Astrology

காதலோடு ரொமான்ஸ் , அதிர்ஷ்ட வாய்ப்பு – உங்கள் ராசிக்கு இன்று என்ன !

Deepa Lakshmi  |  Jan 15, 2020
காதலோடு ரொமான்ஸ் , அதிர்ஷ்ட வாய்ப்பு – உங்கள் ராசிக்கு இன்று என்ன !

இன்று வியாழக்கிழமை ஷஷ்டி திதி உத்திர நட்சத்திரம் தை மாதம் இரண்டாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.

மேஷம் 

நீங்கள் ஒரு புதிய நிலைப்பாட்டை மற்றும் பதவி உயர்வை நினைத்து உற்சாகமாக உள்ளீர்கள். செல்வாக்குடன் இருக்கும் ஒருவர் உங்களுக்கு ஆதரவாக தலையிடுவார்கள், அங்கு நம்பகமான உறவு இருக்கிறது. நீங்கள் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள்.

ரிஷபம் 

உங்களுடைய வழக்கமான வேலைகளால் சிறந்த விஷயங்களை நீங்கள் தவற விடுகிறீர்கள்.உங்கள் வழக்கங்களை உடைத்து புதிய சிறந்த விஷயங்களுக்கு நகருங்கள். 

மிதுனம் 

உங்களைத் தேடி ஒரு அற்புதமான வாய்ப்பு வரப் போகிறது. முகம் பார்த்து அந்த வாய்ப்பை நீங்கள் நழுவ விட்டு விடாமல் இருப்பது நல்லது. உங்கள் தற்போதைய சூழ்நிலை பற்றி மிக ஆழமாக யோசித்துப் பார்த்து முடிவெடுங்கள் 

கடகம் 

புதிய வேலைக்கு செல்லும் முன் தேவையான நேரம் செலவழியுங்கள்.உங்கள் கனவு பணி தொடர்பான வேலைக்கு நீங்கள் செல்வதை விட்டு விட்டு வேறொரு விஷயத்தில் திசை திருப்பப்பட்டு தவறான முடிவெடுக்க வேண்டி வரலாம். கவனம். 

சிம்மம் 

பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களுடன் உங்களுக்கு ஒரு நல்ல புரிதல் உள்ளது. இது உங்களை முன்னேற்றிட ஏணியாய் உதவிடும். உங்கள் கம்பெனியின் நலன் கருதி நீங்கள் ஒருசில திட்டங்களை முடிவு செய்ய நேரிடலாம். 

கன்னி 

இன்றைக்கு வழக்கத்திற்கு மாறான பரபரப்பு இருக்கும்.உங்கள் பணியில் கடைசி நிமிட கணக்குகளை முடித்துக் கொடுக்கும் அவசியத்திற்கு உள்ளாவீர்கள். 

கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருக்கிறதா ! அப்போ இது உங்களுக்குத்தான் !

துலாம்  

உங்கள் காதலருக்கும் உங்களுக்கும் மிகப்பெரிய நெருக்கம் ஏற்படும். இன்று இருவரும் அன்பிலும் பாசத்திலும் இணைந்து புறாவை போல மகிழுவீர்கள்  

விருச்சிகம்  

உங்கள் துணையிடம் இருந்து சூடான ஒரு விவாதத்தினை இன்று நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் இழிவாக பேசிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படக்கூடும். உங்களது கவர்ச்சியானது உங்கள் துணையை நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

மகரம் 

எந்த உறவும் சிறப்பாக அமைவதில்லை. அதனால் , உங்களுடையது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது. ஒரு சிறிய நம்பிக்கை வைத்திருங்கள். 

தனுசு 

உங்களுக்குள் தூங்கி கொண்டிருக்கும் அந்த மிருகம் உங்கள் வாழ்க்கையைப் பதம் பார்க்க விரும்புகிறது. ஆனால் அதன் தொடர் நிகழ்வுகள் உங்களுக்கு பாதகமாக முடியலாம்.ஆகவே நன்றாக யோசித்து எதனையும் செயல்படுத்துங்கள் 

கும்பம் 

உங்கள் வாழ்க்கை துணை திறமையானவர் தான் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இன்னும் அவர் திறமையாக செயல்பட அவ்வப்போது அவரை ஊக்கப்படுத்துங்கள் 

மீனம் 

உங்கள் காதல் வாழ்க்கை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதற்கான யாருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ரொமான்சில் சொதப்பினால் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டு விடாதீர்கள். 

astrology predicted by astro asha shah                      

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி! 

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Astrology