
கமலஹாசனின் இளையமகள் அக்ஷரா ஹாசன் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் நடிகர் சினிமாவிற்கு நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இணைந்து நடிக்கும் அக்னிச் சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அக்ஷரா ஹாசனின் (akshara) ‘கேரக்டர் இண்ட்ரோ’ போஸ்டர் வெளியாகியுள்ளது.
‘அம்மா கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இந்த படத்தை மூடர் கூடம் நவீன் இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் பிரகாஷ் ராஜ், நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கப்பல், ஒரு கன்னியும் மூன்று களவாணியும், என்கிட்ட மோதாதே, இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு, மூடர் கூடம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த நடராஜன் சங்கரன் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.
மேலும் படிக்க – கடற்கரை ஓரத்தில் கோட்டையில் திருமணம் : இரண்டாவது திருமணம் குறித்து பேசிய நடிகை அதிதி!
அக்னிச் சிறகுகள் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கமல்ஹாசன் வெளியிட்டார். நீண்ட காலமாக இப்படம் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் கதாபாத்திரம்களின் பார்வைகளை ஒவ்வொன்றாக படக்குழு வெளியிட்டு வருகிறது. படத்தின் இயக்குநர் நவீன் முதலில் கதாநாயகன் விஜய் ஆண்டனியின் கேரக்டர் இண்ட்ரோ போஸ்டரை வெளியிட்டிருந்தார்.
அந்தப் போஸ்டரில் நீளமான முடி, இறுக்கமான முகத்துடன் கைகளில் கிளவுஸ் மற்றும் ஜாக்கெட் அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் விஜய் ஆண்டனி காணப்படுகிறார். இந்நிலையில் அக்ஷரா ஹாசனின் (akshara) கேரக்டர் இண்ட்ரோ போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
கைகளில் பொம்மை ஒன்றை வைத்துக் கொண்டு, குளிர் பிரதேசத்தில் பயன்படுத்தும் உடைகளை அணிந்து அப்பாவியான முக பாவனையுடன் அக்ஷரா தோற்றமளிக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க – காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா … வைரலாகும் புகைப்படங்கள்!
விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அக்ஷரா ஹாசன் (akshara) இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கெட்டப்பில் இருக்கிறார். ஹிப்பி லுக்கில் அக்ஷராவின் தோற்றம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து அருண் விஜய் உள்ளிட்டோரின் கதாபாத்திரத்தை அடுத்தடுத்து படக்குழு வெளியிடவுள்ளது.
மேலும் வெகு விரைவில் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தா, கஜகஸ்தான் மற்றும் ரஷ்யாவில் நடைபெற்றது.
தற்போது படத்தின் இரண்டாவது ஷெடியூல் ஷூட்டிங் ஐரோப்பா நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கஜகஸ்தானில் படமாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் ‘அக்னிச் சிறகுகள்’ என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இயக்குனர் நவீன் வித்தியாசமான முறையில் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அக்னிச் சிறகுகள்’ படத்தின் இந்த ப்ரமோஷன் யுக்தி அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனிடையே இயக்குநர் நவீன் இயக்கி நடித்துள்ள அலாவுதீனின் அற்புத கேமிரா திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க – சீக்கிரமே டும் டும் டும் ! காதலரை மணக்கவிருக்கும் நிக்கி கல்ராணி !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian