
தனியார் தொலைக்காட்சியில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர்கள், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக நடித்தனர்.
ராஜா ராணி தொடரில் ஆலியா நடித்த செண்பா என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. முதலில் வேறு ஓருவரை காதலித்து வந்த ஆலியா பின்னர் தன்னுடன் சீரியலில் நடித்த குளிர் 100 டிகிரி படத்தின் நாயகன் சஞ்சீவை காதலிக்க தொடங்கினார்.
ஏற்கனேவே ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ்விற்கு தனியார் டிவியே பிரம்மாண்டமாக திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தது. மேலும் இவர்கள் நடித்து வரும் ராஜா ராணி சீரியலை விட இவர்கள் வெளியில் செய்யும் ரொமான்ஸ் தான் அதிகமாக இருந்தது.
பின்னர் கடந்த மே மாதத்தில் யாருக்கும் தெரியாமல் பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின் ஆலியா சின்னத்திரையில் நடிப்பதற்கு ஒரு பிரேக் கொடுத்திருந்தார்.
குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!
எனினும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டு அசத்தி வந்தார். சமீபத்தில் தான் ஆலியா அவர் கட்டிய வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து குடியேறினார்.
இதனை தொடர்ந்து மற்றொரு சந்தோஷமான விஷயம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஆலியா மானசா கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த ஆனந்தத்தை அவர்கள் கொண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் வெளியான சில நாட்களுக்கு சஞ்சீவ் அவர்களே அதை உறுதி செய்தார். இந்நிலையில் நேற்று ஆல்யாவிற்கு (alya manasa) வளைகாப்பு நடந்தது. கடவுளின் அருளால் இது நடந்ததாக ஆல்யாவிற்கு வளைகாப்பு வீடியோ, புகைப்படங்களை சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிறக்கும் குழந்தை நல்ல உள்ளத்தில் நல்ல திறமையாக பிறக்கவேண்டும் என்று அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கவேண்டிய நடிகை ஆலியா மானசா (alya manasa) பெரும் சோகத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இவர்களது திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
அப்படியே தாத்தா ரஜினி போலிருக்கும் யாத்ரா.. லைலா பசங்க இவ்ளோ க்யூட்டா.. பங்கமான லாஸ்லியா !
ஆகையால் நடிகை ஆலியாவின் தாயார் தன் மகள் மீது மிகவும் கோபம் கொண்டு பேசாமல் இருக்கிறாராம். ஆனால் தன் மகள் கர்ப்பமாக இருக்கும் இந்த சூழ்நிலையிலும் பேசாமல் இருப்பது ஆல்யா மானசாவிற்கு பெரும் சோகத்தை உண்டாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வளைகாப்பு நிகழ்ச்சியிலும் அவரது குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. நடிகை ஆலியாவிற்கு (alya manasa) தனக்கு குழந்தை பிறந்தவுடன் முதலில் அதை தன் தாயாரிடம் தான் கொடுக்க வேண்டும் என்பது ஆசையாம்.
ஆகையால் அவர்கள் விரைவில் தங்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியில் பங்கு கொள்ளவார் என்பது தனக்கு நம்பிக்கை இருப்பதாக சஞ்சீவ் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் ஷிவனை பிரிகிறாரா நயன்தாரா? விருதுவிழாவில் உறவு முறிந்தது பற்றி மறைமுக விளக்கம்?
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian