Astrology

குரு பகவானின் அருட்பார்வை பெறப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா ?

Deepa Lakshmi  |  Aug 21, 2019
குரு பகவானின் அருட்பார்வை பெறப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்கள் ராசி இருக்கிறதா ?

இன்று வியாழக்கிழமை . சப்தமி திதி பரணி நட்சத்திரம். ஆவணி மாதம் 5ம் தேதி. குரு பகவான் வழிபாடு நன்மை தரும். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.

மேஷம்

குடும்ப உறுப்பினர்களின் பிரச்னையை சமாளிக்க இன்று நீங்கள் தேவைப்படுவீர்கள். கவனமாக கையாளவும் வீண் பழிகளுக்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளவும்.

ரிஷபம்

நீங்கள் சூர்யனைப் போன்ற வானவில்லை போன்ற ஒரு செயலை ஆரம்பித்திருப்பீர்கள். ஆனால் அது இப்போ சற்றே மங்கலாக மாறியிருக்கலாம். ஆனாலும் மனம் தளர வேண்டாம் உங்களுக்கான புதையல் உங்களுக்குத்தான் !

மிதுனம்

உங்கள் காதல் வாழ்க்கை இன்னமும் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது. ஆனால் நீங்களாகவே காதல் உங்களை தவிர்ப்பதற்காக நினைக்கிறீர்கள். ஒருவரை நேசிப்பது என்பது நல்லது கெட்டது இரண்டும் இணைந்ததுதான். உங்களுக்கு கெட்டது மட்டுமே நடப்பதாக நினைக்கிறீர்கள். எல்லாம் நன்மைக்கே

கடகம்

உங்கள் வாழ்க்கையில் தவறாகப் போனவைகளுக்கெல்லாம் மற்றவரை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தீர்கள். இப்போது உங்கள் தவறுகள் என்னென்ன என்பதைப் பார்க்க வேண்டிய நேரம். நீங்கள் புறக்கணிக்கப்படுவதை எண்ணி அச்சம் கொள்ளலாம். எதுவாக இருந்தாலும் நேரடியாக நில்லுங்கள்

சிம்மம்

உங்கள் உள்ளுணர்வு அடிப்படையில் நீங்கள் பெரும்பாலான முடிவுகளை எடுக்கிறீர்கள், தவறு எதுவும் இல்லை. இருப்பினும் இந்த பாதையில் உங்களுக்கு உதவ சிலர் தேவைப்படலாம் மற்றும் அவர்களுக்கு உண்மைகளும் தேவைப்படலாம். அதிக நம்பிக்கை வையுங்கள்

கன்னி   

செய்ய முடியாத என நினைத்து உங்கள் எண்ணத்தை நீங்கள் மாற்றி கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படியல்ல. நீங்கள் உண்மையாய் இருப்பதற்கான பலனை கட்டாயம் அடைவீர்கள்

Pinterest

துலாம்

உங்கள் துணை நீண்ட காலமாக வாழ்க்கையில் சுமைகளோடு இருக்கிறார் அவரது பாரத்தை இறக்கி வைக்க நீங்கள் உதவி செய்யும் முயற்சியில் இருக்கிறீர்கள். இதற்காக இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்

விருச்சிகம்

உங்களைப்போலவே உள்ள ஒரு மனிதரை நீங்கள் சந்திப்பீர்கள். ஆனால் இது நீண்ட கால உறவாக மாறுமா என்பது பற்றி இப்போது நிர்ணயிக்க முடியாது.

தனுசு 

நீங்கள் மெதுவாக அதே சமயம் நிதானமாக உங்கள் நோக்கங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள். அதற்கான பரிசுகள் நீங்கள் செல்லும் பாதையில் உங்களை வந்தடையும்.

மகரம்    

உங்களிடம் இருப்பதை வைத்து உங்கள் நாளை மிக வலுவான விதத்தில் எடுத்து செல்லுங்கள். எதிர்காலத்திற்கு சேமியுங்கள்.

கும்பம் 

எல்லா இடங்களிலும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருப்பீர்கள். குடும்பத்தில் பொறுமையாக இருங்கள். காரியம் வாய்க்கும்.

மீனம் 

உங்கள் வாழ்க்கையில் அனைவரையும் அனுமதிக்காதீ்ரகள். உங்களுக்குத் தேவைப்படும் பொழுது அவர்கள் ஒருநாளும் உங்கள் பின்னால் இருக்கமாட்டார்கள்

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                   

Read More From Astrology