
நடிகை ஆண்ட்ரியா .. இந்த மென்மை நிறைந்த பெண்ணை யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல திறமைகளையும் பேரழகையும் தன்னுள்ளே கொண்ட தமிழ் நடிகை ஆண்ட்ரியா.
சமீப காலமாக இவரை சினிமா நிகழ்வுகள் மற்றும் வேறு எங்குமே காண முடியவில்லை. காரணம் அறிந்த போது இவருக்கே இந்த நிலை என்றால்.. என்று மனம் விதிர் விதித்துப் போகிறது.
நடிகை ஆண்ட்ரியா (andrea) கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு சிகிச்சை வேண்டி ஆயுர்வேதத்தை நாடி இருக்கிறார். பல மாதங்கள்தொடர் ஆயுர்வேத சிகிச்சை இவருக்குத் தரப்பட்டு வருகிறது.
ஆண்ட்ரியாவின் ரசிகர்களுக்கு மாதக்கணக்காய் இவர் ஏன் சிகிச்சை எடுத்துக் கொள்கிறார் அவ்வளவு மன அழுத்தம் வரக் காரணம் என்ன என்கிற கவலை இருந்தது. பெங்களுருவில் நடந்த கவிதைப் போட்டி ஒன்றில் ஆண்ட்ரியா கலந்து கொண்ட போது இது குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப் பட்டன.
நடிகை தேவயானியின் காதல் ரகசியங்கள் ! சுவாரசியமான காதல் கதை !
Youtube
எப்போதும் உண்மை பேசுவது என்பது எல்லோராலும் முடியாத ஒன்று. உள்ளே ஒரு முகமாவும் வெளியே நல் முகமாவும் தன்னைக் காட்டிக் கொள்ளும் பல அசுத்தமான ஆத்மாக்கள் இங்கே இருக்கின்றன. ஆனால் ஆண்ட்ரியா அப்படிப்பட்டவர் அல்ல. பரிசுத்தமான மனம் எப்போதும் உண்மையை மட்டுமே பேசும். தனது செயல்களில் வெளிப்படையாக இருக்கும்.
ஆண்ட்ரியாவும் (andrea) அப்படிப்பட்டவர்தான். அதனால்தான் தனது தவறுகளை பத்திரிகையாளர் பேட்டியில் நேர்மையாக மனம் விட்டு பேச அவருக்கு முடிந்திருக்கிறது.
ஏற்கனவே திருமணமான ஒருவருடன் தான் தவறான உறவில் இருந்ததாக ஆண்ட்ரியா தெரிவித்திருக்கிறார். அதனால் பல மன உளைச்சல்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்ட நபர் ஆண்ட்ரியாவை உடல் ரீதியாகவும் காயப்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
தான் செய்த தவறால் தனது வாழ்க்கையே இருண்டு விட்டது என்று கூறிய ஆண்ட்ரியா இதனை வெளிப்படுத்தவே ‘முறிந்த சிறகுகள்’ எனும் கவிதை நூலை தான் வெளியிட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
தனிமையான பெண்களைக் குறிவைக்கும் காமுகர்கள்-ரேவதியின் வேதனைக் கதை..என்று தீரும் இந்த சோகம்?
Youtube
ஆண்ட்ரியா ஒரு நல்ல பாடகி, திறமையான நடிகை, நடனத்தில் தேர்ந்தவர் கவிதைகள் எழுதுபவர் என இத்தனை நல்ல விஷயங்கள் இருந்தும் காதல் உறவு என்று வரும் போது அவர் தடுமாறுகிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தனை அறிவானவர்களாக இருந்தாலும் அன்பின் பெயரால் நடத்தப்படும் துரோகங்களுக்கு அவர்களும் பலியாகி விடுகிறார்கள் என்பது தான் சோகத்தின் உச்சக்கட்டம்.
திரையுலகிலும் சரி பொது வாழ்விலும் சரி எத்தனையோ போலித்தனமான மனிதர்கள் தன்னை நல்லவராகக் காட்டிக் கொண்டு கள்ள உறவுகள் மூலம் குற்றங்கள் செய்து கொண்டு உலகையும் உடன் இருக்கும் உறவுகளையும் நண்பர்களையும் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
Youtube
ஆனால் ஆண்ட்ரியா போன்ற ஒரு சிலரால்தான் தனது தவறுகளை வெளிப்படையாக பேச முடிகிற மன தைரியம் இருக்கிறது. தன்னுடைய மன வலிகளை மறக்க சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆண்ட்ரியா எனும் பெண் வெகு சீக்கிரம் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட வலிகளில் இருந்து வெளிவர வேண்டும்.
அவரது முறிந்த சிறகுகள் துயரத்தில் இருந்து மீண்டு வளர வேண்டும். முன்னிலும் அதிக உயரத்தில் அவர் பறக்க சந்தோஷத்தின் சிறகுகள் மீண்டும் முளைக்க வேண்டும்.
காதல் உறவில் நம்பிக்கை துரோகங்கள்.. இதில் காயப்பட்டவர்கள் தான் வலி அனுபவிக்கிறார்களே தவிர காயப்படுத்தியவர்களை ஏன் நீங்கள் கண்டு கொள்வதில்லை என்கிற பெரிய கேள்வியை கடவுளிடம் வைத்து விட்டு இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன
Read More From Celebrity gossip
உங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்!
Deepa Lakshmi
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
Deepa Lakshmi
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..
Deepa Lakshmi
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!
Deepa Lakshmi
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !
Deepa Lakshmi