Celebrity Life

பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த நடிகை நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு!

Swathi Subramanian  |  Dec 11, 2019
பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த நடிகை நயன்தாரா.. கட்சியில் சேர அழைப்பு!

தமிழகத்தின் முன்னணி நடிகையாக இன்றும் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போதைய திரையுலகின் மிகவும் பிசியான நடிகையான இவர், ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் `மூக்குத்தி அம்மன்’ என்கிற ஒரு பக்தி படத்தில் அம்மனாக நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பகவதி அம்மன் கோயிலில் ரகசிய பூஜையுடன் தொடங்கியது. இதற்காக வெளிநாட்டில் இருந்த நடிகை நயன்தாரா (nayanthara) தமிழகம் திரும்பினார். கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள பகவதி அம்மன் கோயிலுக்கு, காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று வழிபாடு நடத்தினார். 

twitter

அங்கே விக்னேஷ் சிவன்மற்றும்நயன்தாராஇருவருக்கும்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி,பகவதி அம்மன் சன்னதி,தர்மசாஸ்தா சன்னதி,சூரிய பகவான் சன்னதியில் சாமிகளை பக்தியுடன் வழிபட்டனர். 

மேலும் படிக்க – காமெடி நடிகர் சதீஷ் – சிந்து திருமண வரவேற்பு…நேரில் சென்று வாழ்த்திய முக்கிய பிரபலங்கள்!

இதனை தொடர்ந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா முருகனை தரிசித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. 

மேலும் அப்போது நயன்தாராவை எதேச்சையாக சந்தித்த முன்னாள் எம்.பியும் பி.ஜே.பி தலைவர்களுள் ஒருவருமான நரசிம்மன், பி.ஜே.பியில் இணைய நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக தகவல் பரவியுள்ளது

twitter

இதுகுறித்து பேசிய நரசிம்மன், திருசெந்தூரில் நயன்தாராவும், நானும் எதேச்சையாகத்தான் சந்தித்துக்கொண்டோம். அப்போது நீங்க நம்ம கட்சியில இணைய வேண்டும். உங்களை மாதிரி நட்சத்திரப் பிரமுகர்கள் நல்ல விஷயங்களைப் பேசினால், அது சாமான்ய மக்கள் வரை சென்றடையும். 

பி.ஜே.பி கட்சிக்கு வாங்க என்று அழைப்பு விடுத்தேன். சிரிப்பை மட்டும் பதிலாக அளித்துவிட்டு காலம் வரும் போது இதுகுறித்து சிந்திக்கிறேன் என நயன்தாரா (nayanthara) விடைபெற்றுக்கொண்டார் என விளக்கமளித்துள்ளார். 

மேலும் படிக்க – ரஜினிகாந்தின் 168வது படத்தில் இணைந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக பாஜகவில் தற்போது வரிசையாக பிரபலங்கள் இணைந்த வண்ணம் இருக்கிறார்கள். சமீபத்தில் பி.ஜே.பி தேசிய செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் நடிகை நமீதா, ராதாரவி ஆகியோர் அண்மையில் பி.ஜே.பியில் இணைந்தனர். 

twitter

இந்நிலையில் இந்த எதேச்சையான சந்திப்பு மூலம் தற்போது நடிகை நயன்தாராவுக்கும் கட்சியில் இணைய அழைப்பு விடுத்திருக்கிறது பி.ஜே.பி. இதற்கு நயன்தாரா வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்காததால் அவர் அரசியலில் அடி எடுத்து வைக்க வாய்ப்புள்ளது.  

கடந்த வாரம்  இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றவர்களை ஹைதராபாத் போலீஸ் என்கவுன்டர் செய்திருந்ததை நயன்தாரா வரவேற்றிருந்தார். நாட்டில் பெண்கள் பாதுகாப்புக்கு உறுதியளிக்கும் வகையில் சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தார். 

இந்நிலையில் பிஜேபி கட்சியில் நயன்தாரா இணைவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நயன்தாரா சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். தொடர்ந்து இந்து கோவில்களுக்கு சென்று வழிபட்டார். 

twitter

அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு தரையில் உட்கார்ந்து பக்தர்களோடு உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் இந்து சமயத்தில் தீராத காதல் கொண்ட நயன்தாரா (nayanthara) பாஜகவுடன் கைகோர்த்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. 

கோலிவுட் திரையுலகில் இருந்து பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் நயன்தாரா அரசியலுக்கு வருவாரா? அப்படியே வந்தாலும் பாஜகவில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!. 

மேலும் படிக்க – சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த காதல் கதை-தேசங்களைத் தாண்டிய காதல்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life