
இன்று செவ்வாய்கிழமை நவமி திதி திருவோண நட்சத்திரம் ஐப்பசி 19ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷ ராசி
இன்று உங்கள் சாதனைகளைச் செய்வதற்கு உகந்த நாள். சோம்பலை மட்டும் விட்டு விட்டால் வெற்றிகளை அடையலாம். உங்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
ரிஷப ராசி
பணவரத்து அதிகரிக்கும்.பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்திலும் வெற்றி பெறலாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
மிதுன ராசி
சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. தெய்வப் பணிகளில் ஈடுபட்டால் மனத் தெளிவும், நிம்மதியும் உண்டாக தடை இருக்காது. விற்பனை அதிகரிக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர்.
கடக ராசி
இஷ்ட தெய்வ வழிபாடு சில நன்மையை தரும். சத்தான உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும். பெண்கள் வீட்டு உபயோக பொருள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.
சிம்ம ராசி
பணிகளில் முன்னேற்றம் உருவாகும். நீண்ட துார பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். புத்திரர்கள் அறிவு, செயல் திறனில் சிறந்து விளங்குவர். வழக்க விவகாரத்தில் சமரச தீர்வு கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.
கன்னி ராசி
வெற்றி பாதை உருவாகும்.பண செலவுகளில் தாராளம் இருக்கும். தொழிலில் இடையூறு விலகி பண வரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.நோய் தொந்தரவு குறைந்து ஆரோக்கியம் பலம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள்.
துலாம் ராசி
உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவியின் செயல்களில் குடும்ப நலன் பற்றிய அக்கறை மிகுந்திருக்கும். கிடைக்கின்ற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்துங்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பணிகள் நிறைவேற தனி கவனம் வேண்டும்.
விருச்சிக ராசி
பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பண வரவும் கூடும். புத்திரர் உங்களிடம் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில் வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு கிடைக்கும். புத்தாடை, நகை வாங்க அனுகூலம் உண்டு
தனுசு ராசி
குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி வளரும். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். பணியாளர்கள் பணி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றுவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர்.உறவினர்களின் உதவி கிடைக்கும்
மகர ராசி
பயணத்தில் இனிய அனுபவம் கிடைக்கும். மனைவியின் கருத்தும், உதவியும் ஆறுதலாக இருக்கும்.உறவினர் எதிர்பார்ப்புடன் அணுகுவர். தாராள பண செலவில் குடும்ப தேவையை நிறைவேற்றுவீர்கள். புத்திரரின் அன்பு, பாசம் மகிழ்ச்சியை தரும்.
கும்ப ராசி
மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளர வாய்ப்பு வரும். பணியாளர் இனிய அணுகுமுறையால் சலுகையை எளிதில் பெறுவர். பாராட்டு, வெகுமதி கிடைக்கும். வெளியிடம் சுற்றுவதை குறைக்கவும்.
மீன ராசி
நற்செயல்களால் பேரும், புகழும் கிடைக்கும். விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும். மனைவி உங்களுக்கு பெருமை தேடி தருவார். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற சில மாற்றம் செய்வீர்கள்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian