Astrology

அனுபவித்த துயரங்கள் எல்லாம் முடிவுக்கு வரும் நாள்.. எந்த ராசிக்கு இந்த பலன் ?

Deepa Lakshmi  |  Nov 20, 2019
அனுபவித்த துயரங்கள் எல்லாம் முடிவுக்கு வரும் நாள்.. எந்த ராசிக்கு இந்த பலன் ?

இன்று வியாழக்கிழமை. தசமி திதி.பூர நட்சத்திரம்.கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி. குருபகவானை வழிபட நன்மை கிடைக்கும். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.                   

மேஷம்

வீண்பழியை சுமக்க நேரிடலாம். எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் பிணக்குகள் ஏற்படும் நாள்.எல்லாவற்றிலும் கவனமாக இருந்தால் இந்த நாளை இனிதே கடந்து விடலாம்.

ரிஷபம்                    

பிடிக்காத விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டி வந்தாலும் அதன் மூலம் பல நன்மைகள் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். உதவிகள் எல்லா இடங்களில் இருந்தும் வரலாம். அலுவலகத்தில் சாதகமாக போக்கு இருக்கும்.

மிதுனம்                 

உங்களைத் துரத்தி வந்த துயரங்கள் எல்லாம் நீங்கி நிம்மதி பெறும் நாள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு சீராக இருக்கும்.நேரம் தவறி உண்பதால் வயிறு கோளாறுகள் ஏற்படும் என்பதால் கவனம் வேண்டும்.

கடகம்               

இன்று யாருடனாவது வாக்குவாதத்தில் ஈடுபட வைக்கும்படி நட்சத்திரங்கள் சேர்க்கை இருக்கிறது. அவமானம் பெரிதாகலாம். பங்குதாரர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும். அலுவலகத்தில் புதிய வாடிக்கையாளர்கள் சேருவார்கள்.

சிம்மம்                          

அலுவலக வேலைகளில் உயர்பதவி ஆட்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம். இயந்திரங்கள் கையாளும் சமயம் அதீத கவனம் தேவை. குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படலாம்.

கன்னி

கணவன் மனைவி இடையே மனஸ்தாபம் ஏற்படும். அதனால் வெளியில் தங்க நேரிடலாம். குழப்பமான மனதின் காரணமாக வீண் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவதால் நன்மை உண்டாகும்.

துலாம்

இன்று மற்றவர் பற்றிய கிண்டல் கேலிகளை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் நீங்கும். தொழில் வியாபாரம் மேம்படும். தடைபட்ட காரியங்கள் வேகமாக நடந்து முடியும். கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல் தீரும்.

விருச்சிகம்                   

நோய் நீங்கி உடல் தெளிவாகும். பொருளாதாரம் மேம்படும். பணவரவு சிறப்பாக இருக்கும். வியாபார சிக்கல்கள் தீர்ந்து எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். குடும்பத்தினர் நலம் நன்றாக இருக்கும். நல்ல நாள்.

தனுசு

கடன் சிக்கலை உங்கள் கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்களுக்கு பிரச்னையை உண்டு பண்ணியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள்.

மகரம்

இன்று திருமணம் சம்பந்தமான காரியங்கள் உங்கள் குடும்பத்தில் நடக்க வாய்ப்பிருக்கிறது. பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். உதவிகள் கிடைக்க தாமதம் ஆகும். பயணத்தின் போது கவனம் தேவை.

கும்பம்

இன்று மனதில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணவரவுகள் உண்டு. குடும்பத்தினர் உதவியாக இருப்பார்கள். தைரியம் ஏற்படும். வாழ்க்கை சுகமாகும்.

மீனம்

மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் சிக்கலை தவிர்க்கலாம். எதற்கெடுத்தாலும் வருகின்ற கோபத்தை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். திடீர் பணத்தேவை ஏற்படும். தயாராக இருக்கவும்.

predicted by astro asha shah 

 

 

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Astrology