
இன்று செவ்வாய்க்கிழமை கார்த்திகை நட்சத்திரம் சதுர்த்தசி திதி கார்த்திகை மாதம் 24ம் தேதி. வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டிய நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் நாள் உற்சாகமாக செல்லும். எதிரிகளை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். உடைமைகள் யாரும் கவராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புது வாகன யோகம் உண்டாகும்.
ரிஷபம்
நண்பர்கள் நல்ல செய்தி கொண்டு வருவார்கள். பெரியவர்கள் நன்கு உதவி செய்வார்கள். உயர் அதிகாரிகள் மரியாதையாக நடத்துவார்கள். தேவதைகள் பூக்கள் ஒன்று தான் தூவவில்லையே தவிர இன்றைய நாள் அப்படி ஒரு ஆசிர்வாதமான நாள்தான்.
மிதுனம்
தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. பிள்ளைகள் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை வேண்டுபவருக்கு உடனடியாக நல்ல முடிவு கிடைக்கும். நீண்ட கால நண்பர்கள் வேண்டிய உதவியை செய்வார்கள். நன்மை கூடும் நாள்.
கடகம்
செலவுகளை நீங்கள் குறைக்க வேண்டும். சேமிப்பு பற்றி நிச்சயம் நீங்கள் திட்டமிட வேண்டும். வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் ஆதாயங்கள் கிடைக்கும்.
சிம்மம்
விவாதங்களை தவிர்ப்பதால் நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் பலம் பலவீனத்தை நீங்கள் உணர்வீர்கள். திருமண முயற்சிகள் நல்லவிதமான பலன்களோடு முடியும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் ஏற்படும்.
கன்னி
மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் இன்றைய நாளின் நன்மை அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பெருகும். பயணங்கள் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினர் சிக்கல் உண்டாக்குவார்கள். அலுவலகத்தில் வேலை குறையும்.
துலாம்
தொழில் வியாபாரம் லாபம் சம்பாதித்து கொடுக்கும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். பயணங்கள் அனுகூல பலன்கள் தரும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி தருவார்கள். வாழ்க்கைத்துணை சந்தோஷம் கொடுப்பார்கள். நண்பர்கள் சந்திப்பு நிகழும்.
விருச்சிகம்
அலைச்சல் இருந்தாலும் புதிய அனுபவங்கள் மனதை நெறிப்படுத்தும். வியாபார நுணுக்கங்கள் உங்கள் வசம் ஆகும். புதிய வீடு வாங்க யோகம் இருக்கிறது. பொதுவெளியில் சேவை செய்பவர்களுக்கு நல்ல புகழ் கிடைக்கும்.
தனுசு
சகோதர வழியில் சில முடிவுகள் துணிவாக எடுக்க வேண்டும்.சுபவிரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். மூலிகை சம்பந்தமான தொழில்கள் சூடு பிடிக்கும். நீண்ட நாள் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பொருள் வாங்கும் யோகம் உண்டு.
மகரம்
செய்தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும். திருமண முடிவுகள் சாதகமான பலனையே தரும். தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் கால் பதிப்பீர்கள். அடுத்தவர்களின் வேலையையும் சேர்த்து நீங்கள் செய்ய வேண்டி வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
தடை தடங்கல்களை கடந்து நினைத்ததை நடத்தி முடிக்கும் சக்தி உண்டாகும்.சக பணியாளர்கள் ஆதரவு உண்டு. ஆன்மீக சம்பந்தமான எண்ணங்கள் நிறைவேறும். பணவரவு அவ்வளவு எளிதில் கிடைக்காது. தாமதம் ஆகும். பயணங்கள் அனுகூலமாக இருக்கும்.
மீனம்
தொழில் முயற்சிகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். வியாபாரங்கள் சமநிலையான முறையில் நடக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தினர் சந்தோஷமாக இருப்பார்கள்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian