Astrology

நம்பிக்கை இல்லை என்றால் திடமான உறவு நீடிப்பதில்லை – ராசி பலன்

Deepa Lakshmi  |  Apr 6, 2019
நம்பிக்கை இல்லை என்றால் திடமான உறவு நீடிப்பதில்லை – ராசி பலன்

இன்று ஞாயிற்று கிழமை. அஷ்வினி நட்சத்திரம் துவிதியை திதி. பங்குனி மாதம் 24ம் நாள். இன்று சூரிய வழிபாடு நன்மை தரும். இன்றைய ராசி உங்களுக்கு என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். (astro) 

மேஷம்

உங்களைப் போன்ற நண்பர்களைச் சிநேகமாகக் கொண்டிருக்கும் போது ஏன் காதலை தேடுகிறீர்கள்?அவர்கள் உங்களுக்காக உண்மையாக இருக்கிறார்கள். காதலிற்கும் நட்பிற்கும் இடையே குழப்பம் வேண்டாம். உங்கள் இலக்குகளில் உள்ள பார்வையை இழக்காதீர்கள்.

ரிஷபம்

எந்த வித திட்டங்களும் இல்லாமல் உலகை வெல்வதில் நீங்கள் கெட்டிக்காரர்தான். ஆனாலும் உங்களது அடுத்த முயற்சிக்கு சில திட்டங்களும் வரைபடங்களும் தேவை. ஆகவே அதனை நிதானமாக தயார் செய்யுங்கள். உங்கள் வெற்றி வாய்ப்பை இது அதிகரிக்க செய்யும்

மிதுனம்

நீங்கள் படைப்புத் திறன் கொண்ட ஒரு நபர். யாராவது உங்கள் கலையை திருத்திக் கொள்ள சொன்னால் அவரை நீங்கள் ஒதுக்கி விடுங்கள். உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள். உங்களுடைய படைப்பு சிறந்ததாகவே இருக்கும்

கடகம்

உங்கள் உணர்ச்சிகளைப் பற்றிய சந்தேகங்கள் மற்றும் உங்களுடைய பங்குதாரர் உண்மையாக நடந்துகொள்கிறாரா என்று யோசிக்கலாம். ஆனால் நம்பிக்கை இல்லை என்றால் திடமான உறவு நீடிப்பதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு முடிவுக்கு செல்வதற்கு முன் விஷயங்களை பேச முயற்சி செய்யுங்கள்.

சிம்மம்

அதிகமான மன அழுத்தம் மற்றும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களை சுற்றியுள்ள விஷயங்கள், பணி தொடர்பான காரியங்களால் மன அழுத்தத்தில் காணப்படுவீர்கள். உடற்பயிற்சி செய்து உங்கள் அழுத்தத்தை போக்கி கொள்ளுங்கள்

கன்னி

உங்களுடை மிகப்பெரிய பிரச்சணையை பேசுவதற்கு இது சரியான நேரம் இல்லை. நீங்கள் மிகவும் திறமையாக பேசக்கூடிய நபர்தான் என்றாலும் அதை விட மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதில் கவனமாக இருப்பது நல்லது.

துலாம்

பொறுப்புக்களையும் சுவாரசியங்களையும் துணையுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். இருவரும் இணைந்து பயணிப்பதற்கு ஏற்ற தருணம் இது

விருச்சிகம்

நிம்மதியை தேடி அலைய வேண்டாம், நல்ல காரியங்களை செய்தால் போதும்.

தனுசு

உங்கள் சந்தோஷத்தை தியாகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பொருளாதார ரீதியாக நீங்கள் தடுமாறிக் கொண்டிருக்கலாம். அதற்காக ஏழ்மையை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களிடம் உள்ளவர்களுக்காக நன்றி செலுத்துங்கள்.உங்கள் செலவுகளை நன்றியோடு செய்யுங்கள். பணத்தை ஆகர்ஷியுங்கள்.

மகரம்

பயத்தை விட்டொழியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாக மாற காத்திருக்கின்றது

கும்பம்

மனதை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள், எதிரான எண்ணங்களை களைந்து ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துங்கள்.

மீனம்

உங்களை நீங்கள் நிறுத்து பார்த்தால் அனைத்து தீய சக்திகளும் உங்களை விட்டு நீங்கும்

—                                              

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo                                                                                          

Read More From Astrology