
கரி தூள் சரும அழகை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. நமது சருமத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்படுகிறது. தூசுகள் சரும துளைகளில் அடைத்து கொள்வதால் சருமத்தில் இறுக்கம் உண்டாகி பிரச்சனைகள் உண்டாகிறது. கரி இந்த தூசுகளை அகற்றி சருமத்தை முழுவதுமாக சுத்தமாக்குகிறது.
சமீப காலங்களில் சார்க்கோல் என்று சொல்லப்படும் கரியின் பயன்பாடு குறித்து பல அறிய விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இயற்கை மருந்துகளில் தனித்து நிற்கக்கூடிய அளவிற்கு இது மிகுந்த சுவாரஸ்யமான தன்மைகளைக் கொண்டது, இந்த ஆக்டிவேடட் சார்கோல். தற்போது சார்கோல் மாஸ்க் கிரீம்கள் விற்பனை செய்யப்படுகிறது.
pixabay
இந்த மாஸ்க் க்ரீம் பயன்படுத்துவதால் இறந்த சரும அடுக்குகளை களையாமல் சருமத்தின் அழுக்குகளை, கரும்புள்ளிகளை மற்றும் ரோமங்களை நீக்குவதால் சருமம் புத்துயிர்பெற்று பொலிவுறுகிறது. பீல் ஆப் மாஸ்குகளில் நீங்கள் நினைப்பதை விட அதிக வழிமுறைகள் உள்ளன. அதாவது பல்வேறு உட்பொருட்களை மாற்றி உச்ச பலன்களை அடையும் வரை முயற்சி செய்து உங்களின் குறிப்பிட்ட பிரச்னைக்கு தீர்வுகாண முடியும்.
இந்த மாஸ்க் சருமத்தை புத்துயிர் பெறச்செய்து வெண்மையாக்கி நிறத்தை மேம்படுத்துகிறது. ஒரு தேக்கரண்டி க்ரீமை ஒரு கிண்ணத்தில் எடுத்துகொள்ளவும். அதில் ஐந்து துளிகள் பாதாம் எண்ணையை கலந்து குச்சியை கொண்டு நன்கு கலக்கவும். இந்த மாஸ்க்கை உங்கள் முகம் முழுவதும் பூசி நன்கு காயும் வரை காத்திருந்து பின்னர் மெதுவாக பிரித்தெடுக்கவும்.
பேரழகு மின்னும் பளிங்கு முகம் வேண்டுமா? மங்கு ,கரும்புள்ளிகளை நீக்கும் குங்குமாதி தைலம் !
இத்தனை வாரம் ஒருமுறை செய்து வந்தால் முகம் பொலிவாகும். இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு, மென்மையான மற்றும் பொலிவான தோற்றத்தையும் தருகிறது. உங்கள் அன்றாட அழகு பராமரிப்பு முறைகளில் கரித்தூளை பயன்படுத்துவதையும் வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
pixabay
மாஸ்க் போட்டுவிட்டு கழுவும் போது உங்கள் சருமம் எவ்வளவு பொலிவாக இருக்கிறது என்பதை உணரலாம். தோல் போல உரிக்க கூடிய மாஸ்க் என்பதால், இது சிறந்த எக்ஸ்போலியேட்டராகவும் செயல்பட்டு இறந்த செல்களை உதிரச்செய்கிறது. இதன் விளைவாக சருமம் தெளிவாக, சுத்தமாக ஆகிறது. கரித்தூளை மற்ற இயற்கை பொருளோடு சேர்த்து நேரடியாகவும் சருமத்தில் பயன்படுத்தலாம்.
வீட்டிலேயே தலைமுடி நன்கு வளர எப்படி தைலம் செய்வது? பயனுள்ள குறிப்புகள்
ஒரு ஸ்பூன் கரித்தூளுடன் பெண்டோனைட் களிமண், சோடா உப்பு, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்றாக குழைக்க வேண்டும். தூய்மையான பிரெஷ் கொண்டு இதை முகத்தில் பூசிக்கொண்டு பத்து நிமிடம் இருக்கவும். அதன் பிறகு முகத்தை கழுவிக்கொண்டு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும்.
pixabay
ஒரு ஸ்பூன் கரி தூளுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, 2 ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தேய்து உணர்ந்தவுடன் ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை கழுவினால் முகம் பொலிவுபெறும். நல்ல பலன் கிடைக்க வாரம் ஒரு முறை இதை பின்பற்றவும்.
கரித்தூள் அழகு பலன்கள்
- கரி முகமூடி சருமத்தில் படிந்திருக்கும் தூசு மற்றும் மாசுக்களை அகற்றுகிறது. உங்கள் சருமம் உடனடி பொலிவு பெற சார்கோல் மாஸ்க்கை பயன்படுத்தலாம்.
- கரித்தூள்சருமத்தை பொலிவாக்குவதோடு இறந்த செல்களை அகற்றி,சருமத்தை அழகாகவும், பொலிவாகவும் மாற்றுகிறது.
- மேலும் சருமத்தில் சுரக்கும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி கரும்புள்ளி மற்றும் பருக்களையும் தடுக்கிறது.
உங்கள் பெஸ்டியின் திருமணத்தில் முயற்சிக்க 17 அழகான சிகை அலங்காரங்கள்!!
- பருக்கள் பாதிப்பு கொண்டசருமத்திற்கு கரி தூள் மிகவும் ஏற்றது. கோடை காலங்களில் கரித்தூள் மிகவும் பயன் தரக்கூடியது.
- சரும துளைகளை சுத்தம் செய்து தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!