Lifestyle

பாகுபலி பாகம் மூன்றில் அவெஞ்சர்ஸ் ஸ்டார் இணைகிறாரா!

Deepa Lakshmi  |  Mar 8, 2019
பாகுபலி பாகம் மூன்றில் அவெஞ்சர்ஸ் ஸ்டார் இணைகிறாரா!

ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களின் பட்டியலில் முதலில் இருப்பது அவெஞ்சர்ஸ் சீரிஸ் தான். அதே போல இந்தியாவின் பிரம்மாண்ட படங்களில் முதலிடம் என்றால் எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலிதான். (baahubali)

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் இந்திய சினிமா பற்றிய பார்வையை மாற்றியமைத்தது பாகுபலி.எல்லைகளைக் கடந்து உலக ரசிகர்களின் அன்பை பெற்றது பாகுபலி.            

பாகுபலி படத்தின் மீதான தாக்கம் ஹாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. பிளாக் பாந்தர் மற்றும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படங்களில் நடித்த வின்ஸ்டன் ட்யூக் பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். மார்வெலின் M’baku கதாபாத்திரத்தில் இவர் பார்வையாளர்களை கலங்கடித்திருப்பார். இவர் சினிமா காதலர். இவரது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மிக சுவாரஸ்யமானவை.

இவர் மட்டுமல்லாமல் இன்னொருவரும் பாகுபலி மீதான தனது காதலை வேறொரு வகையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவெஞ்சர்ஸ் படத்தின் அனைவரின் மனதையும் ஒருமித்துக் கவர்ந்த ஒரே நாயகன் Nick Fury aka Samuel L Jackson என்பவர்தான் அவர். கேப்டன் மார்வெல் எனும் படத்தில் இவர் ரசிகர்களுக்கு பெரும் விருந்தையே படைத்திருக்கிறார்.      

ஸ்பைடர் மேன் மற்றும் பார் பிரம் ஹோம் படங்களில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்த Nick Fury aka Samuel L Jackson அவெஞ்சர்ஸின் தி எண்ட் கேமில் அற்புதமான தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை ட்ரைலர் மூலமே அறிய முடிகிறது.

யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த Nick Fury aka Samuel L Jackson தனக்கு மிகவும் பிடித்த அவெஞ்சர் கேரக்டர் பற்றி கூறியிருக்கிறார்! அது வேறு யாருமல்ல நம் அனைவருக்கும் பிடித்த அயர்ன் மேன் தான் !

சமீபத்தில் இவர் இந்தியாவிற்கு வருகை தந்தபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எதிர்மறை பதில்கள் தந்தார், மீண்டும் நீங்கள் இந்தியாவிற்கு வருவீர்களா என்று கேள்விக்கு எனக்கு வேலை தந்தால் வருவேன் என்று அதிரடியாக பதில் கூறினார்.

பாலிவுட்டில் நடிக்க அழைத்தால் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் ஆமாம் நான் பாகுபலி படத்தின் தீவிர ரசிகன். பாகுபலி பாகம் மூன்று எடுக்கப்பட்டால் அதில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறினார்.   

பின்னர் இல்லை நான் விளையாட்டுக்கு கூறினேன் ஆனாலும் பாலிவுட்டில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறி இருந்தார். இருப்பினும் ஹாலிவுட் ஸ்டார் ஒருவர் பாகுபலி மூன்றாம் பாகத்தில் நடித்தால் நமக்கெல்லாம் விருந்துதான் இல்லையா! இயக்குனர் எஸ். எஸ், ராஜமௌலி இதைப் பற்றி யோசிப்பாராக! அப்படியே பாகுபலி மூன்றாம் பாகம் பற்றியும்….!!

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் யூட்யூப்.                                                              

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Lifestyle