Beauty

ஆப்பிள் சீடர் வினிகரின் சரும பாதுகாப்பு நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள்!

Swathi Subramanian  |  Nov 15, 2019
ஆப்பிள் சீடர் வினிகரின் சரும பாதுகாப்பு நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள்!

சமீபத்திய வருடங்களில் ஆப்பிள் சீடர் வினிகர் மிகவும் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. ஆப்பிள் சாற்றில் பழச் சர்க்கரைகளை ஆல்கஹாலாக மாற்றுகின்ற ஈஸ்ட் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுவதே ஆப்பிள் சீடர் வினிகராகும். 

பல்வேறு ஊட்டச்சத்து நிறைந்த ஆப்பிள் சீடர் வினிகர் கூந்தல் முதல் பாதம் வரை அழகுச் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடிய இந்த வினிகரை பயன்படுத்தி உங்கள் அழகை மெறுகேத்துவது எப்படி என்பது குறித்து இங்கு பாப்போம். 

pixabay

மேலும் படிக்க – முகத்தை பளபளப்பாக்கும் அதிசய நன்மைகள் தரும் அவகேடோ! 

pixabay

pixabay

 

வீட்டிலேயே ஆப்பிள் சீடர் வினிகர் தயாரிக்கும் முறை 

pixabay

தேவையான பொருட்கள்:

ஆர்கானிக் ஆப்பிள் – 6,
தேன் – 2 கப்,
சர்க்கரை – 2 கப்,
தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை:

ஆப்பிள்களை சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போடவும். சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்து கொள்ளவும். சர்க்கரை கரைசலை கண்ணாடி பாத்திரத்தில் ஆப்பிள்கள் மூழ்கும் வரை ஊற்றவும். அதில் தேனையும் சேர்த்து கொள்ளவும். பின்னர் பிளாஸ்டிக் பேப்பர் வைத்து அந்த பாத்திரத்தைகட்டி மூடவும்.  

பிளாஸ்டிக் பேப்பரில் சில ஓட்டைகள் போடவும். இதனை ஒரு இருட்டான காற்று புகாத பகுதியில் இரண்டு வாரம் வைத்திருக்க வேண்டும். இதன் பின்னர் ஆப்பிள்கள் நொதித்து தன் நிறம் இழந்து சக்கையாக காட்சியளிக்கும். 

அதனை எடுத்து அப்படியே வடிகட்டி அந்த வடிகட்டிய நொதித்த தண்ணீரை வேறு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். இந்த பாத்திரத்தை ஒரு மெல்லிய துணியால் காற்றுப் புகாமல் மூடி ஆறு வாரங்கள் இருட்டான அறையில் வைத்தால் ஆப்பிள் சீடர் வினிகர் ரெடி !

   மேலும் படிக்க – அப்போதுதான் பூத்த பூக்கள் போல எப்போதும் பிரெஷ் லுக் வேண்டுபவர்க்கு சில ரகசிய குறிப்புகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty