Astrology

பதவி உயர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அந்த அற்புத ராசி உங்கள் ராசியா ! சரிபாருங்கள்!

Deepa Lakshmi  |  Jun 17, 2019
பதவி உயர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அந்த அற்புத  ராசி உங்கள் ராசியா ! சரிபாருங்கள்!

இன்று செவ்வாய்கிழமை பிரதமை திதி மூல நட்சத்திரம் ஆனி மாதம்மூன்றாம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள் !

 

மேஷம்
இரண்டு கைகள் தட்டினால் தான் ஓசை எழும்பும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். எப்போதும் உங்கள் துணை மீது மட்டுமே தவறுகள் இருக்க முடியாது. உங்கள் சொந்த தவறுகளையும் ஒப்புக்கொள்ளுங்கள்.

ரிஷபம்
இன்று புன்னகை செய்கிறீர்களா? இன்று பணியிடம் அற்புதமாக இருக்கும். நேர்மறைத்தன்மையை எப்போதும் உயிருடன் வைத்திருங்கள்.

மிதுனம்
இன்று பேச்சு மிகவும் மலிவானது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களை யாராவது நம்ப வேண்டும் என்று விரும்பினால், செயல்களில் நிரூபித்துக் காட்டுங்கள்.

கடகம்
நீங்கள் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால், அது தொடர்பான போராட்டம் தற்காலிகமான ஒன்றுதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சிம்மம்
இன்று ஏதேனும் சூழ்நிலையில் யாரிடமாவது தவறுதலாக நடந்து கொண்டிருந்தால், தற்போது நீங்கள் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய தருணம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கன்னி
இன்று பணியிடத்தில் உங்கள் முதுகுக்குப் பின்னால் உடன் வேலை செய்பவர், உங்களைத் தவறுதலாக கூறலாம். செய்யும் செயல்களில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

தாலி இல்லை நகைகள் இல்லை.. பாட்டியின் புடவை கட்டி வைஷ்ணவி நடத்திய வாவ் திருமணம் !

துலாம்
இன்று உங்கள் சக ஊழியருடன் சண்டை போடுவதற்குப் பதிலாக, நீங்கள் இருவரும் ஏன் ஒரு அணியாக மாறக்கூடாது. அணியாக இணையும் பட்சத்தில் இருவரும் வெற்றிகரமாக வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

விருச்சிகம்
உங்கள் துணைமீது நீங்கள் பொறாமை கொள்வதற்கு எந்த காரணமும் இல்லை. அவரைத் தனியாக விடுங்கள், அவர் தனது வேலையை செய்யட்டும். எல்லோருக்கும் தனிமை அவசியம்.

தனுசு
இன்று உங்கள் அனைத்து எனர்ஜியையும் பயன்படுத்தி வேலை செய்யுங்கள். உங்கள் வேலைக்கான வெகுமதி பதவி உயர்வாக இருக்கக்கூடும்.

மகரம்
நீங்கள் பிறருடன் மனந்திறந்து பேசவில்லை என்றால், பிறர் உங்களை நேசிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும். உங்கள் பாதுகாப்பு உணர்வை சற்று ஒதுக்கி வையுங்கள்.

கும்பம்
இன்று உங்கள் டயட்டை விட்டு விலகிச்செல்ல ஆசைப்படுவீர்கள். ஆனால் அதனை நீங்கள் செய்யக்கூடாது. அமைதியாக காய்கறி உணவுகளை உண்ணுங்கள்.

மீனம்
வேலை செய்யுமிடத்தில் யார் குறித்தும் அவமதிப்பாக பேசாதீர்கள். உங்களைப் போலவே அவர்களும் பணி செய்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.                                                                                                                                         

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Astrology