Astrology

இதுவரை அனுபவித்த பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரக்கூடிய ராசிக்காரர் நீங்கள்தானா?

Deepa Lakshmi  |  Sep 20, 2019
இதுவரை அனுபவித்த பிரச்னைகள் எல்லாம் முடிவுக்கு வரக்கூடிய ராசிக்காரர் நீங்கள்தானா?

இன்று ஞாயிற்றுக்கிழமை தேய்பிறை அஷ்டமி நாள். மிருகசீரிஷ நட்சத்திரம் புரட்டாசி மாதம் ஐந்தாம் நாள். காலபைரவ வழிபாடு மேன்மை தரும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை காணுங்கள்.

மேஷம்

இன்று மகிழ்ச்சியான நாளாக இருந்தாலும் உங்கள் பழைய நண்பரை தேடி கண்டு பிடிப்பதில் அதிகம் சோர்வடைந்திருப்பீர்கள். நீண்ட நாள் நண்பர் வந்ததை எண்ணி மிகவும் சந்தோஷத்தில் இருப்பீர்கள். உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம்

ரிஷபம்

வேலை நிலையாக இருக்கும். எல்லாவற்றையும் உங்களோடு தொடர்புபடுத்தி கொள்வதால் நீங்களாகவே ஸ்ட்ரெஸ் ஆவீர்கள். உடன் பணிபுரிபவர்கள் உதவ மாட்டார்கள் என்பதால் உங்கள் கோபங்களை குறையுங்கள். குடும்ப நாடகம் தொடர்ந்து நடைபெறுவதால் உலர்ந்து போன உங்கள் மூளையை சுவிட்ச் ஆப் செய்ய வழி தேடுவீர்கள். நேரத்துக்கு சாப்பிடாவிட்டால் அதுவும் உடல் நலிவில் கொண்டு போய் விடும்.

மிதுனம்

வேலை நிலையாக இருக்கும் ஆனாலும் நிலுவை பண வசூலில் உங்களுக்கும் வாடிக்கையாளருக்கு சிக்கல் வரலாம். ஆத்திரத்தை விட பணம் உங்களுடையது என்கிற எண்ணம் அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் துணை வீட்டில் பிரச்னை ஏற்படுத்தலாம். உங்கள் கவனிப்பை தேடலாம். எமோஷனல் ப்ளேக் மெயில்களை தவிருங்கள். நண்பர்களிடம் உதவி கேளுங்கள்.

கடகம்

நீங்கள் அதிகமான கவனம் செலுத்த வேண்டிய நாள். போதுமான வேலைகள் இருந்தாலும் ஐடியாக்கள் கிடைக்காமல் திண்டாடுவீர்கள். யாரிடமாவது அறிவுரை கேளுங்கள். சமூக உறவுகள் சிக்கலாக இருக்கும். முக்கியமானவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

சிம்மம்

வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் கடந்த காலத்தில் இருந்து சில இறுக்கமான விஷயங்களைத் தீர்த்துக்கொள்ள உதவியாளரை நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் ஒரு வேலை மாற்றத்தைக் கண்டால், இது ஒரு நல்ல நாள். உங்கள் கண்களையும் வயிறையும் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்ட்னரிடம் வாக்குவாதம் வேண்டாம் . சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும்.

கன்னி

வேலை மெதுவாக இருக்கும். முடிவுகளை எடுக்க மற்றவர்களை நம்பாதீர்கள், உங்கள் பொறுப்புகளை நீங்கள் பொறுப்பேற்க வேண்டும். தீர்ப்பு வழங்குவதை தவிர்க்கவும். எல்லோரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் பிஸியாக இருப்பார்கள். குடும்ப வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். தீவிரமான வேலை நேரங்கள் காரணமாக, சமூக ரீதியாக நீங்கள் பின்தங்குவீர்கள் . ஒரு திட்டம் இருந்தால் கூட, நீங்கள் அதில் கடைமையே என்று இருப்பீர்கள்.

 

 

Youtube

துலாம்

உங்கள் முழுமையாக ஆய்வு செய்யாத ஏதோ ஒரு விஷயத்தில் நீங்கள் வருத்தம் அடையலாம். உங்கள் பார்ட்னரிடம் இதை கூறி ஒரு தெளிவை பெறுங்கள்

விருச்சிகம்

உங்கள் எதிரே உள்ள சவால்களை எல்லாம் உங்கள் வாய்ப்புகளாக மாற்றுங்கள்.எத்தனை பெரிய சவாலை நீங்கள் சந்திக்கிறீர்களோ அவ்வளவு அதிக அறிவை நீங்கள் பெறுகிறீர்கள்.உங்கள் தடைகள் அகன்ற பின்னர் எல்லாவற்றையும் சாதிக்க முடியும்.வெற்றியாளர் ஆவீர்கள்.

தனுசு

உங்கள் பணத்தை சரியான முறையில் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். தினமும் பண மழை பெய்யாது. காதல் அம்பு உங்களை தேடி வரும் நேரம்.காத்திருந்த நாள் கைகூடி வரும்

மகரம்

வேலை நிலையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள். ஏற்கனேவே நீங்கள் போட்ட திட்டம் நல்ல முன்னேற்றத்தை இன்று கொண்டு வரும். மகிழ்ச்சியாக இருங்கள். தேவைக்கேற்ப அனைத்து காரியமும் கை கூடும்

கும்பம்

உங்கள் மனதை அமைதிப்படுத்தி, தெய்வீகத்தின் மென்மையான நினைவூட்டல்களைக் கேளுங்கள். ஒரு அமைதியான மனது தெளிவாக கேட்கும். உங்களுடைய ஜெபங்கள் பதில் அளிக்கப்படுவதில்லை என நீங்கள் உணர்ந்தால், பொருமையாக காத்திருங்கள்.

மீனம்

உங்களை நீண்ட காலமாக தொந்தரவு செய்த பிரச்னை முடிவுக்கு வரலாம் அல்லது முடிவை நோக்கி நகரலாம். இப்போது நீங்கள் சுதந்திர பறவை. நீங்கள் உங்கள் வாழ்வின் அடுத்த அத்தியாயத்திற்கு நகரலாம்.

predicted by astro asha shah

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Astrology