Celebrity Life

குழந்தைக்காக காத்திருக்கும் அறந்தாங்கி நிஷா.. விமர்சையாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!

Swathi Subramanian  |  Dec 13, 2019
குழந்தைக்காக காத்திருக்கும் அறந்தாங்கி நிஷா.. விமர்சையாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் உலகம் எங்கும் ரசிகர்களைப் பெற்றிருப்பவர் அறந்தாங்கி நிஷா. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். தனது நகைச்சுவை பேச்சால் ஏராளாமான ரசிகர்களை கொண்டுள்ளார். 

இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள் மற்றும் கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது தோற்றமும், கறுப்பு நிறமும் எவ்வாறு தனக்கு அவமானத்தைத் தேடித் தந்தது என்பது குறித்தும், தான் எவ்வாறெல்லாம் புறக்கணிக்கப்பட்டேன் என்பது பற்றியும் அவர் பல பேட்டிகளில் உருக்கமாக விவரித்துள்ளார். 

twitter

பள்ளிக்காலத்தில் தனது அத்தை மகனை காதலிக்க ஆரம்பித்த நிஷா, 5 வருடங்கள் கழித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். நேற்று வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்களை இணையத்தளத்தில் நிஷா பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பிரபலங்கள் அனைவரும் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க – நடிகர் விஷாலின் தங்கை இவ்வளவு அழகா ! வைரலாகும் விஷால் தங்கை புகைப்படம் !

இதனிடையே இந்த மகிழ்ச்சியான தருணம் குறித்து பேசிய நிஷா (aranthangi nisha), எங்கள் உறவினர் திருமணத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்தபோது கரன்ட் போயிருந்த நேரத்தில் எனது கையை பிடித்து நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும் என கூறினார் ரியாஸ். அதன்பிறகு அவர் வெளிநாடு சென்றுவிட, லேண்ட்லைன் மூலம் இருவரும் பேசி எங்களது காதலை வளர்த்தோம். ஒரு முறை இவருக்கு காதல் கடிதம் எழுதி அனுப்பினேன், அதில் ஐ லவ் யூ என்ற வார்த்தையை மட்டும் ரத்தத்தில் எழுதியிருந்தேன்.

twitter

இதைப்பார்த்து விட்டு ரியாஸ், என்ன புள்ள கலர் ஸ்கெட்ச்ல எழுதினாயா என கேட்டார். அட போய்யா உனக்காக ரத்தத்தை வீணாக்கிவிட்டேன் என கூறி கிண்டல் செய்தேன். இப்படி ரத்தம் சிந்தி வளர்ந்த காதல் எங்களுடையது என கூறியுள்ளார். 

ரியாஸ் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அப்பா, என்னை அவருக்கு திருமணம் செய்துவைக்க தயங்கினார். பிறகு உறவினர்கள் உதவியுடன் எங்களது திருமணம் நடந்தது. எனது கணவர் எனக்கு அனைத்து உரிமைகளும் கொடுத்து, எனது திறமையை வெளிக்காட்ட பக்கபலமாக இருக்கிறார் என்றார். 

மேலும் படிக்க – சூப்பர் சிங்கர் புகழ் திவாகருக்கு திருமணம்… பிரலங்கள் கொடுத்த அதிர்ச்சி பரிசுகள்!

நான் இப்போது கர்ப்பமாக இருப்பதால் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றோம். என் வாழ்க்கையில நான் நிறையா அடி வாங்கியிருக்கேன். என் குடும்பம் பொருளாதார ரீதியா கஷ்டத்துல இருந்ததால் அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி மேல வர ரொம்ப கஷ்டபட்டோம்.

instagram

தற்போது கிடைத்துள்ள இடத்தை நான் தக்க வெச்சிக்க நினைக்கிறேன். தற்போது என் வயித்துல இருக்கும் என் குழந்தைக்காகவும் சேர்ந்துதான் ஓடுறேன். சில சமயம் சோர்வா இருக்கும். அந்த நேரத்தில் என்னோட காமெடி ஷோ வீடியோக்களை பார்த்து எனக்கு நானே என்கரேஜ் பண்ணிப்பேன். 

என் குழந்தைகிட்ட இப்போதே சொல்கிறேன், அம்மா உனக்கும் சேர்த்துதான் ஓடுறேன். பொறந்த உடனே நீயும் என்னை மாதிரி சுறுசுறுப்பா இருக்கணும். என் குழந்தை என்னை புரிஞ்சிக்கும் என நிஷா (aranthangi nisha) நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மேலும் குழந்தை பிறந்ததும் ரொம்ப நாள் ஓய்வெடுக்க மாட்டேன், நிகழ்ச்சிக்கு கிளம்பிடுவேன்னு என எனது கணவர்கிட்ட பெர்மிஷன் கேட்டிருக்கேன். அவர் உன் உடல்நிலை ஒத்துழைச்சா தாராளமா போன்னு சொன்னார். 

நான் இவ்வளவு ரிஸ்க் எடுக்க காரணம் என் வேலை எனக்கு அவ்வளவு பிடிக்கும் என மகிழ்ச்சியாக கூறுகிறார். தனது வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள நிஷா, (aranthangi nisha) தனது குழந்தைக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க – பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த நடிகை நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life