Beauty

மருத்துவ குணங்கள் நிறைந்த குப்பை மேனி இலையின் சரும அழகு & கூந்தல் பராமரிப்பு பலன்கள்!

Swathi Subramanian  |  Oct 7, 2019
மருத்துவ குணங்கள் நிறைந்த குப்பை மேனி இலையின் சரும அழகு & கூந்தல் பராமரிப்பு பலன்கள்!

குப்பை மேனி தமிழகம் உட்பட பிற மாநிலங்களிலும் சமவெளிப் பகுதிகளில் மிகவும் சாதாரணமாக பரவிக் காணப்படுகின்ற ஒரு களை செடியாகும். ஒவ்வொரு மூலிகைகளுக்கு தனித்தனி மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. 

அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பை மேனி பூண்டு இனத்தை சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதை நாம் கண்கூடாக காணலாம். இது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த குப்பை மேனி இலையை சருமத்திற்கு பயன்படுத்துவதால் சருமம் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும்.

தேவையற்ற முடிகளை நீக்க : சில பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து இருக்கும். இதனை தவிர்க்க குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை மாவு போல் நன்றாக அரைத்து தூங்க போகும் முன் மேல் உதட்டில் பூசவும். தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

twitter

பருக்கள் மறைய : பெண்கள் குப்பை மேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் உலர விட வேண்டும். பின்னர் கழுவிவர முகத்திலுள்ள பருக்கள், புள்ளிகள் மறைவதுடன் முகம் பளபளப்பாக மாறும்.

கரும்புள்ளிகள் நீங்க : குப்பை மேனி இலையுடன் மஞ்சள், வெள்ளைப் பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கரும்புள்ளிகள் மீது தடவி வர சருமம் இயல்பு நிலைக்கு வந்துவிடும்.

சரும பொலிவிற்கு : குப்பை மேனி (acalphaindica) இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சருமத்தில் பூசி வர வேண்டும். வாரம் இரண்டு நாட்கள் இதனை செய்ய வர சருமம் பொலிவாகும். 

twitter

தோல் நோய்கள் குணமாக : குப்பை மேனி, மஞ்சள், உப்பு மூன்றும் அரைத்துப் பூசி ஒரு மணி நேரம் உலர விட வேண்டும். பின்னர் குளித்து வர அனைத்து விதமான சரும நோய்களும் குணமடையும். எல்லா வகையான புண்களுக்கும் இதன் இலையுடன் மஞ்சள் வைத்து அரைத்துப் பூச குணமடையும். 

கருமை நீங்க : வேப்பிலை, புதினா சிறிதளவு மருதாணி மற்றும் குப்பை மேனி (acalphaindica) இலைகளை காய வைத்து அரைத்து கொள்ள வேண்டும். இதனை பாலில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ முகம் கருமை குணமாகும்.

சரும அழகிற்கு : 10 குப்பை மேனி இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பசும்பாலுடன் சேர்த்து அவித்து உண்டுவர உடல் அழகும், ஆரோக்கியமும் ஏற்படும். 

twitter

கூந்தல் மிருதுவாக : குப்பை மேனி இலைச்சாறுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொண்டு அதனை ஒரு வாணலியில் இட்டு சுண்டக்காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை  தினமும் தலைக்கு தேய்த்து வர தலைமுடி மிருதுவாகும். 

முடி உதிர்வை தடுக்க : குப்பை மேனி இலைகளை நீரில் ஊறவைத்து, அந்த தண்ணீரை கொண்டு தலைமுடியை அலசி வர இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படுகிறது, இதனால் கூந்தலின் வேர்க்கால்கள் வலிமை அடைந்து  முடி உதிர்வது அல்லது உடைவது தடுக்கப்படுகிறது.

முடி வளர : குப்பை மேனி (acalphaindica) ஹேர் டோனரை பயன்படுத்தினால் தலைமுடி நன்கு வளரும். பொடுகு போன்ற பிரச்சனைகள் நீங்கி முடி வளருவதை நீங்கள் கண்கூட காணலாம். 

குப்பைமேனி ஹேர் டோனர்  தயாரிப்பு முறை 

தேவையான பொருட்கள்

பச்சையான குப்பை மேனி இலைகள் – 1 கப் 
காய்ச்சிய தண்ணீர் – 1/2 லிட்டர் 
லாவெண்டர் எண்ணெய் – 10 துளிகள்  

 

twitter

செய்முறை : 

குப்பை மேனி இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து நீரை வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய தண்ணீரையும்,  குப்பை மேனி இல்லை நீரையும் ஒன்றாக சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவேண்டும். 

இந்த நீரை ஆறவைத்து, அதனுடன் அந்த லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். நன்கு கலக்கிய அந்த கலவையே நீங்கள் உபயோகிக்க ஏதுவான ஹேர் டோனர் குப்பியில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். 

இந்த ஹேர் டோனரை ஆறு மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். இந்த டோனெரை முடியின் வேர்கால்களிலும் நன்கு தேய்த்து மசாஜ் செய்து குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர தலைமுடி நன்கு வளரும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Beauty