Lifestyle

திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்

Mohana Priya  |  Mar 26, 2019
திருமணமான ஆண்களை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகைகள்

சினிமா துறையில் மிகவும் கொடிகட்டி பறந்த நடிகைகள் தங்கள் சொந்த வாழ்க்கையிலும் ஜெயித்தார்களா என்பதை தான் பார்க்கப்போகிறோம். உண்மை என்னவெனில் கட்டாயம் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அவர்கள் ஜொலிக்கத்தான் செய்தார்கள். ஆனால் முதலாவதாக அவர்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. காரணம் என்ன என்று யாரும் அந்த ரகசியத்தை சொன்னதில்லை. இரண்டாவதாக காதலித்து திருமணம்(married) செய்து கொண்ட வாழ்க்கை தான் நீடித்த நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்தது. இதில் ஒன்றும் தவறில்லை என்றாலும் நம்ம நடிகைகள் காதலித்த கதாநாயகர்களுக்கும் இது இரண்டாம் திருமணம்(married) தான் என்பது கூடுதல் தகவல்கள்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே திருமணம்(married) ஆனவர்களை தான் காதலித்து திருமணம்(married) செய்துக்கொண்டனர்.

சவுந்தர்யா
தற்போது பிரமாண்டமாக அனைவரையும் ஆச்சரியப்படும் படியாக நடைபெற்ற சவுந்தர்யா திருமணம்(married) இரண்டாம் கல்யாணம் தான். முதல் திருமணம்(married) சந்தோஷமாக கைகூடி வராத நிலையில் இரண்டாவதாக வணங்கா முடியின் மகனும் நடிகருமான தொழிலதிபருமான விஷாகனை திருமணம் செய்து கொண்டார். அனைவரும் ஆச்சரியப்படும் படியாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த இவர்களது திருமணத்தை(married) பிரமாண்டமாக நடத்தி வைத்தார். சவுந்தர்யாவிற்கு முதல் திருமணத்தின்(married) மூலம் ஒரு மகன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ராதிகா
ராதிகா சரத்குமார் என்று சொன்னால் தான் எல்லாருக்கும் நன்கு புரியும். அந்த அளவிற்கு தற்போது இவர்கள் இருவரும் இணைந்து விட்டனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருமணம்(married) ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகாவிற்கு இதற்கு முன்னர் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளது. அதன் மூலம் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இரண்டு திருமணமும்(married) கைகூடி வராத நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சரத்குமாரை திருமணம்(married) செய்துக் கொண்டார். அதன் மூலம் தற்போது இவர்களுக்கு ஒரு பையன் உள்ளார்.

அனன்னியா
தமிழக சினிமா மட்டுமின்றி ஒரு காலத்தில் கேரள சினிமாவையும் அதிரடியாக கலக்கிக் கொண்டிருந்தவர் அனன்னியா. நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுகமான சில நாட்களிலேயே அனைவரின் கனவு கன்னியாக உருவெடுத்துவிட்டார். இவர் ரசிகர்களுக்கு கொடுத்த மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தி இவரது திருமணம்(married) தான். இவரது திருமணத்தில் பெற்றோர் உட்பட யாருக்கும் சம்மதம் இல்லை என உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகின. ஏனென்றால் இவர் திருமணம்(married) செய்துக்கொண்ட நபர் ஏற்கனவே திருமணம் ஆனவர். ஆனால் அனனியாவிற்கு இது தான் முதல் திருமணம். தனது சுட்டி தனத்தாலும் குழந்தை தனமான நடிப்பாலும் அனைவரையும் வெகுவாக கவர்ந்தவர். தனது ரசிகரான ஆஞ்சினேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிறிது காலம் படத்தில் பிசியாக இருந்த அனன்னியா தற்போது சினிமா பக்கம் அவ்வப்போது தலை காட்டி வருகின்றார்.

ஸ்ரீதேவி
சினிமா உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் என்றே சொல்லாம். தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியா முழுவதிலும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தவர் ஸ்ரீதேவி. இவரது மறைவு அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நான்கு மொழிகளில் தனக்கென தன்னிகற்ற ரசிகர்களை கொண்டிருந்தார். இவரது முதல் காதல் திருமணமும்(married) கைகொடுக்காத நிலையில் இரண்டாவதாக வட இந்தியாவை சேர்ந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் ஸ்ரீ தேவி ஏற்றுக்கொள்ளாத கபூர் குடும்பம் போக போக ஸ்ரீதேவியின் குணத்தை பார்த்து ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி தற்போது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடித்த முதல் திரைப்படம் நன்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு துபாயில் யாரும் எதிர்பாராத விதமாக ஹோட்டலில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவிற்கு திரை துறை நண்பர்கள் மட்டும் இன்றி அனைத்து துறையை சார்ந்த நண்பர்களும் கலந்து கொண்டனர். ராஜ மறியாதையுடன் இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழ் நாட்டின் செல்லமாக மயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீதேவி மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலே சொன்ன நடிகைகள் அனைவரும் இன்றளவும் தனக்கென ரசிகர்களை கொண்டு நீங்கா இடம் பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது வாழ்க்கை சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்.

 POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo

Read More From Lifestyle