Astrology

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் : தெரிந்து கொள்ளுங்கள்!

Swathi Subramanian  |  Dec 1, 2019
இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும் : தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று திங்கள் கிழமை ஷஷ்டி திதி திருவோணம் நட்சத்திரம். கார்த்திகை மாதம் 16ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.  சிலர் உங்களை நம்பி முக்கியப் பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் பாராட்டுவார்கள். சாதிக்கும் நாள்.

ரிஷபம் 

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து, பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புக்கள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.  

மிதுனம் 

சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில நேரங்களில் வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். விமர்சனங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். சிறு சிறு அவமானம் ஏற்படக்கூடும். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டிய நாள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் மூலம் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

கடகம் 

தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். 

சிம்மம் 

பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள், சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். சகோதர வகையில் செலவுகள் ஏற்பட்டாலும், மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். அமோகமான நாள்.

 கன்னி

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வந்து சேரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

youtube

துலாம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். பழைய கடனைத்தீர்க்க புது வழிகள் யோசிப்பீர்கள் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டு.  உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

விருச்சிகம்

துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக் கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகை யால் அனுகூலம் உண்டா கும். மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் பொறுமையைக் கடைப் பிடிக்கவும். 

தனுசு

நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன், மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வராது என்று இருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதிய நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.

மகரம் 

இராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். உங்களைப் பற்றிய ரகசியங்களை, வெளியில் சொல்லுவதைத் தவிர்ப்பது நல்லது. இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். 

கும்பம்

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக்கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். பிள்ளைகளிடம் கனிவாகப் பேசுங்கள். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மீனம் 

சவாலான விஷயங்களை யும், சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். உற்றார், உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். நெருங்கியவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய இடத்தில் கடையை மாற்றி, அதன் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Astrology