Family

கடைசி நேரத்தில் கை கொடுத்த அண்ணன் – நன்றியால் உருகும் தம்பி ; அம்பானி சகோதரர்களின் நெகிழ்ச்சியான தருணம் !

Deepa Lakshmi  |  Mar 19, 2019
கடைசி நேரத்தில் கை கொடுத்த அண்ணன் – நன்றியால் உருகும் தம்பி ; அம்பானி சகோதரர்களின் நெகிழ்ச்சியான தருணம் !

“நம்மைப் போன்ற நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை

ஒன்றாய்க் காணும் வானம் என்றும் ரெண்டாய் மாற நியாயம் இல்லை”

இரண்டாக பிரிந்திருந்த அம்பானி சகோதரர்கள் இனி இந்தப் பாடலை தங்கள் குடும்ப பாடலாக மாற்றி விடவும் வாய்ப்பிருக்கிறது!

— இந்தியாவின் முதல் பணக்காரர்களான அம்பானி (Ambani) குடும்பத்தில் சமீபகாலமாக சந்தோஷங்களு குறைவில்லாமல் இருந்து வந்தது தொடர்ச்சியான திருமண கொண்டாட்டங்களில் மூழ்கியிருந்தார் முகேஷ் அம்பானி.

இவரது சகோதரர் அனில் அம்பானியோ ரிலையன்ஸ் குழுமத்தில் ஏற்பட்ட தொடர் நஷ்டம் காரணமாக எரிக்சன் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை தர முடியாத நிலையில் இருந்தார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு படி 450கோடியை அனில் அம்பானி திரும்ப செலுத்த இன்றுதான் கடைசி நாள். பல்வேறு இடங்களில் முயற்சித்தும் அனில் அம்பானியால் பணம் புரட்ட முடியவில்லை. வழக்கின் ஆரம்பத்திலேயே அண்ணனிடம் உதவி கேட்டும் முகேஷ் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் பரவின.

450 கோடி பணம் கட்டாவிட்டால் அனில் அம்பானி சிறைக்கு செல்ல நேரிடும். இன்று இந்த வழக்கில் அனில் பணம் கட்டுவாரா அல்லது சிறைக்கு செல்வாரா என்று நாடே பதட்டத்துடன் இருந்த நிலையில் கடைசி நேரத்தில் நேற்று முகேஷ் அம்பானி தனது சகோதரர் கோர்ட்டில் கட்ட வேண்டிய 450கோடி ரூபாய் பணத்தை கட்டி அனில் அம்பானியை சிக்கலில் இருந்து மீட்டிருக்கிறார்.

ஏற்கனவே மறுத்த முகேஷ் அம்பானி யாரும் எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் தனது தம்பியைக் காப்பாற்றிய சம்பவத்தை நாடே சந்தோஷமாக கொண்டாடுகிறது. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடி அம்பானி சகோதரர்கள் மீண்டும் ஒன்றிணைந்தனர்.

இதனை இந்தியாவே சந்தோஷமாக கொண்டாடுகிறது. இந்திய பங்கு சந்தை 40000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது! நிச்சயம் இது ஒரு சிறந்த நாள்தான்.

இந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் கொண்டாடும் சில நெட்டிசன்கள்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

படங்கள் ஆதாரம் பிக்ஸ்சா பே , பாக்ஸெல்ஸ் , மற்றும் ட்விட்டர்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

Read More From Family