Astrology

இன்று ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் காத்திருக்கிறது!உங்கள் ராசி அதில் இருக்கிறதா!

Deepa Lakshmi  |  Jul 19, 2019
இன்று ஐந்து ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம் காத்திருக்கிறது!உங்கள் ராசி அதில் இருக்கிறதா!

இன்று சனிக்கிழமை சதுர்த்தி திதி சதய நட்சத்திரம் ஆடி மாதம் 4ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பாருங்கள்.

மேஷம்

மற்றவர்களின் தாமதம் காரணமாக உங்களது பணியை குறித்த நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். முடிவுகளை தேர்ந்தெடுக்க மற்றவர்களை சார்த்திருக்க வேண்டாம். சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். பணி சுமை காரணமாக குடும்பத்தில் நேரம் ஒதுக்குவது தாமதப்படலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பம் துணையாக இருக்கும்.

ரிஷபம்

பல்வேறு காரணங்களாக விவாதங்கள் எழும்பலாம். காரணமின்றி பகைக்கப்படுவீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்து காத்திருந்த பணி முன்னேற்றம் விரைவில் தேடி வரும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களுடன் வீண் விவாதங்கள் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

முடிவை பற்றி கவலைப்படாமல் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய ஐடியாக்கள் மற்றும் சிந்தனைகளை வழங்குவதில் நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். ஆனால் உங்கள் உழைப்பை மற்றவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். சீனியர்களின் அட்வைசை கேட்பது மிகவும் நல்லது. குடும்ப உறுப்பினர்களின் கருத்திற்கு மரியாதை கொடுங்கள்.

கடகம்

கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கட்டாயம் வந்து சேரும். சக பணியாளர்கள் உங்கள் உழைப்பை மதித்து நடப்பார்கள். சீ்க்கிரத்தில் நல்ல செய்தி வர காத்திருங்கள். உடல் நலனில் அக்கறை தேவை. முட்டி மற்றும் பின்னங்கழுத்து பகுதிகளில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு இருக்கும். நண்பர்களின் பிரச்சணையை குறித்து மனம் வேதனை பட வேண்டாம்.

சிம்மம்

இன்று பல்வேறு விவாதங்கள் மற்றும் அதிகமாக பேச வேண்டிய சூழ்நிலையில் இருப்பீர்கள். பணியில் அநேகரை சமாளிக்க வேண்டிய பொருப்பு உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மனம் தளராமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்கும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள்.

கன்னி

உங்கள் மனதை அதிகம் நம்புங்கள். யாரும் கடைசி வரை உங்களிடம் வரப்போவதில்லை. கவனமாக இருப்பது நல்லது. உங்கள் மனசாட்சி படி நடக்க கற்றுக்கொள்ளுங்கள்.

pinterest

துலாம்

நல்ல மக்களை விட நீங்கள் பார்க்கும் வேலை ஒன்றும் அதிக முக்கியம் கிடையாது. மக்களை நம்புங்கள், வாழ்க்கையில் அனைத்தும் சாதகமாக இருக்காது. சில நேரம் கஷ்டங்கள் வரும் ஆனால் நல்ல மனிதர்கள் மட்டும் தான் கூட இருப்பார்கள்.

விருச்சிகம்

ஒருத்தர் மீது இருக்கும் கோபத்தை மற்றொரு நபர் மீது காட்ட வேண்டாம். சமநிலையாக இருப்பது நல்லது. கோபத்தில் தேவை இல்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். உங்கள் கோபம் பிறரை காயப்படுத்தும். கவனமாக இருப்பது நல்லது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

தனுசு

உங்கள் மனதில் அநேக காரியங்கள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். தேவையில்லாத காரியத்திற்கு மனதை அலட்டிக்கொள்ள வேண்டாம். நீண்ட நாள் உறவு உங்களுக்கு இன்பத்தை கொண்டு வந்து சேர்க்கும். குடும்பத்தில் நேரத்தை செலவிடுங்கள்

மகரம்

உங்கள் பொன்னான நேரத்தை குடும்ப உறுப்பினர்களுக்காக மற்றும் நண்பர்களுக்காக செலவிடுங்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். பணி சுமை சற்று குறைந்து காணப்படும். கிடைக்கும் நேரத்தை குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்

இன்று புதிய வாய்ப்புகள் மற்றும் நல்ல செய்திகள் தேடி வரும். அலுவலகத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுவீரகள். எனினும் உண்மைக்கு புறம்பாக செயல்படாமல் நேர்மையாக இருந்தால் காலம் கைகூடும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களுடன் கவனமாக இருப்பது நல்லது.

மீனம்

இன்று சில முடிவுகளால் உங்கள் மனம் மிகவும் வாடி போய் காணப்படலாம். காரணம் சில நண்பர்கள் உறை பனியை காட்டிலும் அடர்த்தியான சில சங்கடங்களை உங்களுக்கு தரலாம். தேவையின்றி காயப்படுவது போன்று தோன்றும். திடமனதாய் இருங்கள். விரைவில் சூழ்நிலை மாறும்.

ஜோதிட பலன்களை வழங்கியவர் astro ஆஷா ஷா

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Astrology