Astrology

தெய்வீகம் தனது பேரருளையும் தேவதைகளையும் இந்த ஆறு ராசிகளுக்கு தான் அனுப்பி வைக்க போகிறதாம்!

Deepa Lakshmi  |  Apr 13, 2019
தெய்வீகம் தனது பேரருளையும் தேவதைகளையும்  இந்த ஆறு ராசிகளுக்கு தான் அனுப்பி வைக்க போகிறதாம்!

இன்று ஞாயிற்று கிழமை சூன்ய திதி ஆயில்ய நட்சத்திரம். சித்திரை மாதம் ஒன்றாம் தேதி விகாரி தமிழ் வருட பிறப்பு. அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்றைய நல்ல நாளில் உங்கள் ராசிபலன் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ( Astro)

மேஷம்

உங்கள் வாழ்க்கையை புதுப்பிக்கும் நேரம் இது. உங்கள் வாழ்க்கையில் தேங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துங்கள். உங்கள் பல கால ஏக்கங்களை தூக்கி எறியுங்கள். காதலும் நல்லிணக்கமும் உங்களுக்காக காத்திருக்கிறது. ஆனால் நீங்களோ உங்கள் பழைய காயங்கள் எதிர்மறை ஆட்கள் போன்ற தடைகளால் தடுமாறி கொண்டிருக்கிறீர்கள். வெளியே வாருங்கள். பேரின்பம் காத்திருக்கிறது.

ரிஷபம்

உங்களிடம் இருக்கும் வளங்களில் சிலவற்றை அது தேவைப்படுபவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அது உங்கள் நேரமாக, அறிவாக, பணமாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது நீங்கள் தெய்விகத்தின் அன்பை பெறுகிறீர்கள். பேரருள் உங்கள் வாழ்க்கையில் வர அனுமதியுங்கள். அடுத்தவர்களுக்கு உதவும் ஒரு நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள். அன்போடு உதவுங்கள்

மிதுனம்

அன்பை வாங்கவும் கொடுக்கவும் திறந்த மனதோடு தயார் ஆகுங்கள். உங்கள் பாதையில் காதல் வந்து கொண்டிருக்கிறது. இது உங்கள் காதல் துணையாக இருக்கலாம் அல்லது மேலிருந்து தரப்படும் அன்பாக இருக்கலாம். நீங்கள் தொடர்பு கொள்ளும் அனைவரிடமும் அன்பையும் நல்லிணக்கத்தையும் பெறுவீர்கள்.எல்லோரையும் அன்பால் கையாளுங்கள். அன்பு மிக பெரிய ஆயுதம்

கடகம்

உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட மற்றவருக்கு எப்படியாவது உதவும் உங்கள் அற்புத குணத்தை கொண்டாடுங்கள்.நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் சிறந்தவர்கள்தான். நீங்களும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக உதவி செய்பவராக இருக்க முடியும் என நம்புங்கள். அடுத்தவர் வாழ்வில் ஒரு நல்ல மாற்றமாக நீங்கள் இருங்கள்

சிம்மம்

உங்கள் தனித்துவத்தின் மூலம் மற்றவர் வாழ்க்கையில் உங்களால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். உங்களுக்கு தெரியாமலே யாரோ ஒரு சிலர் உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். நீங்கள் மற்றவரை கவனிப்பவராக இருக்கலாம் நல்ல நண்பராக இருக்கலாம் எதையும் நேர்படுத்துபவராக இருக்கலாம் மற்றவர்களை சிரிக்க வைக்கலாம்.

கன்னி

முதலில் உங்களை நீங்கள் நேசியுங்கள் பின்னர் மற்றவர்கள் உங்களை நேசிக்க ஆரம்பிப்பார்கள். உங்களை நீங்களே நேசிக்க அக்கறையோடு பார்த்து கொள்ள ஆரம்பியுங்கள். உங்கள் சாதனைகளை வெற்றிகளை எண்ணி பெருமைப்படுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்களை நீங்கள் முன்னிலைப்படுத்துவது பற்றி கூச்சப்படாதீர்கள்

துலாம்

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் கனவுகளும் விருப்பங்களும் நிறைவேறும்தான். ஆனால் அது என்ன என்பதில் உங்களுக்கே குழப்பம் இருக்கிறது. ஒரு காகிதத்தில் நீங்கள் விரும்பும் ஒரு முக்கியமான ஆசையை மட்டும் எழுதுங்கள். அதனை தினமும் மனக்கண்ணில் நடப்பதாக காட்சிப்படுத்துங்கள்

விருச்சிகம்

உங்கள் கனவுகள் நனவாக போகிறது. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்க போகிறது. தெய்விகம் உங்களிடம் தனது தேவதைகளை அனுப்பி வைக்கிறது. தெய்விகத்தின் வழிகாட்டுதல்படி நடந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் உங்கள் தேவதைகள் 10 அடி அதிகமாக எடுத்து வைத்து உங்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

தனுசு

உங்கள் உள்ளே இருக்கும் வலிமையை நீங்கள் உணர்ந்து கொள்ளும் நாள். வாழ்க்கையை தைரியமாகவும் நம்பிக்கையோடும் வாழுங்கள். உங்களுக்கு தேவைப்படும் எல்லாம் உங்களுக்குள்ளே இருக்கிறது என்பதை ஏற்று கொள்ளுங்கள். உங்களுக்கு தெய்வீகம் தந்த பரிசுகளை மற்றவருடன் பகிர்ந்து கொண்ட தருணங்களை பற்றி சந்தேகப்படாதீர்கள். நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள்

மகரம்

உங்களுக்காக நீங்கள் நில்லுங்கள், மனம் தளர விடாதீர்கள். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் நீங்கள் கீழே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்காக எழுந்து நின்று பேசாதவர்களுக்காக நீங்கள் பேச வேண்டிய தருணம் இது. தைரியத்தை வரவழையுங்கள். உங்களுக்காக நீங்கள் எழுந்து நிற்காததற்கான காரணங்களை உங்களிடமே கேளுங்கள்

கும்பம்

புதிய சிந்தனை செய்து பார்க்க வேண்டிய நேரம் இது. வியாபாரம் , புது ஒப்பந்தம், போன்றவைக்கு ஏற்படலாம். ஒரு புதிய வெற்றிக்கான அத்யாயம் ஆரம்பிக்க போகிறது. அதற்காக உங்களை தயார்படுத்துங்கள். உங்களுக்குள் தோன்றும் சிந்தனைகளை நீங்கள் செயலாக்கும் நேரம் இது.

மீனம்

நீங்கள் உங்கள் வாழ்க்கையை அகலப்படுத்தி பார்க்க வேண்டிய காலம். ஊர்ந்து கொண்டிருந்த உங்கள் வாழ்க்கை இனி வேகமெடுக்க போகிறது. உங்கள் வாழ்க்கையில் சில மாற்றங்களை உண்டு செய்யுங்கள்.உங்கள் கூந்தலை கொஞ்சம் ஸ்டைல் மாற்றி பாருங்கள்.உடை அணியும் விதத்தை மாற்றி பாருங்கள். புதிய இடங்களுக்கு போய் வாருங்கள்.

ஜோதிட பலன்களை கணித்தவர் ஆஷா ஷா.

Translated by Deepalakshmi

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

Read More From Astrology