
இன்று சனிக்கிழமை த்ரிதியை திதி. உத்திராட நட்சத்திரம். மார்கழி மாதம் பன்னிரண்டாம் நாள் . திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை .
இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
நிலுவை பணிகள் எல்லாம் தீர்வுக்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரிப்பது வாழ்க்கைக்கு நன்மை தரும். குடும்பத்தில் குழப்பங்கள் இல்லாமல் இருக்க பொறுமையை கடைபிடிக்கவும். நேசிக்கும் நபரிடம் நேசத்தை கூறி விடுங்கள்.
ரிஷபம்
தாயின் மனம் கோணாமல் நடப்பதால் தேவதைகளின் ஆசிர்வாதம் கிடைக்கும். எடுத்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் கூடுதல் உழைப்பும் அவசியமாகும். ஆரோக்கியம் சிறக்கும்.முதலீடுகள் லாபத்தை ஈட்டும்
மிதுனம்
உடல் மனம் இரண்டாலும் உற்சாகமான நாள். இன்றைய உங்கள் எல்லா செயல்களுமே வெற்றியில் முடியும்.குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சி தரும். பெற்றோர்களிடம் இருந்து லாபம் கிடைக்கும்.முதலீடுகள் லாபத்தை ஈட்டும்
கடகம்
இன்று நீங்கள் தொட்டது துலங்கும். விட்டதை பிடிப்பீர்கள். வியாபாரம் செழிக்கும். வருமானம் கிடைக்கும்போதே பெருக்கிக் கொள்ளுங்கள். முதலீடுகள் லாபத்தை ஈட்டும். பதவி மாற்றம் பண வரவு என பெரும்புதையலை அள்ள போகிறீர்கள்.
சிம்மம்
இன்று உடல்நலம் கேள்விக்குறியாக்கும். சரியான நாள் அல்ல. உங்கள் ப்ரியத்திற்குரியவர்களுடன் பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் அலுவலக பணிகள் தேங்கி போகலாம். குடும்ப சூழல் ஸ்திரத்தன்மை இருக்காது.
கன்னி
நட்சத்திரங்கள் உங்களுக்கு அனுகூலமாகின்றன. சாதகமான நேரம் அமைவதால் பல அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரலாம். அலுவலகம் மற்றும் வீடு இரண்டிலுமே பிரகாசமாக ஜொலிப்பீர்கள்.குடும்பத்துடன் நட்பாக இருப்பதே உறவை தக்க வைக்கும். முதலீடுகள் லாபத்தை ஈட்டும்
துலாம்
உங்கள் மனதில் குடி கொண்டிருந்த கவலைகள் எல்லாம் நீங்கும். சில வாரங்களாக சிரமத்தில் தவித்திருப்பீர்கள். ஆனால் இனிமேல் அது நடக்காது. நிம்மதி குடி கொள்ளும். சந்தோஷமாக இருப்பீர்கள். உங்கள் சந்தோஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்.முதலீடுகள் லாபத்தை ஈட்டும்
விருச்சிகம்
இன்று சாதாரணமான நாள். அதிகமான உழைப்பிலிருந்தால் மட்டுமே ஓரளவிற்கு லாபம் பார்க்கலாம். உங்கள் மனதில் உள்ள திட்டங்களை செயலாக மாற்ற காலங்கள் ஆகும். நட்சத்திர சேர்க்கைகள் உங்களை சோம்பலாக மாற்றும்.
தனுசு
உங்கள் பகல் கனவுகள் கற்பனைகளை நீங்கள் துண்டிக்க வேண்டிய காலகட்டம். நண்பர்கள் தூண்டுதலால் நடக்காததை நடத்த முயற்சித்தால் தோல்வி ஏற்படும். நீங்கள் நினைத்த உடன் எதுவும் சுலபமாக நடக்காது. நடத்த முயற்சித்தால் விபரீதமான முடிவுகள் ஏற்படலாம்.
மகரம்
இன்று உற்சாகம் பிறக்கும். எதிர்கால விருப்பங்கள் எல்லாம் நிறைவேற தொடங்கும். எதிரிகள் தோற்பார்கள். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். டேட் செல்ல வாய்ப்பிருக்கிறது. பாருங்கள்.முதலீடுகள் லாபத்தை ஈட்டும்
கும்பம்
நட்சத்திரங்களின் சேர்க்கை நன்றாக இல்லை. அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். உணவில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.ஒரு முக்கியமான முடிவினை பற்றி கவலை கொள்வீர்கள். மன அழுத்தம் காரணமாக அசிடிட்டி ஏற்படும்.
மீனம்
இன்று நாள் மெதுவாக நகரும். காரணம் நீங்கள் சோம்பலாக இருக்கிறீர்கள். இதனால் சில தடைகள் தாமதங்கள் ஏற்படும். விவாதங்களில் எச்சரிக்கை வேண்டும். விடாமல் முயற்சி செய்வது நற்பலன் தரலாம்.முதலீடுகள் லாபத்தை ஈட்டும்
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian