழி வந்ததா அல்லது கோழியில் இருந்து முட்டை வந்ததா என்கின்ற பட்டிமன்றங்களைத் தாண்டி, இதில் அடங்கி இருக்கும் சத்துக்களும், நலன்களும் எண்ணில் அடங்காதவை என்று கூறலாம்.
Table of Contents
- முட்டையைப் பற்றித் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள் (Facts To Know About Egg)
- முட்டையில் நிறைந்துள்ள சத்துக்கள் (Nutritional Content Of Egg)
- முட்டையில் கிடைக்கும் பலன்கள் (Benefits Of Egg) :
- ஏன் நாட்டுக் கோழி முட்டைகளை உண்ண வேண்டும்? (Why Eat Country Chicken Eggs?)
- வெள்ளை முட்டை மற்றும் பழுப்பு முட்டை – வேறுபாடுகள் (Difference Between Brown Egg And White Egg) :
- சரும பாதுகாப்பிற்கு முட்டையின் பங்கு! (Benefits Of Egg For Skin Care) :
- முக அழகை அதிகப்படுத்த எப்படி முட்டையை பயன்படுத்தி பேஸ் பாக் செய்வது? (Methods To Prepare Egg Face Mask / Pack)
- தலைமுடி வளர்ச்சிக்கு முட்டை (Benefits Of Egg For Hair Care) :
- கேள்வி பதில்கள் (FAQ’s)
முட்டையில் (egg) பல வகை உணவு செய்யலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் எந்த ஒரு ஐயமும் இல்லாமல் முட்டையை சாப்பிடலாம். ஆனால் இன்று கடைகளில் கிடைக்கும் முட்டைகள் பெரும்பாலும் இயற்கையான முறையில் பெரபட்டவையா என்று கேட்டால்? அது ஒரு கேள்விகுறி தான்.
முட்டைகளில் பல வகை உள்ளது என்று கூறலாம். அதில் குறிப்பாக சிறந்ததும், பரிந்துரைக்கப்படுவதும், நம் நாட்டுக் கோழி முட்டைகள் தான். முட்டைகள் உணவிற்காக மட்டுமல்லாது, சரும அழகை அதிகப்படுத்தவும், தலை முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றது. இத்தகைய பலன்களை கொண்டுள்ள முட்டையை பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள விரும்புகின்றீர்கள் என்றால், மேலும் படியுங்கள்:
முட்டையைப் பற்றித் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள் (Facts To Know About Egg)
முட்டை (egg) ஒரு நல உணவு என்பதை கடந்து, அதை பற்றி பலருக்கும் தெரியாத, அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரசியமான தகவல்கள் உங்களுக்காக இங்கே:
- முட்டையில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது.
- இதில் பாதுகாப்பான கொழுப்பு சத்து உள்ளது. அதனால் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காது.
- சைவம், அசைவம் என்கின்ற வாதங்களையும் கடந்து பெரும் அளவு மக்களால் உலகளவில் உண்ணப்படும் உணவு இது.
முட்டையில் நிறைந்துள்ள சத்துக்கள் (Nutritional Content Of Egg)
முட்டையில் 13 தேவையான் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கி உள்ளது. இதில் அதிக தரமான புரத சத்து நிறைந்துள்ளது. ஒரு சராசரி முட்டையில் 7௦ கலோரிகள் நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவில் உயர் தர புரதம், ரைபோப்லவின் மற்றும் செலெனியம் நிறைந்துள்ளது.
2 பெரிய முட்டையில் நிறைந்துள்ள சத்துக்கள்:
- கலோரிகள் – 16௦
- கொழுப்பு – 11 கிராம்
- கொலஸ்ட்ரால் – 400 மில்லி கிராம்
- சோடியம் – 13௦ மில்லி கிராம்
- கர்போஹைட்ரேட் – 1 கிராம்
- புரதம் – 13 கிராம்
- வைட்டமின் – A 12%
- போலேட் – 1௦%
- வைட்டமின் – B5 14%
- வைட்டமின் – B12 18%
- வைட்டமின் – B2 30%
- பாஸ்பரஸ் – 18%
- செலெனியம் – 44%
முட்டையில் நிறைந்துள்ள வைட்டமின்களின் விவரங்கள்:
வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E, வைட்டமின் B12, வைட்டமின் B5, வைட்டமின் B2
முட்டையில் உள்ள பிற சத்துக்கள்
- இரும்பு
- போலேட்
- கோளின்
- பயொடின்
- பாலிக் அமிலம்
- ஐயோடின்
- பாஸ்பரஸ்
- செலெனியம்
- ஒமேக 3 கொழுப்பு அமிலம்
முட்டையில் கிடைக்கும் பலன்கள் (Benefits Of Egg) :
குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டையாவது தரச் சொல்லி மருத்துவர்களும், பெரியவர்களும் பரிந்துரைப்பார்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் வயது வரம்பின்றி பொருந்தும். நல்ல ஆரோக்கியமான நாட்டுக் கோழி முட்டையில் அனைத்து சத்துக்களும் உள்ளன. மேலும் இது உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றது. இதை பற்றித் தெரிந்து கொள்ள, உங்களுக்காக சில தகவல்கள இங்கே;
1. இருதய நோய் மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகளை குறைக்கும் (Reduce Risk Of Heart Disease And Stroke) :
பலருக்கும் முட்டையை (egg) பற்றினத் தவறான கருத்து உள்ளது. அதாவது, முட்டையில் கொழுப்பு சத்து இருப்பதால், அது இருதய ஆரோக்கியத்திற்கு ஏற்றது இல்லை எம்பதாகும். மாறாக, முட்டையில் இருக்கும் சரியான அளவில் இருக்கும் கொழுப்பு சத்து அப்படி எந்த விதமான இருதய நோயையும் அல்லது பக்கவாதத்தையும் உண்டாக்குவதில்லை என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அனைவரும், குறிப்பாக நீரழிவு நோய் இருப்பவர்களும், முட்டையை உண்ணலாம்.
2. பலமான தசைகள்(Strong Muscles) :
முட்டையில் இருக்கும் புரதம் தசைகள் பலமாகவும், வலுவாகவும் ஆக உதவுகின்றது. இதனால், நல்ல ஆரோகியதோடு வாழ இது உதவுகின்றது.
3. மூளையின் வளர்ச்சி (Brain Development) :
முட்டையில் இருக்கும் விட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அணுக்கள் சீராக வேலை செய்ய உதவுகின்றது. இது மூளை, நரம்பு மண்டலம், மற்றும் அணுக்களின் வளர்ச்சி போன்றவற்றுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. மேலும் ஞாபக சக்தியை இது அதிகரிகின்றது.
4. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு சக்தி (immunity) :
முட்டையில் அதிக அளவு வைட்டமின் A மற்றும் வைட்டமின் B-12, மற்றும் செலெனியம் உள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப் பெரிதும் உதவுகின்றது. இதனால் நல்ல ஆரோக்கியமாக வாழ முடியும்.
5. கர்ப்பகாலத்தில் பெரிதும் உதவும் (Can Help Greatly In Pregnancy) :
கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தினமும் நல்ல சத்தான நாட்டுக் கோழி முட்டையை எடுத்துக் கொண்டால், தாயும், சேயும் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கலாம். இது குறிப்பாக கற்பத்தில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சியைப் பெற உதவுகின்றது.
6. கண்களின் ஆரோக்கியம் (Improves Eye Health) :
முட்டையில் இருக்கும் லுடீன், மற்றும் ஜீசேந்தின் போன்ற சத்துக்கள், கண்களை சுற்றி இருக்கும் தசைகளுக்கு பலமளிப்பதோடு, வயதாகும் போது கண் பார்வை குன்றுவது, மலைக் கண் நோய் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. இதில் இருக்கும் வைட்டமின்கள் நல்ல கண் பார்வையை அதிகப்படுத்துகின்றது.
7. உடல் எடை குறைய உதவும்:
முட்டையில் நல்லத் தரமான புரத சத்து இருப்பதால், இது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்க உதவுகின்றது. மேலும் இதில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதால், எவ்வளவு எடுத்துக் கொண்டாலும், உடல் எடையை அதிகரிக்காது. அதனால் இதனை எந்த பயமும் இன்றி உண்ணலாம்.
8. நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது (Increases Good Cholesterol) :
நாட்டுக் கோழி முட்டையில் நல்ல கொழுப்பு நிறைந்துல்லாது. இது எந்த விதத்திலும் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பு சத்தை அதிகரிக்காது.
9. ஒமேக 3 நிறைந்துள்ளது (Contains Omega-3) :
முட்டையில் ஒமேக 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. இது உடல் நலத்திற்கு பெரிதும் தேவைப்படுகின்றது. இந்த கொழுப்பு அமிலம் இருதய நோய் அறிகுறிகளை குறைத்து, இருதயம் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க உதவுகின்றது.
தேவையான அமினோ அமிலம் (Rich In Protein And Essential Amino Acids) :
முட்டையில்த் தேவையான அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது தசைகள் மற்றும் எலும்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, பலப்படுத்துகின்றது. குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.
ஏன் நாட்டுக் கோழி முட்டைகளை உண்ண வேண்டும்? (Why Eat Country Chicken Eggs?)
இன்று குறைந்த விலையில் கிடைகின்றது என்பதற்காக பெரும்பாலான மக்கள் பிராய்ளர் கோழி முட்டைகளை வாங்குகின்றனர். ஆனால் இது அதிக உடல் நலக் கேடுகளை உண்டாக்கின்றது என்பதை அனைவரும் அனுபவப்பூர்வமாக தெரிந்து கொன்றிப்பார்கள். சற்று விலை அதிகமாக இருந்தாலும், நாட்டுக் கோழி முட்டைகளை எந்த பயமும் இன்றி அனைவரும் உண்ணலாம். நாட்டுக் கோழி முட்டைகளில் இருந்து உங்களுக்கு கிடைக்கும் சில உடல் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கே பார்க்கலாம்:
- இது எந்த மருந்துகளும் கோழிகளுக்குத் தரப்படாமல், இயற்கையாகவே கோழிகள் இடுவது
- இதில் இயோர்க்கையாக அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது
- இதில் சீரான மற்றும் தேவையான அளவு வைட்டமின் C மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது
- கோழிகள் சுறுசுறுப்பாக இயற்கையாக இறை மேய்ந்து உண்பதால், இயற்கையாகவே இது ஆரோக்கியமான முட்டையாகவும் மாறுகின்றது
- தசைகளை நல்ல பலமாக்கும்
- மூளையின் செயல்பாட்டை மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும்
- அதிக சக்தியைத் தரும்
- எவ்வளவு எடுத்துக் கொண்டாலும், உடல் எடை அதிகரிக்காது
- சருமதிற்குத் தேவையான தாது சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் கிடைக்கும்
- நல்ல தலை முடி வளர்சிக்கு இது உதவியாக இருக்கும்
வெள்ளை முட்டை மற்றும் பழுப்பு முட்டை – வேறுபாடுகள் (Difference Between Brown Egg And White Egg) :
முட்டைகள் பொதுவாக இரண்டு நிறங்களில் கிடைகின்றன. ஒன்று வெள்ளை நிறம் மற்றொன்று பழுப்பு நிறம். இவை இரண்டிற்கும் நிச்சயம் சில வேறுபாடுகள் உள்ளது. அவற்றைத் தெரிந்துக் கொள்வதால், நீங்கள் சரியானத் தேர்வை செய்யலாம்.
இந்த இரண்டு முட்டைகளுக்கும் இருக்கும் வேறுபாடுகள் இங்கே:
வெள்ளை முட்டை
- செயற்கையாக வளர்க்கப்படும் கோழிகள் இடுவது
- செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவு தரப்பட்டு வழக்கப்படும் கோழிகள் இடுவது
- ஒமேக 3 கொழுப்பு அமிலம் குறைவான அளவு உள்ளது
- ஆரோக்கியம் குறைவாக இருக்கும்
- கோழிகளுக்கு செயற்கை உணவுகள் உடல் எடையை அதிகரிக்கக் கொடுக்கப்படுவதால், முட்டையின் அளவு பெரிதாக இருக்கும்
பழுப்பு முட்டை
- பொதுவாக நாட்டுக் கோழி முட்டைகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்
- இயற்கையாக வெளிப் புறங்களில் தானாக இறைத் தேடி உண்ணும் நாட்டுக் கோழிகள் இடுவது
- ஒமேக 3 கொழுப்பு அமிலம் அதிக அளவு உள்ளது
- அதிக ஆரோக்கியமானது
- இயற்க்கை உணவுகளைத் தேடி உண்பதாலும், ஆரோக்கியமான புழு மற்றும் இலைகளை உண்பதாலும், நாட்டுக் கோழிகள் பொதுவாக சிறிய அளவு இருப்பதாலும், முட்டை சிறிதாக இருந்தாலும், அதிக ஆரோக்கியம் நிறைந்தாக இருக்கும்
சரும பாதுகாப்பிற்கு முட்டையின் பங்கு! (Benefits Of Egg For Skin Care) :
உடல் நலத்திற்கு மட்டுமன்றி, சரும ஆரோக்கியத்திற்கும் முட்டை பெரிதும் உதவுகின்றது. முட்டையின் வெள்ளைக் கரு, சரும பாதுகாப்பிற்கும், மேலும் பல பலன்களைப் பெறுவதற்கும் பயன்படுத்தப் படுகின்றது. முட்டை எப்படி உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றது என்று தெரிந்து கொள்ள, இங்கே சில குறிப்புகள்;
1. சுருக்கங்கள் மற்றும் மெல்லியக் கோடுகளை போக்கும் (Treats Wrinkles And Fine Lines) :
பொதுவாக 3௦ வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு முகத்தில் சுருக்கங்களும், மெல்லிய கோடுகளும், வயதாவதர்க்கான அறிகுறியாய் தோன்றும். இது 40 வயதை கடந்தவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஆனால், இதனை முட்டையின் உதவியோடு சரி செய்து விடலாம். முட்டையின் வெள்ளைக் கரு, கடலை மாவு மற்றும் கஸ்தூரி மஞ்சள்த் தூள், ஆகிய அனைத்தையும் ஒன்றாக கலந்து பேஸ் பாக் செய்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், இத்தகைய பிரச்சணைகள் குறைந்து நல்ல அழகிய மற்றும் இளமையான தோற்றம் கிடைக்கும்.
2. துளைகளை இருக்கும் (Tightens And Shrinks Large Pores) :
முகத்தில் மறுக்களாலும், முதிர்வாலும், சிறு துளைகள் தோன்றுவதுண்டு. இவை முகத்தின் அழகை பாதிக்கக் கூடும். இதனை போக்க, முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சிறிது எலுமிச்சைப் பழ சாறு சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் சுடு தண்ணீரில் முகத்தை கழுவினால் இத்தகைய பிரச்சனைகள் நாளடைவில் குறையும்.
3. எண்ணை பிசுக்கு இருக்கும் சருமத்தை சரி செய்யும் (Treats Oily Skin) :
உங்கள் சருமம் அதிகம் எண்ணை பிசுக்குடன் இருந்தால், முட்டையின் வெள்ளைக் கரு கொண்டு நீங்கள் எளிதாக சரி செய்து விடலாம். இதற்கு முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது எலுமிச்சைப் பழ சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விட வேண்டும். இது எண்ணை பிசுக்கு இருக்கும் சருமத்திற்கு ஒரு நல்லத் தீர்வாக இருக்கும்.
4. வறண்ட சருமத்தை போக்கும் (Lifts Skin) :
முட்டை சருமத்திற்கு நல்ல ஈரத்தன்மையைத் தரும். இதன் வெள்ளைக் கரு உங்கள் சருமம் எப்போதும் பொலிவுடனும், நல்ல போஷாக்குடனும் இருக்க உதவுகின்றது. இதனை தொடர்ந்து பேஸ் பாக் செய்து பயன்படுத்தி வந்தால், உங்கள் வறண்ட சருமம் மறைந்து, நல்ல பலபலப்பான சருமம் உண்டாகும்.
5. உப்பிய கண்கள் (Treats Eye Puffiness) :
பலருக்கும் கண்களை சுற்றி உப்பிய தோற்றம் உண்டாகும். இதனால் முகம் முதிர்வடைந்தது போலவும், சோர்வாகவும் தோன்றும். முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தி பேஸ் பாக் செய்து முகத்தில் மசாஜ் செய்து வந்தால், இந்த பிரச்சனை குறைந்த நல்ல இளமையான தோற்றம் கிடைக்கும். இது கண்களுக்கும் நல்ல ஆரோகியத்தைத் தரும்.
6. கருமுள்ளை அகற்றும் (Get Rid Of Blackheads):
பலருக்கும் முகத்தில் கருமுள் இருப்பது சற்று அசௌகரியமாகவும், தங்களது முக அழகை அது குறைப்பது போலவும் தோன்றும். எனினும், இதனை எளிதாக முட்டையின் வெள்ளைக் கரு கொண்டு சரி செய்து விடலாம். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தேய்த்து நன்கு காய விட்டு பின் சுடு தண்ணீரில் முகத்தை கழுவி வந்தால், கருமுள் நாளடைவில் மறைந்து விடும்.
7. தழும்பு மற்றும் முகப்பருவை போக்கும்(Prevents Acne And Acne Scars):
முட்டையின் வெள்ளைக் கரு முகத்தில் அவ்வப்போது தோன்றும் முகப்பரு மற்றும் பருக்களால் உண்டான தழும்புகளை போக்க உதவுகின்றது. இதில் இருக்கும் வைட்டமின்கள் முகத்திற்குத் தேவையான சத்துக்களைக் கொடுத்து, முகப்பருவை போக்க உதவுகின்றது.
8. முகத்தில் இருக்கும் ரோமங்களை அகற்றும் (Remove Facial Hair):
முட்டை முக அழகை அதிகப்படுத்த மட்டுமல்லாது, முகத்தில் தேவையற்ற ரோமங்களை போக்கவும் உதவுகின்றது. இதனால் முக அழகு மேலும் அதிகரிகின்றது.
முக அழகை அதிகப்படுத்த எப்படி முட்டையை பயன்படுத்தி பேஸ் பாக் செய்வது? (Methods To Prepare Egg Face Mask / Pack)
நீங்கள் எப்படி முட்டையை பயன்படுத்தி பேஸ் பாக் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள், உங்களுக்காக, இங்கே சில எளிய ஆனால் அதிக பலனுள்ள குறிப்புகள்:
1.முட்டை மற்றும் தேன் பேஸ் பாக் (Egg And Honey Face Mask)
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு ஒன்று
- இரண்டு தேக்கரண்டி தேன்
- சிறிது கடலை மாவு
செய்முறை
- அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்
- முகத்தில் தடவி, சுழற்சி முறையில் சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
- சிறுது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
- இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
2. முட்டை மற்றும் எலுமிச்சை பழம் (Egg And Lemon Juice Mask For Closing Pores)
தேவையான பொருட்கள்
- ஒரு முட்டையின் வெள்ளைக் கரு
- பாதி எலுமிச்சை பழத்தின் சாறு
செய்முறை
- இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
- சிறிது நேரம் அப்படியே காய விடவும்
- பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
- இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
3. உப்பிய கண்களுக்கு முட்டை பேஸ் பாக்
தேவையான பொருட்கள்
- ஒரு முட்டையின் வெள்ளைக் கரு
- சிறிது தேன்
- சிறிது கடலை மாவு
- சிறிது தயிர்
செய்முறை
- இந்த பொருட்களை ஒன்றாக கலந்து கொள்ளவும்
- இதனை முகத்தில், குறிப்பாக கண்களுக்கு கீழ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நன்கு செய்தது மசாஜ் செய்யவும்
- சிறிது நேரம் விட்டு விட்டு, பின் மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்
தலைமுடி வளர்ச்சிக்கு முட்டை (Benefits Of Egg For Hair Care) :
தலை முடி நன்கு வளர முட்டைக்கு பெரிய பங்கு உள்ளது. முட்டையில் இருக்கும் புரதம் மற்றும் விட்டமின்கள், தலைமுடி நல்ல போஷாக்குடன் வளர உதவுகின்றது.
- முட்டையின் வெள்ளைக் கரு தலைமுடி நல்ல அடர்த்தி பெற உதவுகின்றது
- முட்டையின் வெள்ளைக் கரு தலைமுடி நல்ல பலபலப்பைப் பெற உதவுகின்றது
- முட்டையின் வெள்ளைக் கருவை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது தலைமுடி
- நல்ல நீளமாக வளரும்
- தலைமுடி மேலும் நல்ல கருமையான நிறத்தையும் பெரும்
- தலைமுடி உதிர்வும் குறையும்
தலைமுடி வளர்ச்சிக்கு முட்டை பாக்
உங்களுக்காக எளிய முறையில் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்த முட்டை பாக்:
1. எண்ணை பிசுக்கு உள்ள தலைமுடிக்கு பாக் (Egg White Mask For Oily Hair) :
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- எலுமிச்சை பழச் சாறு சிறிதளவு
செய்முறை
- இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்
- இந்த கலவையை தலைமுடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தடவவும்
- சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்
- பிறகு குளிர்ந்த நீரில் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசவும்
- இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
2. வறண்ட தலை முடிக்கு முட்டை பாக் (Egg White Mask For Dry Hair)
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- தயிர் கால் கப்
- தேங்காய் எண்ணை சிறிதளவு
- கற்றாளை
செய்முறை
- முதலில் சிறிது தேங்காய் எண்ணையை எடுத்து, மிதமாக சூடு செய்து கொள்ளவும்
- இந்த எண்ணையை தலை முடி வேர் முதல் நுணி வரை நன்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்
- பின் முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் தாயிர் மற்றும் கற்றாளை சதை ஆகியவற்றை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்
- இதனை தலை முடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தேய்த்து விடவும்
- அப்படியே ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை விட்டு விடவும்
- பின் குளிர்ந்த நீரில் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைமுடியை நன்கு அலசவும்
3. ஆரோக்கியமான கூந்தலுக்கு முட்டை பாக் (Eggs And Mayonnaise Mask For Frizzy Hair)
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- மயோனிஸ் சிறிதளவு
செய்முறை
- இரண்டு பொருட்களையும் நன்கு காலந்து கொள்ளவும்
- பின் தலை முடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தேய்க்கவும்
- சிறிது நேரம் அப்படியே விட்டு விடவும்.
- சற்று காயும் போது, குளிர்ந்த நீரில் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து தலைமுடியை அலசி விடவும்
4. தலை முடி போஷாக்கு பெற முட்டை பாக் (Eggs And Yogurt Hair Conditioner)
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- தயிர்
- வெந்தயம்
- தேங்காய்
- எண்ணை
- எலுமிச்சை பழச் சாறு
செய்முறை
- முதலில் தேங்காய் எண்ணையை மிதமாக சூடு செய்து கொண்டு தலை முடியில் நன்கு தேக்க வேண்டும்
- பின் வெந்தயத்தை சிறிது நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- அரைத்த வெந்தயத்துடன் முட்டையின் வெள்ளைக் கரு, சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை பல சாற்றை சேர்க்க வேண்டும்
- இவை அனைத்தையும் நன்கு கலந்து தலை முடியின் வேர் முதல் நுணி வரை தேக்க வேண்டும்
- அப்படியே 2 மணி நேரம் விட்டு விடவும்
- பின் குளிர்ந்த நீரில் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து நன்கு அலசவும்
- இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
5. முட்டை மற்றும் பால் பாக் (Eggs, Milk And Honey Mask ) :
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- சிறிது பால்
- சிறிது தேன்
செய்முறை
- முட்டையின் வெள்ளைக் கரு, பால் மற்றும் தேன், இவை மூன்றையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- இதனை தலை முடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தேக்க வேண்டும்
- 2 மணி நேரம் வரை அப்படியே விட்டுவிட வேண்டும். பின் குளிர்ந்த நீரில் தரமான ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து அலசி விட வேண்டும்
- இதனை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்
6. முட்டை மற்றும் ஆலிவ் எண்ணை (Eggs And Olive Oil Mask)
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- ஆலிவ் எண்ணை
செய்முறை
- இந்த இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்
- இதனை தலை முடியில் நன்கு தேய்த்து சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும்
- சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சீயக்காய் தேய்த்து அலசி விடவும்
- இதனை வாரம் இரண்டு முறை செய்யலாம்
7. தலைமுடி வளர்ச்சிக்கு (Egg For Hair Growth):
தேவையான பொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- மருதாணிப் பொடி அல்லது பச்சை இலைகள்
- அருகம் புள் சிறிதளவு
- தேங்காய் எண்ணை
- தேங்காய் பால் சிறிதளவு
செய்முறை
- முதலில் தேங்காய் எண்ணையை மிதமாக சூடு செய்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்
- அதன் பின் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு கலந்து, மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- இந்தக் கலவையை தலை முடியில் நன்கு தேய்த்து சிறிது நேரம், குறைந்தது 2 மணி நேரம் விட்டு விட வேண்டும்
- பின் குளிர்ந்த நீரில் தலை முடியை நன்கு சீயக்காய் அல்லது ஷாம்பூ தேய்த்து அலச வேண்டும்
8. தலை முடி உதிர்வை குரைத்து அடர்த்தியாக வளர (Egg Mask To Prevent Hair Fall And Get Dense Hair) :
தேவையானபொருட்கள்
- முட்டையின் வெள்ளைக் கரு
- எலுமிச்சைப் பழச் சாறு
- சோற்றுக் கற்றாளை சதை
- தயிர்
- தேங்காய்ப் பால்
செய்முறை
- அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மசித்துக் கொள்ள வேண்டும்
- இதனை தலை முடியின் வேர் முதல் நுணி வரை நன்கு தேக்க வேண்டும்
- 2 மணி நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
- பின் குளிர்ந்த நீரில் ஷாம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து அலச வேண்டும்
- இதனை வாரம் 2 முறையாவது செய்து வர, தலை முடி நன்கு அடர்த்தியாக வளரும்
கேள்வி பதில்கள் (FAQ’s)
1. எந்த முட்டை உடலுக்கு நல்லது? நாட்டுக் கோழி முட்டை அல்லது பிராயிலர் கோழி முட்டை?
நாட்டுக்கோழி முட்டையே உடலுக்கு நல்லது. இது கோழி இயற்கையாக மண்ணில் கிடைக்கும் தாவரம் மற்றும் தீவனங்களை உண்டு வளருவதால், முட்டையிலும் எந்த நச்சுத் தன்மையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் பிராயிலர் கோழி முட்டை, விரைவாக கோழி கணம் அதிகரிக்க வேண்டும் என்பதாலும், அதிகமாக முட்டை இட வேண்டும் என்பதற்காகவும், சில ரசாயனம் கலந்து உணவுத் தரப்படுகின்றது. இது கோழியும், அதன் முட்டையும் ஆரோக்கியம் இல்லாமல் போகச் செய்யும். மேலும் நாட்டுக் கோழி முட்டையில் அதிகம் ஒமேக 3 கொழுப்பு சத்து உள்ளது. இது உடலுக்கு நன்மைகளைத் தரும்.
2. சரும மாதுகாப்பிர்க்காக வெள்ளை முட்டையை பயன்படுத்தலாமா?
சரும பாதுகாப்பு மற்றும் தலை முடி பாதுகாபிர்க்காக நீங்கள் வெள்ளை முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தலாம். இது எந்த வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.
3. தினமும் முட்டை உண்பதால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்குமா?
நாட்டுக் கோழி முட்டையை நீங்கள் தினமும் உண்ணலாம். இது எந்த விதத்திலும் உங்கள் உடலில் கொழுப்பு சத்தை அதிகப்படுத்தாது. ஆனால், வெள்ளை முட்டையை தினமும் உண்பதை தவிர்ப்பது நல்லது.
4. முட்டை உண்ண எது ஏற்ற நேரம்?
முட்டையை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக காலை வேளையில் உண்பது உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரும். இதனால் நீங்கள் அந்த நாளைக்குத் தேவையான கலோரிகளை பெற இது உதவும். மேலும் ஆரோக்கியமாக அந்த நாளை கடக்கவும் உதவும்.
5. தினமும் முட்டையை சருமம் மற்றும் தலை முடி பராமரிப்பிற்கு பயன்படுத்தலாமா?
வாரம் இரு முறை முட்டையை தலை முடி மற்றும் சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்துவது நல்லது, இதனை தினமும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை.
6. எத்தனை முட்டை ஒருவர் ஒரு நாளைக்கு உண்ணலாம்?
ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு முட்டை உண்ணலாம். இதுவே போதுமான அளவாக இருக்கும்.
மேலும் வாசிக்க –
Egg Face Mask For Soft Skin in Hindi
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Lifestyle
திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் ! ( Tips For Happy Married Life In Tamil)
Deepa Lakshmi
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi