
ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் ஆல்யா மானசா. அதில் உடன் ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதலித்த ஆல்யா (alya) நீண்ட கால காதலுக்கு பின்னர் தற்போதுதான் திருமணம் செய்து கொண்டார்.
கடந்த மே மாதம் ரகசியமாக இவருக்கும் சஞ்சீவிற்கும் காதல் திருமணம் நடந்தது. அதன் பின்னர் ஆல்யா வீட்டில் சம்மதம் கிடைக்காததால் சஞ்சீவ் வீட்டினர் முன்னிலையில் மீண்டும் திருமணம் நடத்தி இருக்கின்றனர் அதுவும் போதாது என்பதால் உடன் நடிக்கும் சக நடிகர்களுக்காக பிரம்மாண்டமான ரிசப்ஷன் ஒன்றையும் இந்த ஜோடி சமீபத்தில்தான் முடித்திருக்கிறது.
ராஜா ராணி சீரியலுக்கு பின்னர்இந்த ஜோடி ஒன்றாக நடிக்காமல் தனி தனியாக நடிக்க இருக்கிறார்கள். முதலாவதாக காற்றின் மொழி எனும் சீரியலில் சஞ்சீவ் நாயகனாக நடிக்க இருக்கிறார்.
இதற்கிடையில் திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய புகைப்படங்களை ஆல்யா இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார். புகைப்படம் எடுத்த கோணங்களை பார்த்தால் சஞ்சீவ் எடுத்திருப்பார் எனத் தோன்றுகிறது.
அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
ஆல்யா வீட்டுல பேசிப் பார்த்தோம்.. ஒத்துக்கல..இப்போ ஆல்யா எங்க வீட்டுலதான் இருக்கா -சஞ்சீவ்
உங்கள் காதல் ஜென்ம ஜென்மங்களாகத் தொடரும் ஆத்ம பந்தம் என்பதை எப்படி கண்டுபிடிப்பது ?
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்
Read More From Entertainment
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian