Astrology

இன்று ஐந்து ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் பொன்னான நாள்!

Swathi Subramanian  |  Jul 2, 2019

இன்று புதன் கிழமை பிரதமை திதி திருவாதிரை நட்சத்திரம் ஆனி மாதம் 18ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பார்த்து பலன் பெறுங்கள்.

மேஷம் 

இன்று உங்கள் கருத்துக்களை மாற்றும் நாளாக இன்றைய நாள் இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது வேலையில் சவாலாக இருக்கும். இன்று நிறைய விளக்கங்கள் கிடைக்கும். இறுதி முடிவு தெளிவாக உங்களிடம் சரணடையும். மற்றவர்களிடம் வளைந்து நெளிந்து செல்லுங்கள். இல்லையென்றால் பின்னால் வருத்தப்பட நேரிடும். 

ரிஷபம் 

இன்று நீங்கள் சமநிலைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். உங்கள் மனம் சொல்வதை பின்பற்றுங்கள். உங்களுக்கு உதவாதவர்களை விட்டு ஒதுங்குங்கள். வேலை நிலையானதாக இருக்கும்  ஆனால் கடினமாக உழைப்பீர்கள். உங்கள் மீது கடுமையான இருப்பதை நிறுத்துங்கள். குடும்ப வாழக்கையில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் துணையுடன் இரவு உணவு அல்லது திரைப்படத்திற்கு சென்று மகிழ்வீர்கள். 

மிதுனம் 

வேலை மெதுவாக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் பரவாயில்லை, உடனிருப்பவர்கள் உங்களை போன்றே இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இன்று பொறுமையாக இருங்கள். உடன் பணிபுரிபவர்கள் உங்கள் பொறுமையை சோதிக்கும் நிலை ஏற்படலாம். ஆனால் மாலை நேரத்திற்குள் அனைத்தும் சரி ஆகிவிடும். நிலுவை பணிகளை முடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சீராக இருக்கும், ஆனால் சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். உங்கள் மனநிலை என்னவாக இருந்தாலும், சமூக கடமைகளை பூர்த்தி செய்ய நீங்கள் வெளியேற வேண்டும். 

கடகம் 

இன்று நீங்கள் சீராக செயல்பட வேண்டும். ஒரு நபர் மீதான கோபத்தை மற்றொருவரின் மீது காட்ட வேண்டாம். பின்னர் அந்த தவறை சரி செய்ய கஷ்டப்படுவீர்கள். வேலை நிலையானதாக இருக்கும் மற்றும் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வேலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு இன்று தெளிவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். நண்பர் ஒருவரால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுகுறித்து யோசிக்காமல் தூங்கிவிடுங்கள். 

சிம்மம் 

உங்கள் மனதில் ஏராளமான விஷயங்கள் குறித்து சிந்தித்து கொண்டிருப்பீர்கள். அவற்றில் இருந்து விடுபட நண்பரின் உதவியை நாடுங்கள். எல்லாவற்றையும் நீங்களே செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் உங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களுக்கு வழிகாட்டலாகவும், ஆறுதலாகவும் இருப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளருடன் உராய்வைத் தவிர்க்கவும்.

கன்னி

இன்று நீங்கள் விரும்பியபடி எல்லாம் நிலையானதாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருடனும்,  நண்பர்களுடனும் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். கடந்த கால சிக்கல்களைப் பற்றிய உரையாடல்களில் திறந்த மனதுடன் இருங்கள். எதுவாகினும் வெளிப்படையாக பேசுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் இணைந்து மாலை நேரத்தை செலவிடுவீர்கள். இன்று உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள்.

youtube

துலாம் 

வேலை நிலையானதாக இருக்கும். இன்று நீங்கள் இதற்கு முன்னர் செய்யாத வேலைகளை செய்ய வேண்டி வரும். ஆனால் அதுகுறித்த தெளிவு உங்களுக்கு கிடைக்கும். உடன் இருப்பவர் ஒருவரின் உடல்நிலை கவலைக்குரியதாக இருக்கும். ஆனால் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதை இது தடுக்காது. பழைய நண்பர்களை இன்று சந்திப்பீர்கள். உங்கள் வேலை குறித்து விவேகத்துடன் இருங்கள்.

விருச்சிகம் 

நீங்கள் எதைச் செய்தாலும் சமநிலையைக் கண்டறியுங்கள். சுற்றியுள்ள மக்கள் கோருவதும் கடினமானதும் இருக்கலாம். இது உங்கள் வேலையுடன் எந்த தொடர்பும் இல்லை. உங்கள் திறனை சந்தேகிக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடமிருந்து தெளிவு கிடைக்க தாமதம் ஏற்படலாம். அதனால் வெறுப்பாக உணரலாம். மாலை  நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையில் பிஸியாக இருப்பதால், நீங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்வீர்கள். அலுவலகத்தில் அன்பான நண்பர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள். அவர்கள் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். 

தனுசு 

வேலை மெதுவாக இருக்கும். ஆனால் நிலுவையில் உள்ள சில ஆர்டர்கள் உங்களை தேடி வரும். படைப்புத் துறையில் இருப்பவர்கள் இன்று பயனடைவார்கள். உங்கள் தற்போதைய வேலையுடன் புதிய வேலை ஒன்று சேறும். மக்களுடன் உராய்வைத் தவிர்க்கவும். நீங்கள் வேலையில் உற்சாகமாக இருப்பதால் குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கைக்கு முன்னுரிமை இருக்காது.

மகரம் 

வேலை நிலையானதாக இருக்கும். எனினும் கடந்த காலத்தில் நீங்கள் பணிபுரிந்தது குறித்து கவலைப்படுவீர்கள். உங்களால் யாராவது ஏமாற நேரிடும். இன்று மாலைக்குள் இந்த பிரச்சனைகள் சரி ஆகிவிடும். உணவு முறைகளை சமநிலைப்படுத்துங்கள். குடும்பத்தினர், நண்பர்களுடனும் நேரத்தை செலவிடுவதால் குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். நன்பர்களின் வாழக்கையை நினைத்து நீங்கள் கவலைப்படுவீர்கள். 

கும்பம் 

வேலை ஒழுங்கற்றதாக இருக்கும். எங்கு செல்ல வேண்டும், என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியாது என்பதால் குழப்பமடைவீர்கள். உங்களை நோட்டமிட்டபவர்களை கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள். வேலையை வேகமாக முடித்து விட்டு குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.

மீனம் 

உங்கள் மனதின் வேகத்தை நீங்கள் குறைத்து, உங்களுக்கு முன்னால் உள்ளதை ஒழுங்கமைக்க வேண்டும். முன்னதாக திட்டமிடுவது நல்லது. பணியில் உள்ளவர்களுடன் தனிப்பட்ட முறையில் விஷயங்களை எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சிபூர்வமாக உங்களை அணுகுவார்கள். இதனால் குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். 

ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Astrology