
இன்று வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி உத்திர நட்சத்திரம். கார்த்திகை மாதம் ஆறாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
உங்கள் நாள் முன்னேற்றமுடையதாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.குடும்ப சூழ்நிலையில் அமைதி நிலவும். எதிரிகள் தோற்பார்கள். கோபமாக இருப்பதை குறைத்து கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும்.
ரிஷபம்
ராசியான நாள்.ஆடை அணிகலன்கள் சேரும். பங்குதாரர்களால் லாபம் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டாகும். மன உறுதி மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
மிதுனம்
உடல்நிலை கவனிக்கப்பட வேண்டி இருக்கலாம். உங்கள் வழக்கமான வேலைகள் பல இடங்களுக்கு அழைத்து செல்லலாம். உணவில் கவனம் இருந்தால் உடல்நலம் மேம்படும்.
கடகம்
எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட்டாலும் நல்ல எண்ணங்களால் அதனை முறியடிப்பது நன்மையை தரும். அலுவலகத்தில் ஆதரவு பெருகும். பங்குதாரர்கள் லாபம் தருவார்கள்.
சிம்மம்
உடல் நலம் மேம்படும். வியாபாரம் மற்றும் பணி புரியும் இடங்கள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். தவறான பழக்கங்கள் மற்றும் எண்ணங்களை கைவிடுவதுதான் நல்லது.
கன்னி
உங்கள் உயர் அதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். உங்கள் வேலை சுலபமாக முடிப்பீர்கள். பதவி உயர்வை எதிர்பாருங்கள். குடும்ப வாழ்க்கை ஆனந்தம் தரும்.
துலாம்
சிறப்பான நாள். எல்லா திசைகளில் இருந்தும் லாபம் கிடைக்கும். சம்பள உயர்வுகள் கிடைக்கலாம். நண்பர்கள் மனம் மகிழ செய்வார்கள். பிடித்த உணவை உண்டு மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
உல்லாச சுற்றுலா செல்ல தயார் ஆகுங்கள். சாகசங்கள் செய்ய இதுவே சரியான சமயம். உங்கள் காதல் துணையை சந்திக்க தயார் ஆகுங்கள். காதல் வசப்படப் போகிறது.
தனுசு
நட்சத்திரங்களின் சேர்க்கை நன்றாக இருப்பதால் விசேஷமான நாளாக அமையலாம். உறவினர்கள் அனுகூலமும் கிடைக்கும். மகிழ்வான நிறைவான நாள்.
மகரம்
உங்கள் கோபத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நீங்கள் பூவினை போன்ற மென்மையானவர். ஆகவே அதனை கடைபிடியுங்கள். தெளிவான மனதுடன் தேவையான முடிவுகளை எடுப்பீர்கள்.
கும்பம்
உங்கள் நட்சத்திர சேர்க்கை சரியாக அமையாததால் மிக கவனமாக செல்ல வேண்டும். அதிருப்தியான மனநிலை ஏற்படும். உங்கள் சந்தேக எண்ணங்களால் குடும்பம் பிரியும்,
மீனம்
உங்கள் புதிய வேலைகளை தொடங்க ராசியான நாள். அக்கம் பக்கத்தினர் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் சரி ஆகும்.உயர் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். மன நிம்மதி உறுதியாகும்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian