.jpg)
இன்று திங்கள்கிழமை ஆமாவாஸ்யை திதி மிருகசீருஷம் நட்சத்திரம் ஆனி மாதம் 17ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரி பார்த்து பலன் பெறுங்கள்.
மேஷம்
அலுவலகத்தில் இன்று திடீரென்று வேலைகள் அதிகமாகும். தெளிவுக்காக மற்றவர்கள் உங்களை சார்ந்து இருப்பதால் மற்றவர்களின் பொறுப்பையும் நீங்கள் கவனிக்க வேண்டி வரும். உடன் இருப்பவர்களுக்கு சிக்கல் உண்டாக்க வேண்டாம். ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உணர்ச்சிவசப்படுவதை விட்டுவிட்டு அது குறித்து பேசி சரி பண்ணுங்கள். சமூக வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். உடனிருப்பவர்கள் உங்களுடனான திட்டங்களை ஏற்கனவே முடிவு செய்திருக்கலாம்.
ரிஷபம்
வேலை நிலையானதாக இருக்கும். பணிகளை விரிவாக்கம் செய்வதில் நீங்கள் கவனமாக இருப்பீர்கள். நீங்கள் இன்று புதிய நபர்களுடன் பணியாற்றலாம். குடும்ப வாழ்க்கை முன்பை விட சிறப்பாக இருக்கும். ஆனால் மற்றவர்களின் உணர்ச்சிகள் காரணமாக நீங்கள்பாதுகாப்பற்றதாக உணர்வீர்கள். சமூக வாழ்க்கை ஒழுங்கற்றதாக இருக்கும், உங்களுக்கு முன்னுரிமை இருக்கும் இடத்தில் எப்போதும் இருங்கள்.
மிதுனம்
இன்று அலுவலகத்தில் வேலை நிலையானதாக இருக்கும். மேலும் நீங்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெறும். கடந்த காலத்தில் செய்யப்பட்ட பணிகளுக்கான பாராட்டுகளை இன்று பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளுக்காக உங்களை அணுகுவார்கள். அவர்களை கவனித்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது முக்கியமோ அதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வயிறு மற்றும் தோள்களை கவனித்துக் கொள்ளுங்கள்.
கடகம்
அலுவலகத்தில் இன்று வேலை பரபரப்பாக காணப்படும். செய்ய முடியாத அளவுக்கு வேலை இருக்கலாம். உடனிருப்பவர்கள் உங்கள் உதவியை நடலாம். இன்று ஏதேனும் புதிய வேலையை வித்தியாசமாக செய்யும் வாய்ப்பை பெறுவீர்கள். எதிர்காலத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படும். போதுமான ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும், உங்கள் துணையுடனான பிரச்சனைகளை நீங்கும்.
சிம்மம்
இன்று ஒரு நிலையான நாள். இரண்டாவது பாதியில் சிறிய தாமதங்கள் ஏற்படலாம். நீங்கள் புதிய நபர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், சரியான நபர்களை தேர்தெடுங்கள். காகித வேலைகளில் கவனமாக இருங்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நிறைய திட்டங்களை செய்ய வேண்டாம். கடைசி நிமிடத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்றைய நாள் முடிவில் உங்கள் எண்ணங்கள் ஒழுங்கமைக்க நேரம் ஒதுக்குங்கள்.
கன்னி
வேலையில் அதிக கவனத்துடன் இருங்கள். வேடிக்கையான தவறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இன்று நீங்கள் செய்யும் அனைத்து வேலையையும் இருமுறை சரிபார்க்கவும். நீண்ட நேரம் வேலை பார்க்க வேண்டி இருப்பதால் குடும்பத்தினருடனான திட்டங்களில் தாமதம் ஏற்படும். ஆனால் உடனிருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். ஆரோக்கியத்திற்கு கவனம் தேவைப்படும். கண்களை பாதுகாக்க வேண்டும். பழைய நண்பர்கள் இன்று உங்களை அணுகுவார்.
youtube
துலாம்
உங்களிடமிருந்து மற்றவர்கள் எதிர்பார்ப்பதை செய்வதை விட இன்று உங்கள் மனம் சொல்வதை பின்பற்றுங்கள். அலுவலகத்தில் வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் சில முடிவுகள் குறித்து நீங்கள் குழப்பமடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான கடந்தகால சிக்கல்களைப் பற்றிக் கொள்ளாதீர்கள், ஏனெனில் இது உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும். நண்பர்கள் புரிந்து கொள்வார்கள். அவர்களது ஆலோசனைகளை பின்பற்றினால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
விருச்சிகம்
இன்று வேலை வேகமாக நடைபெறும். நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிக நம்பிக்கையுடன் இருப்பது உங்களுக்கு நல்லதல்ல. உங்கள் உடன் இருப்பவர்கள் குறித்து விமர்சிப்பதை தவிர்க்கவும். எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ளாதீர்கள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும்.
தனுசு
வேலை பரபரப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் சேர்ந்து பணியாற்ற சரியான நபர்களைக் காண்பீர்கள். நீங்கள் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். சுற்றியுள்ள மக்கள் சற்று பாதுகாப்பற்றவர்களாக இருக்கலாம். அவர்களின் உணர்ச்சிகள் உங்கள் வேலையை பாதிக்க விடாதீர்கள். குடும்ப வாழ்க்கை சீராகும். சுற்றியுள்ளவர்கள் அமைதியாகவும், மென்மையாகவும் நடந்து கொள்வார்கள். மன சோர்வு காரணமாக சமூக வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் இருக்கும்.
மகரம்
ஒப்புதல் பெறாமல் உங்கள் படைப்பாற்றலை பயன்படுத்தாதீர்கள். உங்கள் நோக்கங்கள் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். குடும்ப உறுப்பினரின் உடல்நலம் கவலைக்குரியதாக இருக்கும், இதன் காரணமாக நீங்கள் சமூக கடமைகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியாது. நண்பர் ஒருவர் ஆலோசனை பெற உங்களை அணுகலாம்.
கும்பம்
வேலை நிலையானதாக இருக்கும். ஆனால் உங்கள் உடன் இருப்பவர்களுடன் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். முக்கியமான வேலை அல்லது குழு பணியில் தாமதங்கள் ஏற்படலாம். உடன் இருப்பவர்கள் மீது எரிச்சலடைவதில் அர்த்தமில்லை. சுற்றியுள்ள மக்கள் மந்தமான மன நிலையுடன் இருப்பதால் குடும்ப வாழ்க்கை ஒழுங்கற்றதாக இருக்கும். நாடகத்திற்கு வழிவகுக்கும் என்பதால் தனிப்பட்ட முறையில் விஷயங்களைப் பெற வேண்டாம்.
மீனம்
நீங்கள் புதிய வேலையை மேற்கொள்வதற்கு முன் நிலுவையில் உள்ள வேலையை முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். உங்கள் திறனை நிரூபிக்க அவசரமாக செயல்படுவதால், பாதுகாப்பற்றதாக உணருவீர்கள். மெதுவாக வேலை செய்வது உங்களுக்கு பாதுகாப்பு உணர்வை தரும். உங்கள் மன உறுதியை அதிகரிக்க குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் திட்டங்களை வைத்திருப்பதால் சமூக வாழ்க்கை மெதுவாக இருக்கும்.
ஜோதிட பலன்களை கணித்தவர் astro ஆஷா ஷா.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.
Read More From Astrology
வெற்றிப்பாதையில் பயணிக்கப் போகும் அந்த அதிர்ஷ்ட ராசி யாருடையது ! சரிபாருங்கள் !
Deepa Lakshmi
தேவதைகள் மற்றும் பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து கொண்டால் எல்லாம் வெற்றிதான் – ராசிபலன்
Deepa Lakshmi
இன்று சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படும் நான்கு ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!
Swathi Subramanian