
இன்று திங்கள் கிழமை பூராட நட்சத்திரம் சோம வார பிரதோஷம். சிவன் வழிபாடு நன்மை தரும். ஆடி மாதம் 27ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசி பலனை சரிபாருங்கள்.
மேஷம்
இன்று உங்கள் வாழ்வில் நிறைய விஷயங்கள் நடக்க இருப்பதால் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் விழிப்புடன் இருங்கள். நிலையான வேலை இருக்கும் என்றாலும் தாமதங்கள் ஏமாற்றத்தை உண்டாக்கலாம். குடும்ப வாழ்க்கை மெதுவாக போகும். நீங்கள் மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். அனால் அது உங்களது முன்னுரிமை அல்ல.
ரிஷபம்
வேலை சுமை அதிகரிக்கும். கடைசி நேர காலக்கெடுவால் உடன் வேலை செய்பவர்கள் உங்களை தவறாக புரிந்து கொள்ளும் சூழல் உருவாகும். எனவே தனிப்பட்ட முறையில் எந்த விஷயங்களையும் எடுத்து கொள்ளாதீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாகவும், வழக்கை பற்றி வேறு கண்ணோட்டத்தையும் உங்களுக்கு வழங்குவர். சமூக வாழ்க்கை மெதுவாக போகும்.
மிதுனம்
உங்கள் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் நடைபெற்று வருகிறது. மற்றவர்களின் கருத்துக்களை கேட்காதீர்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் உங்கள் ஓய்வுக்கான நேரத்தை நீங்க எடுத்து கொள்ள வேண்டும். அண்மையில் நடைபெற்ற தவறான புரிதலை சரி செய்ய நண்பர் ஒருவர் உங்களுடன் இணையலாம்.
கடகம்
கருத்துகள் மற்றும் படைப்பாற்றலுடன் வேலை நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல் நலக்குறைவால் உங்களது சமூக கடமையை ரத்து செய்யலாம்.
சிம்மம்
வேலை நிலையாக இருக்கும். ஆனால் ஒப்பந்தம் தொடர்பான வேலைகள் தாமதத்தை உண்டாக்கலாம். இன்று புதிய நபர் ஒருவருடன் வேலை செய்வீர்கள். உங்கள் துணை மன அழுத்தத்தில் இருப்பார் என்பதால் நீங்கள் வீட்டில் பொறுமையாக இருக்க வேண்டும். நண்பர்கள் உங்கள் வலிமைக்கு உணர்ச்சி தூணாக இருப்பார்கள்.
கன்னி
இன்றைய நாள் முன்னோக்கி நகரும் போது நீங்கள் மந்தமாக அல்லது குழப்பாக இருப்பதாக உணருவீர்கள். அதனால் மனதை புதுப்பிக்க இடைவெளிகள் எடுத்து கொள்ளுங்கள். நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருக்காமல், இடையிடையே ஒய்வு எடுத்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது சந்தோஷம் தருமோ அதனை செய்யுங்கள்.
துலாம்
வேலையில் தாமதம் மற்றும் குழப்பம் உண்டாகலாம். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொள்ளாததால் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே உங்களை அமைதியாக்கும் நண்பரிடம் செல்லுங்கள்.
விருச்சிகம்
வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் மற்றவர்களின் பிரச்சனைகள் குறித்து நீங்கள் விவாதிக்கலாம். உங்களுக்கு எது முக்கியமோ அதில் கவனம் செலுத்துங்கள். குடும்ப வாழ்க்கை மன அழுத்தத்தை தரும் என்பதை உங்கள் அன்பானவரிடையே விரிசல் ஏற்படலாம். அனால் மாலை நேரத்தில் உங்கள் வழியில் அவரை நீங்கள் சமாதானப்படுத்த முயலலாம்.
தனுசு
மீட்டிங்கில் தாமதம் ஏற்படுவதால் வேலைகள் தேக்கமடையும். உங்கள் குழு உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்படும். ஆனால் உங்கள் வார்த்தைகள் மற்றும் பேசும் தோணியில் கவனம் தேவை. நீங்கள் பேசும் விதம் இன்று மிகவும் முக்கியம். குடும்ப வாழ்க்கை நிலையாக இருக்கும். எனினும் நீங்கள் சமூக ரீதியில் உங்களுக்கு பல்வேறு கடமைகள் இருக்கும்.
மகரம்
உற்பத்தி தொடர்பான வேலை இருக்கும். உங்களது இதயத்தை தொடர்வதிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதிலும் சமநிலையை காணலாம். குடும்ப உறுப்பினர்களுடனான திட்டத்தில் கடைசி நேர மாற்றங்கள் உண்டகலாம் என்பதால் ஏமாற்றம் அடைய வேண்டாம்.
கும்பம்
உங்கள் வேலையில் தெளிவான முன்னேற்றம் இருக்கும். பணியாற்றும் இடத்தில் புதிய நபர்களை பொறுமையாக கையாள வேண்டும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் சில வேலைகள் தொடர்பாக விவாதிக்க நீங்கள் சிலரை சந்திக்க வேண்டியது இருக்கும். தூங்கும் முறை சற்று தொந்தரவாக இருக்கும்.
மீனம்
நாள் முழுவதும் இன்று வேலை இருந்தாலும், முடிவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். சோதனை மற்றும் முடிவுகளுக்கான இடம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தினரின் உணர்ச்சிகள் குறையும் வாய்ப்புகள் உள்ளதால் நீங்கள் அவர்களுக்கு வலுவாக இருக்க வேண்டும். இந்த நிலைமையை சமாளிக்க உங்களது நண்பர் உதவிகரமாக இருப்பார்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian