Celebrity gossip

அம்பிகாவிற்கு இத்தனை அழகான மகனா! அவர் லிவிங்ஸ்டன் மகளுடன் என்ன செய்கிறார் ?!

Deepa Lakshmi  |  Oct 14, 2019
அம்பிகாவிற்கு இத்தனை அழகான மகனா! அவர் லிவிங்ஸ்டன் மகளுடன் என்ன செய்கிறார் ?!

தமிழ் சினிமாவை குறிப்பிட்ட வருடங்கள் வரை தன்னுடைய கால்ஷீட்டால் நிரப்பியவர்கள் நடிகை அம்பிகா (ambika) மற்றும் ராதா (radha) . முன்னணி நட்சத்திரங்களுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டே இருந்த அம்பிகா ராதா வரவிற்கு பின்னர் கொஞ்சம் டல்லானார்.                                                                

அதன் பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்து திருமணம் செய்து செட்டிலான அம்பிகா (ambika) நீண்ட இடைவெளிக்கு பின்னர் பாலாவின் அவன் இவன் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பின் இப்போது வரை குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.                                                                   

Youtube

இது தவிர சீரியல்களிலும் நடித்து வரும் அம்பிகாவிற்கு ராம் கேஷவ் மற்றும் ரிஷி கேஷவ் என்கிற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்களை அம்பிகா அதிகம் வெளி உலகிற்கு அறிமுகப்டுத்தியதில்லை. இதில் ராம் கேஷவ் தற்போது ஒரு தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.               

“கலாசல்” என்னும் தமிழ்ப்படத்தில் அவர் அறிமுகம் ஆக இருக்கிறார். சுந்தர் சி , பத்ரி போன்றோரிடம் துணை இயக்குனராக பணி புரிந்த அஸ்வின் மாதவ் தன்னுடைய முதல் படமாக இதனை இயக்க இருக்கிறார். இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயம் என்ன என்றால் இதில் ராம் கேஷவிற்கு ஜோடியாக நடிப்பது நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் என்பதுதான்.     

நாடியா ஓகே சொல்லிட்டாங்க.. காதலிலும் ஜெயித்த முகேன் !                                      

Youtube

ஹீரோ ஹீரோயின் இருவருமே நடிப்பு குடும்பத்தில் இருந்து வருவதால் திரைப்படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஆகி இருக்கின்றன. அம்பிகாவிற்கு இப்படி சாக்லேட் பாய் பையன் இருக்கிறான் என்பது தெரியாமல் போய்விட்டதே என இளம்பெண்கள் இந்த திரைப்படத்திற்காக இப்போதில் இருந்தே காத்திருக்கிறார்கள்.                                                                     

சூப்பர் ஸ்டார் மகனுடன் காதலில் விழுந்த நடிகை கல்யாணி பிரியதர்ஷன்? நட்பு காதலானது!

Youtube

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity gossip