Age Care

முதுமையை தடுக்கும் அல்டிமேட் செக்லிஸ்ட் இதோ ! 25 வயதுடையவர்களுக்கானது !

Sakshi Budhraja  |  Mar 8, 2019
முதுமையை தடுக்கும் அல்டிமேட் செக்லிஸ்ட் இதோ ! 25 வயதுடையவர்களுக்கானது !

தியோலுக்கு 25 வயது ஆகும்போது Cara Delevingne தனது முதுமையின் முக சுருக்கங்களுக்கான ப்ராடக்ட் ஒன்றிற்கு மாடல் ஆக இருந்தார். 25 வயது பெண் முதுமை சுருக்கங்களை தடுக்கும் கிரீம்களை எதற்காக பயன்படுத்த வேண்டும் என்கிற கேள்வி எழுந்தது. இதே போல உங்களுக்கும் எழலாம். எனக்கெதற்கு ஆன்டி ஏஜிங் கிரீம் என்று. இதற்கு பதிலாக இதைத்தான் சொல்ல முடியும். உங்களது 25வயதில் சருமம் தனது கொலாஜென் தயாரிப்பை நிறுத்தி விடுகிறது. அன்றில் இருந்துதான் முக சுருக்கங்கள் , கோடுகள் போன்றவை உடலுக்குள் நடக்க ஆரம்பிக்கின்றன.

மிக சரியாக அந்த நேரத்தில்தான் நீங்கள் சருமம் முதுமையடைவதை தடுக்கும் பராமரிப்புக்களை செய்ய வேண்டும்.

வயதானவர் போல தோற்றமளிப்பதற்கான காரணம்

அழகு குறிப்புகள்

சரும பாதுகாப்பு பொருள்கள்

வயதானவர் போல தோற்றமளிப்பதற்கான காரணம்

வயதை பற்றிய உங்களது அணுகுமுறை

உங்களுக்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் கண்ணாடியை பார்த்து கூறுவீர்களே ஆனால் உங்கள் சருமமும் அதனை நம்பத் தொடங்கிவிடும். இளமையான தோற்றத்தை பெற மிக முக்கியமானது சந்தோஷமும் மகிழ்ச்சியான மனநிலைதான். சந்தோஷமான மனிதர்கள் ஆரோக்யமாக இருக்கிறார்கள் என்பது உண்மைதானே. கவலைகள் இல்லாத மனமுடையவர்களை இதயநோய், ரத்த அழுத்தம் போன்ற எந்த நோயும் அணுகுவதில்லை. கவலையான சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு சீக்கிரமே வயதாகி விடும் தோற்றம் சுருக்கங்கள் போன்றவை தோன்றுகின்றன. ஆகவே இளமையான தோற்றத்திற்கு உங்கள் மனமகிழ்ச்சி மிக முக்கியம். அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

புகைப்பழக்கம் மற்றும் குடிப்பழக்கம்

அளவுக்கதிகமான எதுவும் உங்கள் உடலுக்கு நல்லதல்ல. புகைபிடிக்கிறீர்கள் என்றால் அதனை நிறுத்த இதுவே நேரம்.புகைப்பழக்கம் உங்கள் நுரையீரலுக்கு மட்டுமல்ல உங்கள் சருமத்தையும் பாதிக்கும். சுருக்கங்களை உண்டாக்கும். உதடுகளின் அருகே கோடுகளை உருவாகும். பற்களின் அழகையும் பாதிக்கும்.

பருவநிலை மாற்றங்கள்

உங்களுக்கு நம்ப முடிகிறதோ இல்லையோ சரும பிரச்னைகளுக்கு பருவநிலை மாற்றங்கள் முக்கிய காரணிகளாகிறது. அதிக வெப்பமான இடத்தில் உங்கள் சருமம் அதிக உலர்வாகும்.அதிக குளிர் பிரதேசத்தில் உங்கள் சருமம் உதிரும் மற்றும் டல்லாக இருக்கும். அதிக வெயிலால் நிறம் மாறுதல் (tan) கூட ஏற்படும். இப்படியே சில காலங்கள் போனால் உங்கள் முகத்தில் பருக்கள் , கரும்புள்ளிகள் மற்றும் கோடுகள் உருவாகலாம். ஆகவே வெளியே தட்பவெப்பம் எப்படி இருந்தாலும் நீங்கள் உங்கள் சருமத்தை மாய்ச்சுரைஸ் செய்வது அவசியம்.

நீங்கள் எதை உண்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்

என்னதான் கிரீம்கள் பூசினாலும் உங்கள் உணவுப்பழக்கம் சரியாக இல்லை என்றால் அது எதுவும் வேலை செய்யாது. உங்கள் உடல் கேட்கும் உணவை தர வேண்டியது அவசியம்தான் என்றாலும் எப்போதுமே அல்ல. மாவு பொருள்கள், சர்க்கரை, வறுத்த பொறித்த உணவுகள், பால் பொருட்கள் போன்றவற்றை நீங்கள் தவிர்த்துவிட்டால் உங்கள் சருமத்தில் ஒரு பரு கூட இருக்காது. அதற்கு பதிலாக அதிகப்படியான பழங்கள், காய்கள் அதிக நீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் 6 டம்ளர் நீரில் ஆரம்பியுங்கள் பின்னர் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

எப்போதும் மன அழுத்தம்

மன அழுத்தம் உங்களுக்கு வெகு சீக்கிரமே வயதான தோற்றத்தை கொடுக்கிறது. உங்களை நீங்கள் அமைதிப்படுத்துவது அவசியம், உங்கள் உடல் எப்போதெல்லாம் பதட்டம் அடைகிறதோ நீங்கள் ஆழமான மூச்சை எடுங்கள். உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்துங்கள். உடனே புகைபிடிக்கவோ குடிக்கவோ செய்யாமல் ஸ்பாவிற்கு செல்ல பழகுங்கள். அரோமாதெரபி எடுங்கள் அல்லது மென்மையான இசையுடன் யோகா செய்யுங்கள்.

மேலும் இளமையாக்க சில அழகுக்குறிப்புகள்

1. இளமையைத் தக்க வைத்துக் கொள்ள முக்கியமான முதல் விஷயம் உணவில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்களை சேர்ப்பதுதான். நோய்களை எதிர்ப்பதோடு அவை உடலில் சுருக்கங்களை தடுக்கிறது. ஒரு கிண்ணம் முழுக்க பெர்ரி பழங்கள், கீரை வகைகள், சில விதை வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமத்தின் படிமங்களை இவை பாதுகாக்கும்.

2. உங்களிடம் லேசான அல்லது வலிமையான SPF பொருள் எது இருந்தாலும் அதனை உபயோகிப்பது அவசியம். வீட்டை விட்டு வெளியே கிளம்பும் ஒவ்வொரு சமயங்களிலும் SPF உபயோகிக்க வேண்டும். சூரிய கதிர்களிடம் இருந்து நம் சருமத்தை இது பாதுகாக்கும்.

3. நாள் முழுவதும் தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளைக்கு 8 முதல் 10 க்ளாஸ் நீர் குடியுங்கள்.

4. ஸ்க்ரப்பர் உபயோக்கிறீர்கள் என்றால் அதில் நுண்ணிய பந்துகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சில சமயம் அது உங்கள் தோலை கிழிக்கலாம் அல்லது உலர்ந்து போக செய்யலாம்.

5. மாய்ச்சுரைசர் இல்லை என்றால் கவலைப் பட வேண்டாம் . தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

6. குறைந்தது 8 மணிநேர உறக்கமாவது உங்களுக்கு தேவைப்படும். உறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாவது நீங்கள் உங்கள் எலெக்ட்ரானிக்ஸ் மொபைல் போன்றவைகளை அணைத்து விட வேண்டும். உங்கள் அறையில் எந்த தொந்தரவும் இல்லாமல் நீங்கள் தூங்க வேண்டும்.

7. CTM வழக்கத்தை பின்பற்றுங்கள். கிளென்ஸ், டோனர், மாய்ச்சுரைஸ். ஏன் கிளென்ஸ் செய்கிறோம், ஏனெனில் அது நம் அழுக்குகளை அகற்றுகிறது. ஏன் டோனர் பயன்படுத்துகிறோம் ஏனெனில் விட்டு போன மேக்கப் பிசிறுகளை அது அகற்றி விடுகிறது. ஏன் மாய்ச்சுரைஸ் ஏனெனில் அது உங்கள் சருமத்தை ஈர்ப்பதத்தோடு புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

8. யோகா த்யானம் போன்றவை உங்கள் சருமத்தில் அற்புதமான மாற்றங்களை தருகிறது. நீண்ட மூச்சு பிராணாயாமம் உங்கள் அழகை அதிகரிக்கும்.

9. உங்கள் தலையணை உறைகள் எப்போதும் சாட்டின் அல்லது சில்க் துணியால் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் பருத்தி உங்கள் சருமத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சி உளர் சருமம் ஆக்கி விடும்.

10. உங்கள் மேக்கப் பிரஸ்களை சுத்தமாக கழுவி வைத்து உபயோகப்படுத்துங்கள். பேபி ஷாம்பூ அல்லது சுத்தமான நீரினால் அலசி காயவைத்து உபயோகம் செய்வது சருமத்திற்கு நல்லது.

11. உங்கள் நாளை நீங்கள் டீ அல்லது காபியுடன் தொடங்கும் முன்பு ஒரு ஸ்மூத்தியுடன் தொடங்குங்கள். ஒரு ஆரோக்கியமான ஸ்மூத்தி உங்கள் நாளை மாற்றும். சருமத்தை பளபளப்பாக்கும்.

12. சரும பாதுகாப்பு பொருள்களில் சல்பேட் , பேரபின் , சிலிக்கான் இல்லாமல் பயன்படுத்துங்கள். இயற்கையில் இவைகள் நச்சுத்தன்மை உடையவை.இதனை சருமத்தில் பயன்படுத்தும்போது சருமத்தின் எண்ணெய்த்தன்மை உறிஞ்சப்படுகிறது.

13. முகம் கழுவிய பிறகு நேரம் இருந்தால் நீங்கள் கொஞ்சம் ஆவி பிடிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் சருமம் அற்புதமாக இருக்கும்.

14. உங்கள் சருமத்தின் துளைகள் மற்றும் சவ்வு பகுதிகளை பத்திரமாக பாதுகாக்க மீன் உணவினை எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது அதனால் செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். புரத சத்து அதிகம் உள்ள இந்த உணவு உங்கள் சருமத்தை பொலிவாகவே வைத்திருக்கும்.

15. அவசரமாக மேக்கப் போட வேண்டி வந்தால் கன்சீலரை இப்படி பயன்படுத்துங்கள். கண்களின் வெளிப்புறத்தில் மற்றும் மூக்கின் துவாரங்களில் இது உங்களை அழகாக்கி ஒளி வீசும் பேரழகை தரும்.

16. மேக்கப் பற்றி பேசும்போது கொஞ்சம் கன்னங்களில் ரூஜ் தடவுங்கள். இயற்கையான பிளஷ் பெண்களை அழகாக காட்டும்.

17. matte மேக்கப்களை விடவும் கொஞ்சம் ஈரப்பதம் கொண்ட மேக்கப் அழகைத் தரும். பிரகாசமான பொலிவைத் தரும்.

18. வீட்டிலேயே தயாரிக்கும் பால், மஞ்சள் , தேன் போன்ற பொருள்களால் உங்கள் சருமம் அழகாகும். இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து வைத்துக் கொண்டு முகம் முழுவதும் தடவி 20-30 நிமிடம் உலரவிடுங்கள் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி கொள்ளுங்கள்.

19. இன்னொரு முறை எலுமிச்சை சாறு. இதனை பயன்படுத்துவதன் மூலம் கரும்புள்ளிகள் மறைந்து சருமம் பிரகாசமாக இருக்கும். எலுமிச்சை சாறோடு தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். தேவை என்றால் கொஞ்சம் நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை 4 மாதங்கள் இந்த முறையை பின்பற்றினால் போதுமானது.

20. உங்கள் கூந்தலை ஏன் ஒரே மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். கொஞ்சம் குட்டையான கூந்தல் நம் இளமையை அதிகரிக்கும். பாப்,பிக்சி , லாப்ஸ் போன்ற ஹேர் ஸ்டைல்களை முயன்று பாருங்கள்.

இளமையான சருமத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய முதலீடு இந்த சரும பாதுகாப்பு பொருள்கள்தான்

1. CTM நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது.

க்ளென்ஸ், டோன் , மாய்ச்சுரைஸ் என்பது மிக முக்கியமானது. இது உங்கள் சருமத்தை இளமையாகவே வைக்க உதவுகிறது. சரியான பிஎச் பேலன்ஸ் இருப்பது மிக அவசியம். தினமும் எழுந்த உடனும் , உறங்கும் முன்பும் இதனை அவசியம் செய்து விடுங்கள்.

POPxo Recommends: Kama Ayurveda Rose Jasmine Face Cleanser (Rs 375), The Body Shop Seaweed Oil Balancing Toner (Rs 995), The Face Shop White Seed Blanclouding Moisture Cream (Rs 1,752)

2. டே கிரீம் மற்றும் நைட் க்ரீம் இரண்டும் வேறு வேறு

காலையில் உபயோகிக்கும் அதே கிரீமை இரவிலும் உபயோகிக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் நிச்சயம் அது தவறான முடிவு. உறங்கும் போது சருமம் தன்னைத் தானே சரி செய்யும் நேரம். அதற்கு பகலில் போட்ட அதே கிரீம் பயன்படுத்த கூடாது.

POPxo Recommends: The Body Shop Vitamin E Nourishing Night Cream (Rs 1,095)

3. ஆன்டி ஏஜிங் சீரம் எப்போதும் அற்புதமானவை

ஒரு நல்ல சீரம் மாய்ச்சுரைஸ் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள உதவும். வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ள சீரம் நீங்கள் தேர்ந்தெடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். சருமத்தை ஊடுருவி சென்று சரி செய்யும் ஆற்றல் சீரமுக்கு உண்டு.

POPxo Recommends: Innisfree Jeju Pomegranate Revitalizing Essence (Rs 2,000)

4. உங்கள் முகம் மற்றும் கழுத்தின் மீது கவனம் வையுங்கள்.

எப்போதும் ஒன்றை கவனம் கொள்ளுங்கள். ஒரு முக கிரீம் அல்லது பவுடரை அல்லது பேக்கை போடும்போதும் வட்ட வடிவமாக நீங்கள் மஸாஜ் செய்ய வேண்டும். அதுவும் முகத்தில் மட்டுமல்லாமல் கழுத்திலும் தடவ வேண்டும். முகத்தில் ஏற்படும் அதே சுருக்கங்கள் கழுத்திலும் ஏற்படுகிறது. ஆனால் நம் கண்களுக்கு தெரிவதில்லை.

POPxo Recommends: Sebamed Anti-Ageing Q10 Protection Cream Ph5.5 (Rs 1,382)

5. சன்ஸ்க்ரீனை தவிர்ப்பது சருமத்திற்கு நல்லதல்ல

இதனை ஏன் அடிக்கடி கூறுகிறோம் என்றால் இது சருமத்திற்கு அவ்வளவு முக்கியமானது. நீங்கள் வெளியே செலவிட்டாலும் கூட அன்றைக்கு சூரியன் அதிகம் சுடாவிட்டாலும் கூட இதனை நீங்கள் அவசியம் தடவ வேண்டும். இது முதுமையால் ஏற்படும் கரும்புள்ளிகள் அல்லது கோடுகளை தடுக்கும். சரும சேதாரத்தை காப்பாற்றும்.

POPxo Recommends: Kiehl’s Ultra Light Daily UV Defense Mineral Sunscreen SPF 50 (Rs 3,250)

6. இறந்த செல்களை அகற்றுதல்

உங்கள் முகத்தை வாரத்திற்கு ஒருமுறையாவது தளர செய்வது நன்மை தரும். இப்படி செய்வதன் மூலம் முதுமையின் சுருக்கங்கள் வராமல் தடுக்கப்படுவது மட்டுமல்லாமல் இறந்த செல்களை அழிக்கிறது மேலும் புதிய செல்களை காக்கிறது.

POPxo Recommends: Khadi Natural Rose, Apricot & Walnut Herbal Exfoliating Facial Scrub With Shea Butter (Rs 390)

7. பேஷியல் மசாஜ்கள்

மாதம் ஒருமுறை செய்யப்படும் பேசியல் மசாஜ்கள் உங்கள் முகத்தை இளமையாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. முகத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி புது அழகை தருகிறது. மிக சிறப்பான தெரபிஸ்ட்களின் அப்பாயின்மென்ட் பெற்று மாதம் ஒருமுறை இதனை செய்து வாருங்கள்.

POPxo Recommends: Aroma Treasures Aloe Vera Gel (Rs 120) will be a good product to use when massaging your face at home. And for your eyes, use the Clinique Pep-Start Eye Cream (Rs 1,950)

படங்கள் உதவி ஷட்டர் ஸ்டாக்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

 

 

 

 

Read More From Age Care