Lifestyle

மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

Swathi Subramanian  |  Dec 4, 2019
மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

கீழாநெல்லி முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படுகின்றது. சின்ன உடல்நல பாதிப்பு என்றால்கூட மருத்துவர்களிடம் ஓடிச்செல்லும் பழக்கம்தான் நம்மிடம் உள்ளது. மிகப் பெரிய நோய்களைக்கூட வீட்டில் இருந்தபடியே எளிதாக சரிசெய்யக்கூடிய மூலிகை கீரைதான் ‘கீழாநெல்லி’.

கீழாநெல்லியின் இலைகளில் ‘பில்லாந்தின்’ என்னும் மூலப்பொருள் இருப்பதால், இதன் இலைகளில் கசப்புச்சுவை மிகுதியாக இருக்கும். இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. மேலும் தாவரம் முழுவதும் பொட்டாசியம் சத்து மிகுதியாக உள்ளது.

கீழாநெல்லி இலைகளைத் தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப் பாகம் முழுவதும் கீழ் நோக்கிய பசுமையான சிறு பூக்களும் காய்களும் தொகுப்பாகக் காணப்படும். இதனாலேயே கீழாநெல்லி என்ற பெயர் பெற்றது. இதற்கு கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி (keelanelli) என்ற வேறு பெயர்களும் உண்டு.

கீழாநெல்லியின் ஊட்டச்சத்து மதிப்புகள் (Nutrition values of keelanelli )

ஈரமான இடங்கள், வயல் வரப்புகள், பாழ் நிலங்களில் சாதாரணமாக காணப்படும் கீழாநெல்லியில் ஏரளாமான சத்துக்கள் நிறைந்துள்ளது. கீழாநெல்லி இலைகளை அப்படியே அல்லது சாறாகவோ அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். கீழாநெல்லியின் இருக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் குறித்து இங்கு காண்போம். 

கலோரிகள் – 37 கி,
கொழுப்பு – 1 கி,
கார்போஹைட்ரேட் – 7 கி,
பைபர் – 28 ,
மினரல்ஸ் – 23,
விட்டமின் சி   43 கி,
பொட்டாசியம் 65 கி. 

twitter

கீழாநெல்லியின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits)

கீழாநெல்லி இலைகளை அப்படியே அல்லது சாறாகவோ அன்றாட உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். மிகவும் மலிவாக கிடைக்கும் கீழாநெல்லியில் (keelanelli) உள்ள நன்மைகள் குறித்து இங்கு விரிவாக பாப்போம்.

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் (Anti Microbial Properties)

விஷக் கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை விலக்குவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுத்தலாம். கீழாநெல்லி வேரை அரைத்து பசும்பாலுடன் கலந்து, காலை, மாலை 3 நாட்கள் கொடுக்க உடல் சூடு குறைந்து குளிர்ச்சி பெறும். கீழாநெல்லி தோசையை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் உடலில் இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் அதிகரிக்கும். இதன்மூலம் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த (Improve liver health )

கீழாநெல்லி கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையது என பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர். கல்லீரல் கோளாறுகளை மிக விரைவில் குணப்படுத்த கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். அத்துடன் கல்லீரலில் சேர்ந்துள்ள அசுத்தங்களை வெளியேற்ற கீழாநெல்லி உதவி புரிகிறது.

pixabay

சிறுநீரக கற்களைத் தடுக்க (Prevent kidney stones )

சிறுநீரகக் கோளாறுகளை அரிய முறையில் சரிசெய்யும் ஒரு எளிய மூலிகை கீழாநெல்லி. நன்கு சுத்தம் செய்த கீழாநெல்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஒரு லிட்டர் நீராக சுருங்கி வரும் போது அதை சேகரித்து அருந்தி வர சிறுநீரகக் கற்கள் எல்லாம் நொறுங்கி, துகளாகவோ அல்லது கரைந்தோ சிறுநீரின் வழியே வெளியே வந்துவிடும். மேலும் இது உடலின் வெப்பம் நீக்கி குளிர்ச்சியை உண்டாக்கும். இதனை தொடர்ந்து அருந்தி வர வேதனை தந்து வந்த சிறுநீரக பாதிப்புகள் எல்லாம் நீங்கி விடும்.

மேலும் படிக்க – இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

புற்றுநோயிலிருந்து பாதுகாக்க (Help to protect against cancer )

கீழாநெல்லியின் சாரங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வருகிறது. உடல் செயல்பாடுகளால் உண்டாகும் கழிவு உறுப்புகளை பாதிக்காமல் கீழாநெல்லி தடுப்பதாக இன்றைய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. புற்றுநோய் வைரஸ்களின் பெருக்கத்துக்கு காரணமான நொதியைத் தடுத்து நிறுத்தும் வீரியம் கீழாநெல்லிக்கு இருக்கிறது. கரிசாலை, கீழாநெல்லி, பொன்னாங்கண்ணி, மூக்கிரட்டை ஆகியவற்றுடன் மிளகு, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாது. 

மஞ்சள் காமாலையை குணப்படுத்த (Treats Jaundice)

மஞ்சள் காமாலையை குணப்படுத்த  கீழாநெல்லியை தவிர வேறு இயற்கை மருந்து கிடையாது. கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாக  குணமாகும். அல்லது ஒருபிடி கீழாநெல்லி (keelanelli) இலை மற்றும் காய்கள் எடுத்து இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி உணவுக்கு முன்பு 100 மிலி வரை குடித்து வந்தாலும் மஞ்சள் காமாலை குணமாகும். 

pixabay

நீரிழிவு நோயாளிகளுக்கு (Anti Diabetic Properties)

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோயாளிகளுக்கு  மனிதர்களுக்குள்ள மற்றொரு பெரிய நோயாக உள்ளது. இந்த நோய்க்கும்  கீழாநெல்லி தீர்வை தருகிறது. கீழாநெல்லி இலைகளை அரைத்து பாலுடன் கலந்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். 

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்தது (Antioxidant Properties)

கீழாநெல்லி ஏராளமான ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமம் மற்றும் உடலில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட துணை புரிகிறது .மேலும் உடலில் உள்ள நச்சுகளை அகற்றுகிறது. கீழாநெல்லியில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகமாகவும், கலோரிகள் மிகவும் குறைவாக இருக்கும் இது, உடலுக்கு மிகவும் நல்லது.

மேலும் படிக்க – பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த யோகார்டின் ஆரோக்கிய மற்றும் சரும பாதுகாப்பு நன்மைகள்!

இரத்த சோகையை குறைக்க (Reduce Anemia problems)

ரத்த குறைவினால் ஏற்படும் சோகை வியாதிக்கு கீழாநெல்லி ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது. கீழாநெல்லி செடியை  வேருடன் எடுத்து சுத்தம் செய்து, அதனுடன் கரிசலாங்கண்ணி இலையை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு பாலுடன் காலை, மாலை இருவேளை உட்கொண்டு வந்தால் ரத்தசோகை நோய் நீங்கும். மேலும் கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகங்களின் வீக்கத்தையும் குறைத்து இரத்தத்தை சுத்தமடைய செய்கிறது.

twitter

தலைவலிக்கு (cure Headache)

நல்லெண்ணெய் இரண்டு டீஸ்பூன், கீழாநெல்லி வேர், சீரகம் மற்றும் பசும்பால் ஆகியவற்றை நன்றாக அரைத்து வடிகட்டி அந்தச் சாற்றைக் குடித்தால் தலைவலி குணமடையும். அல்லது கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமமாக கலந்து நல்லெண்ணெயில் எரித்து முகர்ந்து வர தீராத தலைவலி, நீர் வடிதல் ஆகியவை காணாமல் போகும். ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை இரண்டு டம்ளர் நீரில் இட்டு பாதியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேளைகளும் குடிக்க தலைபாரம் குறையும்.

கண் பிரச்சினைளை சரி செய்ய (Good for treating eye problems )

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு  எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும். கீழாநெல்லி இலைகளை எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் குளிர்ச்சி தரும். கண்களில் சிவப்பு தன்மை, எரிச்சலை போக்கி பார்வை  தெளிவாகிறது. 

இதுமட்டுமாமால் குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுப் பிரச்னைகள், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்ப் பிரச்னைகள், பசியின்மை, தீராத அழுகிய புண்கள், வீக்கம் என என பல்வேறு பிரச்னைகளை தீர்த்து வைக்கிறது கீழாநெல்லி.

மேலும் படிக்க – ஆரோக்கிய வாழ்விற்கு வைட்டமின் டி – முக்கியத்துவம் & வைட்டமின் டி சத்து நிறைந்த ஆதாரங்கள்!

அழகு நன்மைகள் (Beauty benefits)

கீழாநெல்லி உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருவது மட்டுமின்றி சரும அழகை பராமரிபதிலும் முக்கிய பங்காற்றுகிறது. கூந்தல் மற்றும் சரும நலனுக்கு கீழாநெல்லியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க (Promotes hair growth )

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க 1 கப் கரிசலாங்கண்ணி சாறை, தேங்காய் எண்ணெய் சேர்த்து இரும்பு சட்டியில் காய்ச்சி வேண்டும். ஈரப்பதம் போய் ஓசை அடங்கியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய்யை சேகரித்து வைத்து தினமும் முடியின் வேர்களில் தேய்த்து வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

pixabay

பொடுகை அழிக்க (Treats dandruff )

முடி உதிர்தலுக்கு மிக முக்கிய காரணம் பொடுகுதான். பொடுகை நிரந்தரமாக போக்கும் சக்தி வாய்ந்த மூலிகை கீழாநெல்லி. கீழாநெல்லி எண்ணெய் பொடுகை அறவே நீக்க உதவுகிறது. இந்த எண்ணெய்யை நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள் : 

நெல்லிக்காய் – 100 கிராம்,
கீழாநெல்லி இலை – 100 கிராம்,
கறிவேப்பிலை – 100 கிராம்,
செம்பருத்தி பூ – 100 கிராம்,
வெந்தயம் – 25 கிராம்,
கரிசலாங்கண்ணி இலை – 50 கிராம்,
தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர். 

செய்முறை:

முதலில் மேலே கொடுத்துள்ள  மூலிகைகளை வெயிலில் காயவைத்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் சுத்தமான வாணலியை வைத்து மூலிகை மற்றும் தேங்காய் எண்ணெயை ஊற்றி கொதிக்க விடவும். மூலிகையின் தன்மை எண்ணெயில் இறங்கி நிறம் மாறத்தொடங்கிய உடன், அடுப்பை அணைத்து எண்ணெயை ஆறவிடவும். மூன்று நாள்கள் கழித்து எண்ணெய்யை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றிவைத்துப் பயன்படுத்தவும். இந்த எண்ணெயை வாரம் 3 நாள்கள் பயன்படுத்தி வர பொடுகு நீங்கி கூந்தல் செழித்து வளரும்.

தோல் நோய்க்கு சிகிச்சையளித்தல் (Treating skin disease )

அனைத்து விதமான தோல் நோய்க்கும் கீழாநெல்லி சிறந்த மருந்தாக உள்ளது. கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் தோல் நோய்கள் குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். மேலும் கீழா நெல்லி இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்துக் கட்ட காயங்கள் கூட குணமாகும்.

twitter

பருக்களைக் குறைக்க (Reduce pimples)

சிலருக்கு பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. இவர்கள் சிறு சிறு துண்டுகளாக்கின கீழாநெல்லி செடியின் வேர் சிறுதளவையும், கொட்டை நீக்கிய கடுக்காய் ஒன்றையும் முதல் நாள் இரவே கொதிநீரில் ஊறவைத்து மறுநாள் அதை அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது தடவி வந்தால்  பருக்கள் இருந்த வடுவே தெரியாமல் அழிந்து விடும். மேலும் பருக்களால் உண்டாகும் பாக்டீரியா தொற்றுகளையும் அழிக்கும் தன்மை கீழாநெல்லிக்கு இருப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 

கீழாநெல்லி பவுடர் தயாரிக்கும் விதம் & அதன் நன்மைகள் (How to make keelanelli powder & its uses )

இன்று சந்தைகளில் அதிகமாக விற்கப்படும் கீழாநெல்லி பவுடரை நாம் எளிதாக வீட்டிலேயே செய்து விடலாம். வீட்டில் செய்யப்படும் பவுடரை சாப்பிடுவதால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது பயப்பட தேவையில்லை.

தேவையான பொருட்கள் :

கீழாநெல்லி இலை – 3 கப்,
தூதுவளை கீரை – 1 கப்,
முடக்கத்தான் கீரை – 1 கப்,
ரோஸ்மேரி இலை – 1/2 கப்.  

செய்முறை : 

கீழாநெல்லி இலை, தூதுவளை கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் ரோஸ்மேரி இலை இவைகளை நிழலில் உலர்த்தி அரைத்து கொள்ள வேண்டும். இந்த பொடியை ஒரு காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைத்து கொள்ள வேண்டும். தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

 

twitter

நன்மைகள்

கீழாநெல்லியால் உண்டாகும் பக்க விளைவுகள் (Side effects )

கீழாநெல்லியில் எண்ணற்ற நன்மைகள் இருப்பினும், அதனை அதிகமாக எடுத்து கொள்ளும் போது சில எதிர்மறை முடிவுகளை தரக்கூடும். 

twitter

வயிற்று வலி (stomach pain)

கீழாநெல்லியைஎச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். கீழாநெல்லியை அளவுக்கு மீறி சாப்பிடும் போது வயிற்று வலி அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பான அல்ல. மேலும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், ஆங்கில மருந்துகள் எடுத்து கொள்ளும் நோயாளிகள் கீழாநெல்லியை தவிர்ப்பது நல்லது. இரத்த உறைவு கோளாறு மற்றும் அறுவை சிகிச்சை செய்ய இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைபடி சாப்பிடலாம்.

கேள்வி பதில்கள் (FAQ’s)

கீழாநெல்லி பவுடரை எப்படி சாப்பிட வேண்டும்? (How do you eat keelanelli powder?)

ஒரு கிளாஸ் மோரில், கீழாநெல்லி பவுடரை கலந்து சாப்பிடலாம். தினமும் காலையில் இதை குடிப்பதால் அல்சர் குணமாகும். கீழாநெல்லி பவுடர், சீரகம் மற்றும் பால், ஒரு துண்டு இஞ்சி இவற்றை ஒன்றாக அரைத்து வடிகட்டி குடிக்கலாம். இது தலைவலியை நீக்கும்.

கீழாநெல்லி எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? (What is keelanelli used for?)

கீழாநெல்லியின் இலைகளும், பழங்களும் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் இருக்கும் மூலப்பொருட்கள் கல்லீரலைப் பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இது சிறுநீரக கற்களையும் எதிர்த்துப் போராடக்கூடும், எனவே இது “ஸ்டோன் பிரேக்கர்” என்றும் கூறப்படுகிறது.

twitter

கீழாநெல்லி ஜூஸ் தயாரிக்க முறை? (how to make keelanelli juice)

கீழாநெல்லி ஜூஸ் தயாரிக்க முதலில் ஒரு கீழாநெல்லி செடியை பறித்து நன்கு கழுவி கொள்ள வேண்டும். இந்த செடியில் இல்லை முதல் வேர் வரை நன்மைகள் தரவல்லது என்பதனால் அப்படியே சிறு. சிறு துண்டுகளாக அறிந்து ஜூஸ் செய்யலாம். தேவைப்பட்டால் வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிட உடல் வலுப்பெறும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Lifestyle